தீபாவளி பர்சேஸ் போலாம்னு
ஒரு வாரமா என் Wife கேட்டுட்டே
இருந்தாங்க...
ஆனா.. நானு...
" வர்ற திங்கக்கிழமை
போலாம்..!! "
" ஏங்க தீபாவளி வாரம்...
கூட்டமா
இருக்கும்.. "
" ஆங்.. இங்கே தான்
சாதாரண
மக்களின் சிந்தனையும்.,
ஒரு
தொழிலதிபர் சிந்தனையும்
மாறுபடுது..!! "
" தொழில் அதிபரா..?
யாரு..? "
" ஹி., ஹி., ஹி...
நான் தான்...! "
" அடடா.. இந்த தொழில்
அதிபர்கள்
தொல்லை தாங்கலப்பா.. வர
வர
பஞ்சு மிட்டாய் விக்கிறவங்க
எல்லாம்... "
" ஸ்டாப்., ஸ்டாப்...!!
"
" சரி உங்க தொழில்
அதிபர் சிந்தனை
என்ன சொல்லுது..?!
"
" அதாவது... சன்டேவுக்கு
அப்புறம்
மன்டே....!!! "
" வாவ்.. வாவ்...
வாவ் இதை நீங்களே
கண்டுபிடிச்சீங்களா..?
எப்படி முடியுது
உங்களால..? "
" உஷ்... குறுக்க
குறுக்க பேசாகூடாது..
சொல்றதை கேளு..!!
"
" சரி சொல்லுங்க...!
"
" சன்டேலயே எல்லோரும்
பர்சேஸ்
வந்துட்டு போயிடுவாங்க..
அப்புறம்
மன்டேல கடை காத்து வாங்கும்..
"
என் இந்த ஐடியாவ கேட்டு
" உங்களுக்கு மட்டும்
எப்படிங்க இந்த
மாதிரி ஐடியா எல்லாம் தோணுது? "னு
மாதிரி ஐடியா எல்லாம் தோணுது? "னு
என் Wife அவங்க மனசுல நினைச்சது
எனக்கு வெளில கேட்டுச்சு....
ம்ம்ம்.. என்ன பண்றது..?
நானெல்லாம்
பொறந்ததுல இருந்தே அப்படி...!!
அப்புறம் ஒரு வழியா...
நேத்து தான்
" சென்னை சில்க்ஸ்
" போனோம்...
அங்கே என்னடான்னா...
செம, செம, செம கூட்டம்...
அதை பாத்துட்டு என்
Wife என்னை
கேவலமா ஒரு லுக் விட்டுட்டு...
" என்னமோ பெருசா கூட்டமே
இருக்காதுன்னு சொன்னீங்க...?
" இப்பத்தான் எனக்கு
ஒரு விஷயம்
புரிஞ்சது..!!! “
" என்ன..? "
“ ஹி., ஹி., ஹி...., சேலத்துல நிறைய
தொழில் அதிபர்கள் இருக்காங்கன்னு..."
" நான் கூட ' நீங்க ஒரு லூசு '-னு
புரிஞ்சிடுச்சோன்னு நெனைச்சேன்...!! “
" கிர்ர்ர்ர்ர்ர்.......!!
.
.
Tweet
1 Comments:
தொழில் அதிபர் என்றால் அவ்வளவு சீக்கிரம் புரிந்து விடுமா என்ன...? ஹிஹி...
இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...
Post a Comment