13 March 2014
கூல்.., கூல்.., கூல்...!!
நேத்து என் ப்ரெண்ட் அருண் எனக்கு
போன் பண்ணி...
வீட்டுக்கு ஒரு ப்ரிட்ஜ் எடுக்கணும்டா
கூட வர்றியானு கேட்டான்..
மொதல்ல வரலைனு சொல்லிட்டேன்.
ஆனாலும் மனசு கேக்கலை... அப்பறம்
வர்றேன்னுட்டேன்..
கெளம்பறப்பவே 30,000 ரூபாயை என்கிட்ட
குடுத்து வெச்சிக்கோனு சொல்லிட்டான்..
போறப்ப...
" அருணு.. இப்ப நான் எதுக்கு தெரியுமா
உங்கூட வரேன்..?!! "
" பிரிட்ஜ் வாங்கி குடுக்க...!! "
" ஹி., ஹி., ஹி,, அதான் இல்ல.. இப்பவே
மணி 12 ஆச்சு... எப்படியும் பிரியாணி
வாங்கிக்குடுப்பேல்ல..!! "
" ஓ... அப்படியா..?! அது சரி... நான் உன்னை
எதுக்கு கூட்டிட்டு போறேன் தெரியுமா..? "
" எதுக்கு..? "
" எலெக்ஷன் வர்றதால வழில போலீஸ் செக்கிங்
இருக்காம்.. Cash கொண்டு போறவங்களை
பிடிக்கறாங்களாம்..?!! "
" அடப்பாவி...!!!?? "
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
'நல்ல' நண்பர்...! அவரை பிரியாணி பண்ணி விட வேண்டியது தான்...
நல்லா மாட்டி விடப்பார்க்கும் நண்பர்தான்! ஹாஹாஹா!
Please, close the door. Electricity is getting wasted..
Post a Comment