சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

09 October 2013

யார் அந்த போதி தர்மன்..?!!


டிஸ்கி : இது எதோ ஆராய்ச்சி கட்டுரை
போலன்னு நினைச்சி இங்கே வந்திருந்தீங்கன்னா...
சாரி... உங்களுக்காக நான் அனுதாபம் தான்
படமுடியும்..

பின்ன..

" சரவண பவன்ல சிக்கன் 65-ஆ கிடைக்கும்.?! "

ஒ.கே மேட்டர்க்கு போலாம்....

7-ஆம் அறிவு படம் ரிலீஸ் ஆகியிருந்த
சமயம்.. நான் தியேட்டர்ல உக்காந்து
படம் பாத்துட்டு இருக்கேன்..

போதிதர்மன்., DNA., பரம்பரை ஜீன்-னு
படம் ஓடிட்டு இருந்தது...

எனக்கோ தப்பிதவறி Zoology லேப்க்கு
எதுனா வந்துட்டோமோனு  ஒரு மாதிரி
பயமா இருந்துச்சு...

அப்பத்தான் அது நடந்தது.....

ஹி., ஹி., ஹி... ஒன்னுமில்ல...
Interval விட்டானுவ..

10 நிமிஷம் நிம்மதியா இருக்கலாம்..

சரி போர் அடிக்குதேனு என் மொபைலை
எடுத்து பாத்தேன்... ஒரு மிஸ்டு கால்
இருந்தது..

என் ப்ரண்டு மணிதான் கூப்பிட்டு இருந்தான்..
சரி அவனையாவது10 நிமிஷம் லந்து
பண்ணலாம்னு கூப்பிட்டேன்..

" ஹலோ.. மணி..! "

" சொல்லுடா.. "

" உனக்கு ஒரு ரகசியம் சொல்லவா.? "

" சொல்லு.. "

" போதிதர்மன் DNA-வோட என் DNA
99% ஒத்து போகுது.. "

" நிசமாவாடா...?!!!!! "

" ஆமாண்டா... ஆனா இந்த மேட்டரை
வெளில லீக் பண்ணிடாதே..!! "

" சொல்லமாட்டேனே... அப்புறம்
A.R முருகதாஸ் மாட்டிப்பாரு....! "

" ஏதுக்கு..?! "

" பின்ன.., போதிதர்மன் பெரிய அறிவாளின்னு
பொய் சொல்லி இருக்கார்ல.. அதுக்கு தான்..!! "

" அட நாயே...!!! "

7 Comments:

Umesh Srinivasan said...

உங்க நேர்மையப் பாராட்டுறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.... ஹா....

Anurag Choudhary said...

Please Activate the translator gadget, without which we are unable to understand your articles

சேக்காளி said...

//" அட நாயே''//
சைனாக்காரன் கிருமிகளை பரப்ப ஊசி போடுவானே அந்த நாயா?.

suthan said...

Boss ningaa ennum nallai varuvingal

Unknown said...

//
"என் ப்ரண்டு மணிதான் கூப்பிட்டு இருந்தான்..
சரி அவனையாவது10 நிமிஷம் லந்து
பண்ணலாம்னு கூப்பிட்டேன்.."
//

நிஜமாவா ??? :-P

உங்க Finishing அப்படி தெரியலியே பாஸ் :-)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_745.html) சென்று பார்க்கவும்... நன்றி...