சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

10 July 2012

ஒரு ஊர்ல, ஒரு கம்பியூட்டர் இஞ்ஜினியர்..!


நேத்து Evening என் கூட +2-ல படிச்ச
என் Friend கணேஷ் போன்
பண்ணியிருந்தான்..

" ஹலோ..! "

" டேய்.. நீ என்ன படிச்சி இருக்க..? "

எடுத்தவுடனே இப்படி ஒரு கேள்வியை
அவன் கேட்டதும் எனக்கு தூக்கி வாரி
போட்டது..,

( பொதுவா என் படிப்பு சம்பந்தமா
யாராச்சும் கேட்டா எனக்கு அப்படிதான்
ஆகும்...! ஹி., ஹி., ஹி.. )

" ஏன்டா.. என்ன விஷயம்..? "

" நீ மொதல்ல சொல்லு..! "

" நான் இந்த உலக இலக்கியம்.,
இந்திய இலக்கியம் எல்லாம்
படிச்சி இருக்கேன்..! "

" டேய்... போதும்.. நான் கேட்டது
அதில்ல. நீ காலேஜ்ல என்ன
டிகிரி படிச்ச..? "

" ஓ.. அதை கேக்கறியா..? நான் MCA
படிச்சி இருக்கேன்..! "

" அது கம்பியூட்டர் சம்பந்தமான படிப்பா..?! "

" ஆமா...! "

" டிகிரி வாங்கிட்டியா. இல்ல எதாச்சும்
அரியர் இருக்கா..? "

" ஹேய்... யாரை பாத்து... நான் தான்
MCA-ல காலேஜ் First..! "

" அப்ப உன் திறமையை Use பண்ணவேண்டிய
நேரம் வந்துடுச்சி மச்சி...! "

" நேரம் வந்துடிச்சா...? அப்படின்னா..."

( ஐய்யயோ... சாப்ட்வேர் எதாச்சும்
டெவலப் பண்ண சொல்லுவானோ..! )


( கொஞ்சம் ஓவராதான் போயிட்டோமோ..!! ) 

" என் பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல.... " 

" ஸ்கூல்ல..... " 

" தெர்மோகோல்ல கம்பியூட்டர் 
பண்ணிட்டு வர சொல்லி இருக்காங்க... 
கொஞ்சம் வந்து பண்ணி குடேன்..! " 

" அடி செருப்பால... புல்லு புடுங்க 
பில்கேட்ஸ் வேணுமாடா உனக்கு...? " 

" டென்ஷன் ஆகாதடா.. உன் படிப்பை மதிச்சி 
எவனாவது உனக்கு வேலை குடுத்தானா..? 
நானாவது இந்த வேலை குடுத்தேன்னு 
சந்தோஷப்படுவியா.. அதை விட்டுட்டு..!! " 

" ஹி., ஹி., ஹி.., தெர்மோகோல் எல்லாம் 
ரெடியா இருக்கா மச்சி...! "
.
.

25 Comments:

நாய் நக்ஸ் said...

உங்க அருமை உங்க நண்பருக்கு தெரிஞ்சிருக்கு.....

உங்களுக்கு தெரியலை பாருங்க...

நாய் நக்ஸ் said...

ஆனா நீங்க பண்ண கம்ப்யூட்டர்---உலகத்துலேயே சூப்பர் மாடல்-ஆ செலக்ட் ஆகி இருக்காம்....

வெளங்காதவன்™ said...

//" டேய்.. நீ என்ன படிச்சி இருக்க..? "////

யாரப் பாத்து என்ன கேள்வி கேட்டீங்க?

கூட்ரா பஞ்சாயத்த!

Unknown said...

இந்தியாலயும் ஒரு ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்காருடா.......

Unknown said...

அய்யயோ பல நாட்களா மறைச்சு வச்சுருந்த ரகசியம் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சே...
இனி அந்த பில்கேட்ஸ் தம்பி அமெரிக்கா கூப்புடுவானே................

வெளங்காதவன்™ said...

//Azhagesan Jayaseelan said...

இந்தியாலயும் ஒரு ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்காருடா.......///

எங்கள் தானையத் தலைவன், வெங்கட் அவர்களை இழிவுபடுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

முத்தரசு said...

நமக்குள் இருக்கும் திறமைகளை இப்புடித்தான் நண்பர்கள் மூலம் வெளிப்படும் - நன்பேண்டா

விஸ்வநாத் said...

// என் கூட +2-ல படிச்ச //

அப்ப நீங்க 10th பெயில் ன்னு என்கிட்டே எதுக்கு பாஸ் பொய் சொன்னீங்க ?

வெளங்காதவன்™ said...

//மூலம் வெளிப்படும்///

யோவ்... என்னைய்யா நெனச்சு கமெண்டு போடுறீங்க? வெங்கட்டு சார் நெம்ப டீசண்டு! ஆங்...

வெளங்காதவன்™ said...

அப்போ இருந்து ரெப்பரேஷ் பண்ணிப்பாக்குறேன்... எந்தப் பயபுள்ளையும் கமெண்டு போடலியே!!!

Suresh Subramanian said...

nallaththaane poittu irunchchu....

MARI The Great said...

ஆகா.. மறுபடியும் கிளம்பீட்டாங்கப்பா ஹி ஹி ஹி!

