சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

07 March 2011

காலையில 7 மணிக்கு ஒரு போன்..

 















நேத்து காலையில 7 மணிக்கு
என் Friend Mani-க்கு போன்
பண்ணியிருந்தேன்..

" ஹலோ..!! "- ( இது அவன் Wife குரல்.. )

" தங்கச்சி...!! என்னை மன்னிச்சிடுமா..!! "

" ஹா., ஹா., ஹா.. இவ்ளோ நாள் கழிச்சு
இப்பதான் மன்னிப்பு கேக்கணும்னு
தோணிச்சாண்ணா..?!! "

" என்னம்மா இப்படி கேக்குற..?
நான் பீல் பண்ணாத நாள் இல்ல
தெரியுமா.?! "

" ஆமா இப்ப பீல் பண்ணுங்க..!! அப்பவே
ஒரு சின்ன க்ளூ குடுத்திருந்தா கூட
நான் தப்பிச்சு இருந்திருப்பேன்ல..! "

" Correct தான்மா.. ஆனா அன்னிக்கு
இருந்த சூழ்நிலைல என்னால உனக்கு
Help பண்ண முடியல...!! "

( " யாரு போன்ல..? " - இது Mani-ன் குரல்..

" வெங்கட் அண்ணா லைன்ல இருக்காரு.."
- இது Mani's Wife.. )

" அண்ணா.. உங்க Friend வந்துட்டாரு..
அவர்கிட்ட போனை குடுக்கறேன்..!! "

( போன்.. கை மாறுகிறது.. )

" டேய்.. என்னடா சொன்ன அவ கிட்ட..?
என்னை பாத்து கேவலமா சிரிக்கிறா.!! "

" பாவ மன்னிப்பு கேட்டேன்..! "

" அட பாவி... என் Anniversary-க்கு Wish
பண்ற அழகாடா இது..? "

" ஹி., ஹி., ஹி... Different-ஆ பண்ணுவோம்ல..! "

" இரு.. இரு.. March 11 வரட்டும்
அன்னிக்கு உன்னை கவனிச்சுக்கறேன்..! " 


" ஓ...!! அன்னிக்கு நீயும் போன் பண்ணி
என் Wife-கிட்ட ' பாவ மன்னிப்பு ' கேக்க
போறீயா..? அது மட்டும் நடக்காது.. "

" அது எனக்கே தெரியும்..!! "

" எப்படி தெரியும்..? "

" உன் கல்யாணத்துக்கு Help பண்ணின
எனக்கெல்லாம் எங்கடா பாவ மன்னிப்பு
கிடைக்கும்..? Straight-ஆ Encounter தான்..!!
ஹி., ஹி.,ஹி..!! "

" அடப்பாவி..?!!!!!  "

டிஸ்கி : இவர் Birthday-க்கு நான் அனுப்புன
Different-ஆன வாழ்த்தை பார்க்க
இங்கே க்ளிக் பண்ணுங்க..
.
.

42 Comments:

samhitha said...

//" உன் கல்யாணத்துக்கு Help பண்ணின
எனக்கெல்லாம் எங்கடா பாவ மன்னிப்பு
கிடைக்கம்..? Straight-ஆ Encounter தான்..!!
ஹி., ஹி.,ஹி//
correcta purinji vachirukkare ;)

மாணவன் said...

நல்லாருக்கு, வாழ்த்துக்கள் :)

samhitha said...

//இரு.. இரு.. March 11 வரட்டும்
அன்னிக்கு உன்னை கவனிச்சுக்கறேன்.//

இதுல ஏதாவது இன்டைரக்ட் மெசேஜ் இருக ;)

Anonymous said...

Ha ha. wait till 11th.
Anjali

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான அனுகுமுறை..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இது ஒரு சிறுகதைப் போன்று தெரிகிறது..
வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

>>>என்னடா பண்றது..,
என்னால Continuous-ஆ
ரெண்டு வரி பொய் பேச முடியாதே..!


ஆ மாட்டிக்கிட்டாரு வெங்கட். அப்புறம் எப்படி பதிவு போடறீங்க..?அதுல 70 லைன்ஸ் தொடர்ந்து வருதே,

சி.பி.செந்தில்குமார் said...

