சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

09 July 2014

ஐ கேன் டாக் இன் இங்கிலீஷ், ஐ கேன் வாக் இன் இங்கிலீஷ்..!!


10th Std இங்கிலீஸ் கிளாஸ்.. 

இங்கிலீஸ் சார் நம்ம மங்குனி அமைச்சரை 
பாத்து... 

" ஏய் மங்கு.. English Book எடுத்துட்டு வா..

" இந்தாங்க சார்.. "

Book-ஐ பார்த்து., சார் ஷாக் ஆகிறார்..

" என்ன்னா இது.. இங்கிலீஸ் புக் கேட்டா.. 
தமிழ் புக் கொண்டு வர்ற..? "

" சாரி சார்.. நான் அப்பவே நினைச்சேன் 
என்னடா இது இங்கிலீஸ் புக் மேல தமிழ்னு 
எழுதி இருக்கேன்னு..?! "

" என்னடா உளர்ற..? "

" வெளிச்சம் கம்மியா இருந்ததால கலர் சரியா 
தெரியல சார்... "

" என்ன கலரா..? "

" ஆமா சார்.. இங்கிலீஸ் புக் புளு கலர்ல 
இருக்கும்.. தமிழ் புக் பச்சை கலர்ல இருக்கும்.. "

" ஏன்டா.. அப்ப இவ்ளோ நாளும் கலரை 
வெச்சு தான் எந்த புக்னு அடையாளம் 
கண்டுபிடிச்சிட்டு இருந்தியா..? படிக்க எல்லாம் 
தெரியாதா..? "

" ஹி., ஹி., ஹி... "

" எழுத படிக்க தெரியாம எப்படிடா 10th வரை 
வந்தே..? "

மங்குனி ( சற்று கோபமாக ) 

" யாருக்கு சார் எழுத படிக்க தெரியாது.. 
வேணுமனா மங்குனிங்கிற என் பெயரை 
Spelling Mistake இல்லாம எழுதி காட்டடுமா..?! "

" எங்கே எழுதி காட்டு பார்க்கலாம்.. "

மங்கு பேப்பரை எடுத்து எழுதுகிறார்,,,

" W A N G U

என்னடா இது " M " போடறதுக்கு பதிலா 
" W " போட்டு இருக்கே..?!

" அப்ப இது " எம் " இல்லியா..?!! "

இதுக்கு பிறகு இங்கிலீஸ் சார், அவர் 
வேலையை ராஜினாமா பண்ணிட்டு., 
கல்லு உடைக்க போயிட்டதா தகவல்..

.
.

2 Comments:

Madhavan Srinivasagopalan said...

அணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள்.

Unknown said...

வணக்கம்,சூரியனுக்கே டார்ச் அடிக்குறவரே!நலமா?///மங்குனி அமைச்சரை வைத்து நல்ல காமெடி!