MARI The Great said...

/////Azhagesan Jayaseelan said...
இந்தியாலயும் ஒரு ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்காருடா.....////

ஒரு வேலை இந்த ஸ்டீவ் ஜாப்ஸ்.. இப்போ உயிரோட இருந்தா.... இனிமே இருக்கமாட்டாரு ஹி ஹி ஹி

Mohamed Faaique said...

இன்னும் நீங்க வாங்கின பல்புகளைத்தான் எழுதுறீங்களா? இன்னும் எத்தனை இருக்கோ?

Madhavan Srinivasagopalan said...

இன்று முதல் அண்ணன்(தம்பியோ ?) வெங்கட் அவர்களை 'தெர்மாகோல் வெங்கட்' என அன்போடு அழைக்கும்படி எட்டாம் வட்டத்தின் சார்பாக பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்..

ம.தி.சுதா said...

ஃஃஃஃ" அடி செருப்பால... புல்லு புடுங்க
பில்கேட்ஸ் வேணுமாடா உனக்கு...? " ஃஃஃ

அடடா எந்தப் பெரிய மேதாவியை ஒரு சாதாரண பதிவுக்குள் அடக்கி விட்டீர்கள் சகோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

வெங்கட் said...

@ நாய் நக்ஸ்.,

// உங்க அருமை உங்க நண்பருக்கு
தெரிஞ்சிருக்கு..... //

என்ன கிண்டலா...

என்னை
அமெரிக்கால மைக்ரோசாப்ட்ல கூப்பிட்டாக.,
ஜப்பான்ல சோனில கூப்பிட்டாக.,
இந்தியால இன்போசிஸ்ல கூடதான்
கூப்பிட்டாக... அதையெல்லாம் வேண்டாம்னுட்டு
உள்ளூர்லயே இருக்கேன்..தெரியுமா..!

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// யாரப் பாத்து என்ன கேள்வி கேட்டீங்க?

கூட்ரா பஞ்சாயத்த! //

விடுப்பா.. விடுப்பா... பொழைச்சி போவட்டும்..!

( இப்படி அடிக்கடி யாராச்சும் கேட்டாதானே
நான் MCA படிச்சி இருக்கேங்கறது எனக்கு
ஞாபகம் இருக்கும்.. ஹி., ஹி...)

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.. ஹா.. ரசித்தேன்..
பகிர்வுக்கு நன்றி...
தொடர வாழ்த்துக்கள் !

வெங்கட் said...

@ அழகேசன் ஜெயசீலன்.,

// அய்யயோ பல நாட்களா மறைச்சு
வச்சுருந்த ரகசியம் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சே...
இனி அந்த பில்கேட்ஸ் தம்பி அமெரிக்கா கூப்புடுவானே... //

அதெல்லாம் போன வருஷமே போயிட்டு
வந்தாச்சு..

Windows 7-ஐ Develop பண்ணும்போது
வந்த Problem-ஐ சரி பண்ணினது யார்னு
நினைக்கிறீங்க..?!

வெங்கட் said...

@ விஸ்வநாத்.,

// அப்ப நீங்க 10th பெயில் ன்னு என்கிட்டே
எதுக்கு பாஸ் பொய் சொன்னீங்க ? //

உங்களுக்கு இன்பிரியாரிட்டி காம்ப்ளக்ஸ்
வந்துடக்கூடாதேங்கிற நல்ல எண்ணத்துல
தான்..! :)

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// எங்கள் தானையத் தலைவன், வெங்கட்
அவர்களை இழிவுபடுத்துவதை வன்மையாகக்
கண்டிக்கிறேன்!//

யோவ்... நீ நல்லவனா..? கெட்டவனா..?

வெங்கட் said...

@ வரலாற்று சுவடுகள்..!!

// ஒரு வேலை இந்த ஸ்டீவ் ஜாப்ஸ்..
இப்போ உயிரோட இருந்தா.... இனிமே
இருக்கமாட்டாரு ஹி ஹி ஹி //

எனக்கும் , ஸ்டீவ்க்கும் ஒரு நெருங்கின
பந்தம் இருக்கு... ம்ம...

அதாவது என் சகலையோட, அண்ணனோட
ப்ரெண்டோட சித்தப்பா பையன் " ஐ போன் "
வெச்சி இருக்கான்..!!

( பக்கத்துல நெருங்கிட்டோம்ல...!! )

Unknown said...

// எங்கள் தானையத் தலைவன், வெங்கட்
அவர்களை இழிவுபடுத்துவதை வன்மையாகக்
கண்டிக்கிறேன்!//

துதி ஒழுங்கா பாடுங்கப்பா

தன்னிகரிலலாதலைவன் தனிப்பெரும்தலைவன்,
தானைத் தலைவன்,
தன்மானசிங்கம்,
ஹி ஹி ஹி ... அண்ணன் வெங்கட்
ப்ளஸ்2 படிச்சிருக்காரா....சொல்லவே இல்ல....

கலைவேந்தன் said...

கிரேட் வெங்கட்.. நல்ல நகைச்சுவை உங்களுக்கு.. ( நான் நீங்க எம் சி ஏ படிச்சதா சொன்னதை சொல்லல.)