கையில 15,000 ரூபா இருக்கு
என்ன பண்ணலாம்..?
Fridge-ஐ மாத்திட்டு புதுசு வாங்கலாமா..?
TV-ல விளம்பரம் வர்ற அந்த
புது மாடல் Fridge கூட பாக்க
நல்லா தான் இருக்கு.,
கூடவே Offer-ல ஒரு குக்கர் வேற
தர்றாங்கலாம்..
சரி., நாளைக்கே அதை வாங்கிடலாம்..!
இப்படி சில பேர் டக்கு டக்னு முடிவு
எடுத்துடறாங்க.. இது ரொம்ப தப்பு..!
( ஆமா.., இதுல என்ன தப்பு இருக்கு..? )
" என்ன தப்பு இருக்கா...? சொல்றேன்
நோட் பண்ணிக்கோங்க...! "
1. 15,000 ரூபா இருக்குங்கறதுக்காக
அதை செலவு பண்ண நினைக்கிறது
முதல் தப்பு.
2. பழசுங்கறதுக்காக நல்லா இருக்குற
ஒரு பொருளை மாத்த நினைக்கிறது
ரெண்டாவது தப்பு.
3. புது Fridge வாங்கணும்னு முடிவு
பண்ணினதும்., உடனே வாங்கிடணும்னு
துடிக்கிறது மூணாவது தப்பு.
4. " எந்த Fridge நல்லா இருக்குன்னு..? "
தெரிஞ்சவங்க நாலு பேர்கிட்ட Opinion
கேக்காதது நாலாவது தப்பு.
5. Free-யா வருதேன்னு தேவையில்லாத
குக்கர்க்கு ஆசைப்படறது அஞ்சாவது தப்பு..!
6. Offer-ன்னு சொல்லி தரமில்லாத
Fridge-ஐ வாங்க நினைக்கிறது
ஆறாவது தப்பு..!
இப்படிக்கு..,
வீட்டில் சொல்ல முடியாததை எல்லாம்
தைரியமாக Blog-ல் சொல்லுவோர் சங்கம்..
சேலம் கிளை.
( அவ்வ்வ்வ்....!!! )
.
. Tweet
19 Comments:
//இப்படிக்கு..,
வீட்டில் சொல்ல முடியாததை எல்லாம்
தைரியமாக Blog-ல் சொல்லுவோர் சங்கம்..
சேலம் கிளை.///
ஹா ஹா... நானும் இம்புட்டு அட்வைஸ் பண்ணுனத பாக்கும் போது, என்னடா சாத்தான் வேதம் ஓதுதுன்னு பாத்தேன்...
அதான! ஆம்பிளைங்கெல்லாம் வீட்ல எங்க சொல்ல முடியுது?
#வொய் பிளட்? என்று கமண்டுபவர்கள் முதலில் தங்கள் ஆத்துக்காரம்மாவை மனதில் நினைத்துக்கொண்டு கமண்டவும்!!!!
முதல்ல நீங்க 15,000ருபாய் சம்பாதித்தே தப்பு....அப்புறம் ஏன் இந்த தப்புல்லாம் நடக்கபோவுது....!!!!!!!!!!!!
எனவே இனி சும்மாவே உக்கார்ந்து சோறு தின்போம்....
ஹா ஹா ஹா அம்மணினா அம்புட்டு பயம் இருக்கட்டும் இருக்கட்டும்
பதிவை விட... அந்த பதிவில இருக்குற படம்.. ஆஆ-வென்று போட்டிருக்கும் படம்... அதில இருக்கிற உள் குத்தை நினைச்சா ஹி ஹி ஹி!
unga dhairiyam yaarukkume varadhu boss
aama aadiyil adikkudhamma nu topic iruke adhukku single meaning matum dhaane :P
என்ன பண்ணலாம்னு கேக்கறதே தப்பு - மேடம் சொல்றத அப்படியே செய்ய வேண்டியது தானே !
படம் சூப்பர்...
வீட்டில முடியாததை ப்ளாக்ல சொல்ற அளவுக்கு தெகிரியம் வந்துடுச்சா...
ஆடியில
அடிக்குதம்மா...வா...
அடிக்கும் அடிக்கும்...சிஸ்டர் ப்ளிஸ் நோட் திஸ் பதிவு....
// கையில 15,000 ரூபா இருக்கு
என்ன பண்ணலாம்..? //
deposit in my SB account..
@ வெளங்காதவன்.,
// அதான! ஆம்பிளைங்கெல்லாம் வீட்ல
எங்க சொல்ல முடியுது? //
அதானே.. என்னா அடி..!!!!
@ நாய் நக்ஸ்.,
// முதல்ல நீங்க 15,000 ருபாய் சம்பாதித்தே
தப்பு.... அப்புறம் ஏன் இந்த தப்புல்லாம்
நடக்கபோவுது....!!!!!!!!!!!! //
ஹி., ஹி., ஹி... அது டெபாசிட் மெசூரிட்டி
ஆன பணம்.. ( ஐயோ.. நான் இங்கே
உளறிட்டு இருக்கேன் போல இருக்கே..! )
இனிய இல்லறத்துக்கு எளிய வழி :
இந்த ஆராய்ச்சி எல்லாம் மூட்டை கட்டிட்டு Give Money to Surya and sing
"சேத பணத்த சிக்கனமா செலவு பண்ண பத்திரமா
அம்மா கையில கொடுத்து போடு செல்லக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு "
@ வரலாற்று சுவடுகள்.,
// பதிவை விட... அந்த பதிவில இருக்குற படம்..
ஆஆ-வென்று போட்டிருக்கும் படம்... அதில
இருக்கிற உள் குத்தை நினைச்சா ஹி ஹி ஹி! //
ஆஹா.. பதிவுல இருக்குற சின்ன சின்ன
உள்குத்தை எல்லாம் புட்டு புட்டு வெச்சி
எனக்கு வெளிக்குத்து வாங்கி குடுத்துடுவாங்க
போல இருக்கே....
@ ஷம்ஹிதா
// unga dhairiyam yaarukkume varadhu boss //
இல்லையா பின்ன... வூட்டுக்காரம்மா
அவங்க அப்பா வீட்டுக்கு போயிட்டு
வர்ற சைக்கிள் கேப்ல இந்த பதிவை
போட்டோம்ல..!!
@ பொன்.செந்தில்.,
// வீட்டில முடியாததை ப்ளாக்ல சொல்ற
அளவுக்கு தெகிரியம் வந்துடுச்சா... //
இது கூட பொறுக்கலையாப்பா உங்களுக்கு..?
@ ரசிகன்.,
// அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு //
அதான் எனக்கும் பயமே...
நூறு Fridge வெச்சி நாங்க என்ன
பண்ண போறோம்..?!!
நல்ல சிந்தனைகள் ...
பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...
ஆடி மாச பட்ஜெட்ல எவ்வளவு துண்டு விழுந்துச்சுன்னு அடுத்த பதிவா போட்டுடுங்க
உண்மையான பதிவு
நன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment