சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

03 February 2010

இது ஜுஜுபி மேட்டரு..!














இன்னிக்கு கள்ள நோட்டு அடிக்கறது..
சே.. கள்ள நோட்டை கண்டுபிடிக்கறது
எப்படின்னு சொல்லி தர போறேன்..

கள்ள
நோட்டை கண்டுபிடிக்க
பல வழிகள் இருக்கு..,

ஆனா., இப்ப நான் சொல்லபோற
வழிதான் ரொம்ப Easy
-யான வழி.
Machine அது., இதெல்லாம் எதுவும்
வேணாம்..

ஆனா., இந்த Technique
இந்திய ரூபாய்க்கு
மட்டும் தான் Workout -ஆகும்.
வெளிநாட்டு நண்பர்கள் மன்னிக்க..

சரி வாங்க Trainning -க்கு போகலாம்.,

* 5 ரூபாயோ ., 1000 ரூபாயோ ஏதோ ஒன்னு
எடுத்துக்குங்க..

* அதை நாலா மடிச்சிக்குங்க..,

* கீழே வெச்சி நோட்டு மேல
ரெண்டு குத்து குத்துங்க..,

* திருப்பி வெச்சி அதே மாதிரி
அந்த பக்கமும் ரெண்டு குத்து குத்துங்க..,

* போதும்., இப்ப நோட்டை எடுத்து
பிரிச்சி பாருங்க..,

* காந்தி தாத்தா கண்ணாடி
உடைஞ்சி
இருக்கா..? - அப்ப அது கள்ள நோட்டு..

* உடையலையா..? - சந்தோஷம்.,
அது நல்ல நோட்டு தான்.

டிஸ்கி : இதே மாதிரி " கறுப்பு பணத்தை "
கண்டுபிடிக்கவும் ஒரு Simple Technique
இருக்கு.. அதை இன்னொரு நாள்.,
இன்னொரு பதிவுல சொல்லி தர்றேன்.....!

( நாங்கல்லாம் ஊருக்குள்ள பல பேருக்கு
Idea சொல்லுறவங்க...! )
.
.

12 Comments:

settaikkaran said...

இப்படி எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க? உங்க ஐடியாவைக் கேட்டு கண்ணாடி குத்தி கையெல்லாம் ரத்தம். பேண்டேஜ் போட ஆஸ்பத்திரிக்குப் போயிட்டிருக்கேன்.

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப புதுசா இல்ல இருக்கு.

இன்னும் நிறைய சொல்லுங்க.

Keerthi Kumar said...

இது எல்லா நாட்டு நோட்டுக்கும் பொருந்தும். தலைவர்களோட பல்லு ஓடைந்திருந்தால் நல்ல நோட்டு.... இல்லையேல் கள்ள நோட்டு.

நம்ப பல்லு உடைய போகுது... பார்த்துக்குங்க

Unknown said...

அப்படியே பணத்த பாக்கெட்ல வச்சுகிட்டு வாஷிங்மெஷின்ல உக்காந்துகுங்க. ஒரு தடவை வாஷ் பண்ணீனா கள்ள நோட்டும் நல்ல நோட்டாகிடும்

Anonymous said...

sellam.... enga irunthupaa varuthu..

from....kidny...

Anonymous said...

ada....unmaithaappaaa....

ஹரீகா said...

ஐயோடா என்னமோ எதோ வென்று விழுந்தடித்துக்கொண்டு படித்தால், பதட்டத்தில் என் கண் கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கியது தான் நஷ்டம் ஹும்

அன்புடன்
ஹரிகா

வெங்கட் said...

Harika..,
எதுக்கு இவ்ளோ பதட்டம்..?
கண்ணாடி வேற உடைஞ்சிட்டது
பாருங்க..!
அதான் தலைப்புலயே சொல்லி
இருக்கேனே
" இது ஜுஜுபி மேட்டர்னு..! "

Karthick ( biopen) said...

இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க ?

வெங்கட் said...

கார்த்திக்..,
இப்போதைக்கு நான் மட்டும் தானுங்க..
இன்னோருத்தர் இருக்காரு..,
ஆனா அவரு Blog எதுவும் எழுதறது
இல்லீங்க..

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

ஜூஜூபி அருமை - நான் குத்துன குத்துலே - கண்ணாடி மட்டும் உடையலே - ஆனா நோட்டு சுக்குநூறா ஆயிடுச்சி

வி.வி.சி

வெங்கட் said...

சீனா சார்..,
அட கடவுளே..
கள்ள நோட்டை கண்டுபிடிக்க
ஐடியா குடுத்தா..,
ஏன் எல்லோரும் இப்படி
பண்றீங்க..?
கைய கிழிச்சிக்கறீங்க..,
கண்ணாடியை உடைச்சிக்கறீங்க..,
இப்போ நோட்டே கிழிஞ்சி போச்சி..