ரொம்ப நாள் கழிச்சி நேத்து தான்
என் ப்ரெண்ட் சங்கர் எனக்கு போன்
பண்ணியிருந்தான்..
" டேய் வெங்கி... என் Wife உன்னோட
ப்ளாக் ரெகுலரா படிப்பாங்க...,
அவங்க உன் Fan-டா...! "
" மச்சி... நீ என்னை கலாய்க்கிற மாதிரி
தெரியுது..! "
" சமத்து... கண்டுபிடிச்சிட்டியே..! "
" கிர்ர்ர்ர்..... சரி சரி., அதை விடு...
நீ எப்படி மச்சி இருக்கே..? "
" எனக்கென்ன... அமெரிக்கால வேலை.,
டாலர்ல சம்பளம்.. சந்தோஷமா இருக்கேன்..! "
" ஓ.. அப்படியா...? எங்கே உன் Wife Birthday
என்னிக்கு சொல்லு பார்க்கலாம்..? "
" என் Wife Birthday-ஆ...? அது எதுக்கு இப்ப..? "
" விஷயம் இருக்கு.. சொல்லு...! "
" அது.., அது வந்து.. ஆங்... நவம்பர் 22.. "
உடனே Background-ல் அவன் Wife குரல்
" ஏங்க.... என் Birthday ஆக்டோபர் 22..
அது கூட ஞாபகம் இல்லையா..?
போன் பேசிட்டு வாங்க.... அப்புறமா
இருக்கு உங்களுக்கு... "
" ஏன்டா...?? இதுவரைக்கும் நல்லாத்தானே
போயிட்டு இருந்துச்சு... "
" பொண்டாட்டி Birthday-ஐ ஞாபகம்
வெச்சிக்காதவனுக்கு ஆப்பு எப்பவும்
ரெடியா இருக்குனு இந்த உலகத்துக்கு
உணர்த்தவே யாம் இந்த திருவிளையாடலை
நடத்தினோம்.....! ஹி., ஹி., ஹி....!!! "
" டேய்ய்ய்ய்ய்... "
டிஸ்கி : இந்த போஸ்ட்டுக்கும் சிம்ரனுக்கும்
என்ன சம்பந்தம்னு யோசிக்கிறவங்களுக்கு...
காலேஜ் படிக்கும் போது வருஷம் தவறாம
April 4-ஆம் தேதி சங்கர் Class-ல எல்லோருக்கும்
சாக்லேட் குடுப்பான்.. ஏன்னா அன்னிக்கு தான்
நம்ம சிம்ரனுக்கு பர்த் டே..
( இதுக்கும் ரெண்டு அடி சேர்த்து வாங்கிக்கடா
மாப்ள... ஹி, ஹி., ஹி....! )
( ஹா., ஹா... மாட்னான்டா...!!! )
.
.
Tweet
2 Comments:
// நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு...!!! //
அத்தான...
அத்வானி ஏன் விலகிட்டாரு ?
imbuttu nallavaraaa neeenga???
Post a Comment