27 March 2014
யானைப்பால்..!!?
நேத்து என் சிஷ்யபுள்ள சிவசங்கர்
போன் பண்ணியிருந்தான்...
" தல.. நாங்க ப்ரெண்ட்ஸா சேர்ந்து
புதுசா ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க
போறோம்..!! "
" குட்.. குட்... எப்படிடா இந்த ஐடியா
வந்துச்சு..? "
" எல்லாம் தங்களிடம் குடித்த
யானைப்பால் தான் குருவே..!! "
( ஹி., ஹி., ஹி...!!! என் சிஷ்யன்டா..!! )
" சரி.. என்ன திடீர்னு பதிப்பகம் எல்லாம்
ஆரம்பிக்கறீங்க..? "
" பதிவர்கள் நிறைய பேரு புத்தகம்
வெளியிடணும்னு ஆசைப்படறாங்க..
அவங்களுக்காக தான்...!! "
" ஏற்கனவே பதிவர்கள் ஒரு பதிப்பகம்
ஆரம்பிச்சி இருக்காங்களே.. தெரியாதா..?!! "
" தல... நீ அந்த அளவு எனக்கு யானைப்பால்
தரல..!! "
" டேய்.. அடங்குடா...!! "
" ஹி., ஹி., ஹி.. எங்க பிஸினஸ் டெவலப்
ஆகறதுக்கு உங்க சப்போர்ட் வேணும்..!! "
" புரியலையே..!!
" நீங்க எழுதின இலக்கியம், கவிதை,
மர்மக் கதை எல்லாம் ஒரு பிரிண்ட்
எடுத்து குடுங்க....!! "
" வாவ்.. சூப்பர்... அப்ப உங்க பதிப்பகத்தோட
முதல் புக் என்னோடதுதானா..?!! "
" இல்ல தல... அதை நான் ABHK பப்ளிகேஷன்ல
குடுத்து தான் போட போறேன்...!! "
" அதாரு..?!! "
" அவன் தான் தல எங்க எதிரி..!! அனேகமா
அதான் அவன் கடைசி புக்கா இருக்கும்..!! "
" அடேய்ய்....!! "
# யானைப்பால் ஓவரா போச்சோ...!?!
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
1 Comments:
ஹா... ஹா... ஆப்பு வைக்க வெளியிலிருந்து ஆள் தேவையில்லை...!
Post a Comment