05 March 2014
ஆஹா.. என்ன ஒரு சிந்தனை..?!!!
இன்னிக்கு காலையில நான் தீவிரமான
சிந்தனையில இருந்தேன்..
அதை பாத்த என் Wife..
" என்னங்க யோசனை..? "
" புதுசா ஒரு பிஸினஸ் பண்ணலாம்னு..!! "
" அப்படியா சொல்லவே இல்ல.. "
" ஒரு 30 கோடி ரூபா Shortage-ஆ இருக்கு
அதான் எப்படி ரெடி பண்ணலாம்னு
யோசிச்சிட்டு இருக்கேன்..... "
" என்னாது 30 கோடியா..? ஆமா கோடிக்கு
எத்தனை சைபர்னு தெரியுமா உங்களுக்கு..? "
" ஹி., ஹி., ஹி... அதெல்லாம் ஆடிட்டர்
பாத்துப்பாரு.. "
" இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..
சரி.. ஆமா அவ்ளோ பணத்தை வெச்சி
ஐயா என்ன பிஸினஸ் பண்ண போறிங்க..? "
" புதுசா ஒரு பவுடர் கம்பெனி ஆரம்பிக்க
போறேன்..! "
" என்னாது பவுடர் கம்பெனியா..? "
" ம்ம்ம்... இப்ப... நம்ம வீட்ல என்ன
பவுடர் யூஸ் பண்றோம்..? "
" கோகுல் சாண்டால் "
" ஆங்... பாத்தியா நம்ம சின்ன பையன் பேர்ல
ஒரு பவுடர் கம்பெனி இருக்கு... ஆனா
பெரிய பையன் பெயர்ல ஒரு கம்பெனி
இல்லையேன்னு......... ஒரே பீலிங்கா இருக்கு... "
" அதுக்கு..? "
" யார்ட்லி மாதிரி சூப்பரா ஒரு கம்பெனி
ஆரம்பிச்சி., அதுக்கு " சூர்யா பவுடர் "-னு
பெயர் வைக்க போறேன்..! "
" நான் ஒரு ஐடியா சொல்லவா..? "
" சொல்லு..! "
" பேசாம அவன் பெயரை யார்ட்லின்னு
மாத்திடுங்க.. செலவு மிச்சம்..! "
" ?!?!!?!? "
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
சரியான யோசனை...! ஹா.... ஹா....
வெங்கட், நீங்க சூரியனுக்கு வேணா டார்ச் அடிக்கலாம்.ஆனா, உங்க ஃப்யூஸ் அவங்க கைல இருக்கிறதால அப்பப்ப புடுங்கிர்றாங்க. # யூ ஆர் பாவம் !
நல்ல யோசனை சொன்னாங்க! அதையே பாலோ பண்ணுங்க! ஹாஹா!
செம ஐடியா ....
கொறஞ்ச முதலீட்டுல ஊறுகா யாவரம் ஆரம்பிக்கணும்னு சொன்னா சரின்னு சொல்லியிருப்பாங்க.நீங்க கோகுலம்,கருவூலம் னு பெரிய அளவுல யோசிச்சா அவங்களும் அதுக்கு இணையா யார்ட்லி, ஜெட்லி,புரூஸ்லி ன்னு தான் யோசிப்பாங்க.யானைக்கு பானை இல்லன்னா பானைக்கு யானை சரியாப் போச்சுன்னு விட்டுருங்க.
இப்படியும் ஒரு யோசனையா!?.. சர்தான்!..
வலைச்சரத்தில் அறிமுகம் கண்டு வந்தேன்..
வாழ்க வளமுடன்!..
:)) வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் .மென்மேலும் சிறந்த
ஆக்கங்கள் தொடரட்டும் .
Post a Comment