12 February 2014
ஒரு ஜீனியஸின் கஷ்டம்..!!
நேத்து நானும் , என் Wife-ம்
எங்க ஆன்டி வீட்டுக்கு போயிருந்தோம்...
நான் ஹால்ல உக்காந்து டி.வி
பாத்துகிட்டு இருந்தேன்...
எங்க ஆன்டிக்கு என் மேல பாசம்
அதிகம்...
நான் எப்ப போனாலும் முறுக்கு,
பிஸ்கட், பக்கோடா, ஸ்வீட்னு நிறைய
சாப்பிட குடுத்துடுவாங்க...
ஆனா இன்னிக்கு ஒன்னுமே வரலியா...
என்னடா இது.. வந்த வேலை வேஸ்டா
போயிடும் போல இருக்கேன்னு
நானே கிச்சனுக்கு போனேன்..
அப்ப எங்க ஆன்டி என் Wife-கிட்ட
முடி நிறைய கொட்டுதுன்னு புலம்பிகிட்டு
இருந்தாங்க..
நிறைய முடி இருக்கறவங்க பாப் கட்
பண்ணிக்கறாங்க...
கொஞ்சமா முடி இருக்கறவங்க
இந்துலேகா யூஸ் பண்றாங்க..
Funny Ladies..!!
உடனே நானு...
" இதுக்கு தான் ஆன்டி கெமிக்கல்
கலந்த ஷாம்பூ யூஸ் பண்ணக்கூடாதுன்னு
சொல்றது..!! "
" நான் ஹெர்பல் ஷாம்பூ தாண்டா
யூஸ் பண்றேன்..!! "
" எங்கே காட்டுங்க அதை நான் பாக்கறேன்..!! "
உள்ளே போனவங்க ஒரு ஷாம்பூ
பாட்டிலோட வந்தாங்க... அதை பாத்ததும்
எனக்கு திக்னு இருந்துச்சு...
" ஏன் ஆன்டி.. இதை யூஸ் பண்ணினா
அப்புறம் முடி கொட்டாம என்ன பண்ணும்..? "
" ஏன்டா..? இது நல்ல கம்பெனி தானே..?? "
" நல்ல கம்பெனி தான்.. ஆனா அவன் தான்
அதுலயே தெளிவா எழுதி இருக்கானே..
" Anti - Hairfall..!! "... அப்டின்னா...
ஆன்டியோட முடி கொட்டும்னு தானே
அர்த்தம்..!! "
இதை கேட்டதும் ரெண்டு பேரும்
என்னைய முறைக்க ஆரம்பிச்சிட்டாங்க..
சே.., இந்த உலகத்துல ஜீனியஸா
இருக்கறது ரொம்ப குஷ்டமப்பா...!!!
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
அமெரிக்காவுக்கே போய்டுங்க வெங்கட்
ஹா... ஹா... என்ன சொன்னாலும் புரிஞ்சிக்கிறதே இல்லை...!
Post a Comment