24 July 2014
தி லிட்டில் மாஸ்டர்...!!!!
என் சின்ன பையன் கோகுல் ( 2nd Std )
ஸ்கூல்ல இருந்து வந்ததும் சின்சியரா
ஹோம் வொர்க் எடுத்து வெச்சி எழுத
ஆரம்பிச்சிடுவான்...
ஆனா பெரியவன் சூர்யா ( 7th Std )
அவ்ளோ லேசுல உக்கார மாட்டான்..
அங்கே போவான்.. இங்கே வருவான்..,
பேனாவை எடுப்பான்., பென்சிலை சீவுவான்..
7 மணிக்கு அப்புறம் தான் மெதுவா
ஆரம்பிப்பான்...
அதனால ஒரு ஐடியா பண்ணினேன்...
ரெண்டு பேரையும் கூப்பிட்டேன்...
" கோகுல்.. இனிமே நீ தான் அண்ணனுக்கு
ஹோம் வொர்க் மாஸ்டர்...!! "
" சூர்யா.. இனிமே நீ தம்பி சொல்றபடி தான்
கேக்கணும்.. சரியா..?! "
ரெண்டு பேரும் தலையை தலையை ஆட்டினானுங்க..
அப்படியே...
" நீ சொல்ற பேச்சை அண்ணன் கேக்கலன்னா
உடனே எனக்கு ஒரு போன் பண்ணுடா கோகுல்..
வந்து கவனிச்சிக்கறேனு " ஒரு எக்ஸ்ட்ரா பிட்டு
போட்டுட்டு வந்தேன்...
ஒரு 10 நிமிஷம் ஆனதும்..
வீட்ல இருந்து கால் வந்தது..
" அப்பா.. அண்ணன் நான் சொல்ற பேச்சை
கேக்க மாட்டேங்குறான்பா.. "
ஆஹா ஆரம்பிச்சிட்டானுங்களா...
" சரி.. போனை அண்ணன்கிட்ட குடு..!! "
" ஹலோ அப்பா... "
" சூர்யா.. நான்தான் அவன் சொல்றபடி கேளுனு
சொல்லிட்டு வந்தேன்ல.. "
" அவன் என்ன சொன்னான் தெரியுமாப்பா..?! "
" என்னடா சொன்னான்..?! "
" அவனோட ஹோம் வொர்க்கை எல்லாம்
என்னை எழுதி குடுக்க சொல்றான்பா..!! "
# அடங்கொன்னியா
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
ஹா... ஹா... சரிதான்...!
அவன் கேட்டதுல என்ன தப்பு. ? அண்ணனுக்கு தம்பியோட ஹோம் வொர்க் பண்ணத் தெரியுமில்ல.. அதனாலத்தான் அப்படி கேட்டான். தப்பு உங்கமேலதான், நீங்க அண்ணன் சொல்றபடி தம்பி கேக்கனும்னு சொல்லிருந்தா, அண்ணன், தம்பி கிட்ட தன்னோட ஹோம் வொர்க்கை செய்யச் ஆர்டர் பண்ணிருக்க மாட்டானே.. (தம்பி, அண்ணனோட சிலபஸ் படிச்சிருக்க மாட்டேனே..!)
thalaiva unga master plan ippidi sodapidiche
Post a Comment