சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

08 July 2013

கஷ்டமர் கேர்...



புதுசா ஏர்செல் சிம் ஒண்ணு வாங்கினேன்..

வாங்கினதுல இருந்து 
" காலர் டியூன் ஆக்டிவேட் பண்றீங்களா..?., 
திரிஷா கூட டான்ஸ் ஆடறீங்களா.?, 
நமீதா கூட  டிபன் சாப்பிடறீங்களான்னு..? " 
ஒரே மெசேஜும்., காலுமா வந்துட்டே இருக்கு... 

கடுப்பாகி கஸ்டமர் கேர்க்கு போனை 
போட்டேன்...

ஏழு அழுத்து,  நாலு அழுத்து, எட்டு 
அழுத்துன்னு சொல்லிட்டே இருந்துச்சா.. 
நானும் அழுத்திட்டே இருந்தனா.. 

கடைசில ஜிம்பாப்வேக்கு லைன் போயிடுச்சி... 
எனக்கு ஆச்சரியமா இருந்தது.. 

(பின்ன நாலு ரூபா பேலன்ஸ்ல 
ஜிம்பாப்வேக்கு எல்லாமா லைன் போறது..?!!! )

மறுபடியும் 4 தடவை ட்ரை பண்ணினேன்..

அப்பாடா.. அஞ்சாவது தடவை கரெக்டா 
லைன் போச்சு...

அதை அட்டெண்ட் பண்ணினது " ரம்யா.. "
( ஹி., ஹி., ஹி.. நான் கேக்கலை
அவங்களே சொன்னாங்க.. )

விஷயத்தை சொன்னேன்...

" உங்களுக்கு ஒரு நம்பர் தர்றேன்
அதை கால் பண்ணி ' Do Not Disturb "-ல
ரிஜிஸ்டர் பண்ணுங்க சார்.. "

" அதெதுக்கு நான் பண்ணனும்..? "

" நீங்க தானே சார் டிஸ்டர்பென்ஸா
இருக்குன்னு சொன்னீங்க..! "

" ஆமா.. இருந்தாலும்........ "

" என்ன சார் யோசிக்கிறீங்க..? "

" இல்ல நான் எப்ப ' என்னை டிஸ்டர்ப்
பண்ணுங்க ' -னு உங்க கம்பெனிக்கு
எழுதி குடுத்தேன்னு யோசிக்கிறேன்..! "

" ஹா., ஹா., ஹா.. அதெல்லாம் கம்பெனி
புரோசிஜர் சார்..! "

" என்னமோ போங்க..... "

" வேற எதாவது தகவல் தெரிஞ்சிக்கணுங்களா..? "

" ஆமா.. "

" கேளுங்க சார்..! "

" ஆமா ரம்யா.. உங்க போன் நம்பர் என்ன..? "

" 121.. சார்.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா..? " 

( பார்ரா... இவங்க நம்பர் தர மாட்டாங்களாம்.., 
ஆனா நம்ம நம்பரை மட்டும் ஊர் பூரா 
குடுத்து வெச்சிடுவாங்களாம்.. 
ரொம்ப வெவரம்..!!! ) 
.
.

8 Comments:

Umesh Srinivasan said...

உங்களுக்காச்சும் பரவாயில்ல, ஒடனே ரம்யா கெடச்சிட்டாங்க. இன்னும் பல பேர் லைன்லயே தொங்கிட்டு இருக்காங்க இணைப்பு கெடைக்காம. அருமையான தலைப்பு.

ராஜி said...

நீங்களும் ரொம்ப விவரமானவராச்சே?! எதாவது அந்த புள்ளைக்கிட்ட சொல்லிட்டு வரவேண்டியதுதானே!?

sathishsangkavi.blogspot.com said...

உங்களுக்கு எப்படிங்க உடனே லைன் கிடைச்சது...

வெங்கட் said...

@ Umaesh Srinivasan,

// உங்களுக்காச்சும் பரவாயில்ல, ஒடனே ரம்யா கெடச்சிட்டாங்க. //

லைன்லன்னு ஒரு வார்த்தை சேர்த்து
சொல்லுங்கப்பா... மீ பாவம்..

”தளிர் சுரேஷ்” said...

ரொம்பவே விவரமாத்தான் இருக்காங்க!

வெங்கட் said...

@ ராஜி.,

// எதாவது அந்த புள்ளைக்கிட்ட சொல்லிட்டு வரவேண்டியதுதானே!? //

நம்ம ப்ளாக் அட்ரஸ் குடுக்கலாம்னு
நினைச்சிட்டு இருக்கும்போதே லைனை
கட் பண்ணிட்டு எஸ் ஆகிடுச்சி...

ரொம்ப உஷாரா இருக்குதுபா..

வெங்கட் said...

@ சங்கவி.,

// உங்களுக்கு எப்படிங்க உடனே லைன் கிடைச்சது... //

உடனே எங்கேங்க கிடைச்சது..?
உலக நாடுகளுக்கு எல்லாம் கால் போய்
அப்புறம் கடைசியாதானே கிடைச்சது..

Angel said...

வருங்கால ஆசிய பிரதமர் வலைசரத்தில் உங்க ப்ளாக பார்க்க சொல்லி எனக்கு ஆர்டர் போட்டாங்க :) வந்தேன் படித்தேன் ரசித்தேன்

Angelin.