டிஸ்கி : என் மகன் 1st Std படிக்கும் போது
ஸ்கூல் சுதந்திர தின விழாவில் பேசியது...
தலைப்பு : " நான் விரும்பும் தலைவர்.. "
நான் விரும்பும் தலைவர்..
அவர் குழந்தைகளின் ராஜா.,
இந்தியாவில் பூத்த ரோஜா..
அவர் தான் நம்ம நேரு மாமா...
எல்லோரும் பணக்காரர்களாக
பிறப்பதில்லை..,
எல்லா பணக்காரங்களும்
நேருவை போல இருப்பதில்லை..
நேரு லண்டனில் படித்தவர்.,
அவர் நெனச்சிருந்தா..
வக்கீல் தொழில் செஞ்சிகிட்டு
வசதியா இருந்து இருக்கலாம்..
ஆனா....
அவர் நம்ம நாட்டு விடுதலைக்காக
கஷ்டப்பட்டும் போராடினார்.,
இஷ்டப்பட்டும் போராடினார்..
அரண்மனை அறையிலே
இருக்க வேண்டியவர்
அகமத் சிறையிலே இருந்தார்..
மொத்தம் 3262 நாள் சிறையிலே
கஷ்டப்பட்டார்.
கத்திக்கு பயப்படாத இங்கிலீஷ்காரன்
அவர் புத்திக்கு பயப்பட்டான்...
சிங்கத்துக்கே தண்ணி காட்ன
சிறுத்தைக் குட்டி நம்ம நேரு..
இந்தியா விடுதலை அடைந்ததும்
அவர் பிரதமர் ஆனார்..
இந்திய நாடு வளம் பெறவும்.,
இந்திய மக்கள் நலம் பெறவும்
பல நல்ல திட்டங்கள் போட்டார்..
A.C-ல தூங்கறவன் மட்டுமில்ல
ஏழை மாணவனும் படிக்கணும்னு நினைச்சார்..
அணைக்கட்டுகளே புதிய கோவில்கள்னு
சொன்னார்..
தண்ணி இல்லாம., கரண்ட் இல்லாம
நாம கஷ்டப்படக்கூடாதுன்னு அப்பவே
சிந்திச்சார்..
அவர் பிறந்த நாளை தான் நாம
" குழந்தைகள் தினமா " கொண்டாடுறோம்.
கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்றேன்..
பஞ்ச் டயலாக் எல்லாம் கடைசில தான்
சொல்லணும்..
" நேரு மாமாவோட சட்டையும் வெள்ளை.,
அவர் மனசும் வெள்ளை.,
இதுக்கு மேல நான் என்ன சொல்ல....!! "
இரு கை கூப்பினால் வணக்கமாச்சு.,
நான் இருக்கைக்கு செல்கிறேன் நேரமாச்சு..
நன்றி..!!
டிஸ்கி : இன்னும் சில பேச்சுப்போட்டிகள்...
.
.
Tweet
4 Comments:
அருமை...
உங்கள் குழந்தைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
நல்ல தொகுப்பு கோர்வை!
thank u for your posts. really i don't know this news.i more expert from u
// என் மகன் 1st Std படிக்கும் போது //
என்ன உங்க பையனே ஒன்னாம் வகுப்பு படிச்சி முடிச்சிட்டாரா அப்ப நீஙக...
Post a Comment