சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

14 May 2014

ஒரே ஒரு நாள் லீவ் ப்ளீஸ்..!!!


அன்னிக்கு எங்க சித்தப்பா பொண்ணுக்கு
நிச்சயதார்த்தம்..

அப்ப என் பையன் 2nd Std படிச்சிட்டு இருந்தான்..

" அவன் லீவ் போட்டுக்கட்டும்..! " - இது நான்...

" பங்சன் 5 மணிக்கு தானே, கல்யாணத்துக்கு
மூணு நாள் லீவ் போட வேண்டி இருக்கும்..
அதனால அவன் ஸ்கூலுக்கு போகட்டும்..! "
- இது என் Wife...

அந்த ஸ்கூல்., லீவ் விஷயத்துல ரொம்ப ஸ்டிரிக்ட்.,
அதனால எதாவது சொல்வாங்களோனு
என் Wife யோசிச்சாங்க..

அப்ப எனக்கு டக்னு ஒரு ஐடியா...

" ஏன் நிர்மலா... உன் ப்ரெண்ட் பிரியா
அங்கே தானே டீச்சரா இருக்காங்க..
லீவ் போட்டுக்கலாமானு ஒரு வார்த்தை
கேட்டு பாரேன்..! "

" நீங்களே கேளுங்க..!! "

சரினு நானும் என் Wife மொபைல் எடுத்து
பிரியா நம்பர்க்கு டயல் பண்ணினேன்..

" ஹலோ.. பிரியாவா..? "

" ஆமா...! "

" நான் நிர்மலாவோட ஹஸ்பெண்ட் வெங்கட்
பேசறேன்..! "

" தெரியுது சொல்லுங்க சார்...!! "

" என் தங்கச்சிக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம்..
என் பையனை லீவ் போட்டுக்க சொல்லலாமா.? "

" வீட்ல விஷேசம்னா போட்டுக்க வேண்டியது
தானே..!! "

" அதுக்கில்ல... ஸ்கூல்ல எதாவது
சொல்லுவாங்களோனு.? "

" எத்தனாவது படிக்கறான்..?! "

" 2nd Std..!! "

" அப்ப தாராளமா போட்டுக்குங்க..!! "

" தேங்க்ஸ்ங்க...!! "

பையனை அன்னிக்கு லீவ் போட வெச்சாச்சு...!

அப்புறம் மதியம் 12 மணி வாக்குல
பட்டு சேலை ஜாக்கெட்க்கு டிசைன் போட
குடுத்து இருந்தாங்க... அதை வாங்கலாம்னு
டைலர் கடைக்கு போனோம்..!!!

அங்கே இருந்த லேடி டைலர்கிட்ட
என் Wife...

" ஜாக்கெட் ரெடி ஆகிடுச்சா...?! "

" ஆகிடுச்சுக்கா.. இந்தாங்க...!! "

வாங்கிட்டு பணம் குடுத்தோம்..

" அப்புறம்க்கா.. பையனை இன்னிக்கு
லீவ் போட வெச்சிட்டீங்களா..? "

எங்களுக்கு ஆச்சரியம்... உடனே நானு..

" ஆமா.. இந்த மேட்டர் உங்களுக்கு
எப்படி தெரியும்..?!! "

" காலைல எனக்கு தானே சார் போன்
பண்ணி ஐடியா கேட்டீங்க..?! "

" என்னாது... ஐடியா கேட்டேனா....?!!! "

( ஆஹா... Teacher பிரியாவுக்கு போனை
போடறதுக்கு பதிலா Tailor பிரியாவுக்கு
போனை போட்டுட்டோம் போல இருக்கே..!!! )

ஹி., ஹி., ஹி.. அது வந்து....!!!
ஹி., ஹி.., ஹி...
.
.

2 Comments:

விஸ்வநாத் said...

வயசுக் /வயசான கோளாறு, வேறென்னத்த சொல்ல;

”தளிர் சுரேஷ்” said...

ஹாஹா!