சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

05 June 2014

ஸ்டார்ர்ர்ர்ர் ஹோட்டல்..!!!


சென்னை போயிருந்தப்ப எங்களுக்கு
எங்க சின்ன மாமனாரு ஒரு ட்ரீட்
குடுக்கறேன்னு சொல்லிட்டு.. எங்கே
வெச்சிக்கலாம்னு கேட்டாரு..

அதுக்கு நானும் , என் மச்சானும்..

எந்த ஹோட்டலா இருந்தாலும் ஓ.கே...
ஆனா அது 5 ஸ்டார் ஹோட்டலா இருந்தா
போதும்னு சொல்லிட்டோம்..

( பின்ன நாங்க எப்ப 5 ஸ்டார் ஹோட்டல்ல
டின்னர் சாப்பிடறது..?!! )

அப்புறம் ALOFT-னு ஒரு ஹோட்டல்க்கு
கூட்டிட்டு போனாரு.. போனப்புறம் தான்
தெரிஞ்சது எங்க சின்ன மாம்ஸ் எங்களை
நல்லா ஏமாத்திட்டார்னு..

அது 4 ஸ்டார் ஹோட்டலாம்ல...

ஒரு ஸ்டார் கம்மியா போச்சே.. வெளிநடப்பு
பண்ணிடலாமானு யோசிச்சிட்டு இருக்கும்
போதே... டின்னர் ஹால் வந்திடுச்சு..

சரினு பெரிய மனசு பண்ணி என்னை
கண்ட்ரோல் பண்ணிகிட்டு உக்காந்தேன்...

ஆர்டர் எடுக்க ஒருத்தர் வந்தாப்ல..

எங்க மாம்ஸு புதுசு புதுசா வாய்ல
நுழையாத பெயர் எல்லாம் சொல்லி
ஆர்டர் பண்ணிட்டு இருந்தாரு....

" ஏன் மாம்ஸு.. நீங்க ஆர்டர் பண்றதோட
பெயரே வாய்ல நுழையலயே... ஐட்டமாவது
வாய்ல நுழையுமா..?! "

" உங்களுக்கு பிடிச்சதை சொல்லிகோங்க
மாப்ள....! "

" எனக்கு என்ன மாம்ஸு.. ஒரு கொத்து புரோட்டாவும்,
சில்லி சிக்கனும்..!! "

ஆர்டர் எடுத்தவன் அப்படியே ஷாக் ஆகிட்டான்..

என்னை கேவலமா ஒரு பார்வை பாத்தான்...

" சார்..  கொத்து புரோட்டா எல்லாம் இங்கே
கிடைக்காது..!! "

" ஏன்..?!! "

" அதெல்லாம் லோக்கல் ஐட்டம் சார்..?!! "

" இந்த ஹோட்டல் மட்டும் என்ன லண்டன்லயா
இருக்குது.. இதுவும் லோக்கல் தானே...!! "

" அதில்ல., மெக்சிகன், இத்தாலியன் இந்த மாதிரி
Food தான் சார் இங்கே கிடைக்கும்..!! "

" என்னய்ய்யா இது.... என்னென்னமோ இருக்குனு
சொல்றீங்க... தமிழனோட " பாரம்பரிய உணவு "
புரோட்டா இல்லயா..??!! "

இப்ப அவன் மறுபடியும் ஷாக்..
மறுபடியும் அதே பார்வை....

( சே..!! இதுக்குதான் ஒரு ஸ்டார் கம்மியா
இருக்குற ஹோட்டல்க்கு எல்லாம் போக
கூடாதுனு சொல்றது.. )

எனக்கு ரொம்ப ஃபீலிங்கா போச்சு...

தமிழ்நாட்ல., அதுவும் சென்னையில இருக்குற
ஒரு ஹோட்டல்ல கொத்து புரோட்டா கிடைக்கல..

# என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்..?!!
.
.

7 Comments:

சேக்காளி said...

//# என்ன மாதிரி சமூகத்தில் வாங்கிறோம்..?//
?

Mohamed Faaique said...



கொத்துப் பரோட்டாக்கு வேற மாதிரி வாயில நுழையாத ஒரு பேரு வச்சிருப்பானுங்க சார்..

rajamelaiyur said...

அதானே ??? உடனே போராட்டம் நடத்த வேண்டியதுதானே ??( சாப்பிட்டுவிட்டு )

Angel said...

You should have asked for minced or grated /parathaas :) LOL :)

தனிமரம் said...

ஆஹா இதுதான் மாறும் சமுகத்தில் இருக்கின்றோம்!ஹீ

சாதாரணமானவள் said...

போன வேலை முடிஞ்சுதா இல்லையா?

Aba said...

கேட்டால் கிடைக்கும்... :)