சந்தடி சாக்கில் மார்ச் 11 அன்று உங்க கல்யாண நாள் என்பதை விளம்பரம் செய்த உங்கள் நாசூக்கான தன்மை என்னை வியக்க வைத்துள்ளது

சி.பி.செந்தில்குமார் said...

உங்க அடுத்த பதிவின் டைட்டில் காலைல 8 மணீக்கு 2 ஃபோன்?

ம.தி.சுதா said...

ஃஃஃஃஉன் கல்யாணத்துக்கு Help பண்ணின
எனக்கெல்லாம் எங்கடா பாவ மன்னிப்பு
கிடைக்கம்ஃஃஃஃ

அட நிங்க இப்புடி கேட்டா அவர் என்ன பண்ணுவாரு.. ஹ..ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

வெங்கட் said...

@ சம்ஹிதா.,

// இதுல ஏதாவது இன்டைரக்ட் மெசேஜ் இருக ;) //

ஹி., ஹி., ஹி..!
அது டைரக்ட் மெசேஜ்ங்க...!!

வெங்கட் said...

@ அஞ்சலி.,

// Ha ha. wait till 11th.
Anjali //

Encounter-ஐ பார்க்க அவ்ளோ
ஆர்வமா உங்களுக்கு..?

வெங்கட் said...

@ சௌந்தர்.,

// இது ஒரு சிறுகதைப் போன்று தெரிகிறது..
வாழ்த்துக்கள்.. //

ஆஹா.. அப்படியா..?!! ஓ.கே..!!

சுஜாதா சாரோட இலக்கிய வாரிசு
நான் தான்கறதை Prove பண்ண வேண்டிய
நேரம் வந்துடுச்சிடோய்...

சி.பி.செந்தில்குமார் said...

>>>வெங்கட் said...

@ சௌந்தர்.,

// இது ஒரு சிறுகதைப் போன்று தெரிகிறது..
வாழ்த்துக்கள்.. //

ஆஹா.. அப்படியா..?!! ஓ.கே..!!

சுஜாதா சாரோட இலக்கிய வாரிசு
நான் தான்கறதை Prove பண்ண வேண்டிய
நேரம் வந்துடுச்சிடோய்...

வஞ்சப்புகழ்ச்சியைக்கூட சாமார்த்தியமாக உருவக உவமை அணியாக நினைத்துக்கொண்டதாய் சமாளிஃபிகேஷன்...? ஜமாய் ராஜா ஜமாய்..

வெங்கட் said...

@ சி.பி.,

// ஆ மாட்டிக்கிட்டாரு வெங்கட்.
அப்புறம் எப்படி பதிவு போடறீங்க..? //

சே.. சூப்பர்ங்க.. உங்களால மட்டும்
எப்படிங்க முடியுது..? இப்படி பதிவுக்கு
சம்பந்தம் இல்லாம இந்த மாதிரி
கமெண்ட் போட..!?

நீங்க Quote பண்ணின இந்த வரிகள்..

// என்னடா பண்றது.., என்னால
Continuous-ஆ ரெண்டு வரி பொய்
பேச முடியாதே..! //

இந்த பதிவுல வர்றது இல்ல
வேற பதிவுல வர்றது..

ஆ.. மாட்டிக்கிட்டாரு சி.பி.

TERROR-PANDIYAN(VAS) said...

@சி.பி

/ஆ மாட்டிக்கிட்டாரு வெங்கட். அப்புறம் எப்படி பதிவு போடறீங்க..?அதுல 70 லைன்ஸ் தொடர்ந்து வருதே, //

சி.பி. எங்களால கண்டினியூஸா பொய் தான சொல்ல முடியாது சொன்னோம். வெங்கட் பதிவு = உண்மை, உண்மை மட்டுமே. :)

middleclassmadhavi said...

வாழ்த்துக்கள் உங்கள் நண்பருக்கும், அட்வான்சாக உங்களுக்கும்!

Mohamed Faaique said...

ப்லாக்’னு ஒன்னு இருக்குனு உங்களுக்கு சொல்லித் தந்தவர் யாருங்க.... அவரையும் encounter பண்ண தேடிட்டு இருக்கோம்....

Mohamed Faaique said...

உங்க திருமண நாள் மார்ச் 11’ங்குறத... தெரியாதனமா உளரிட்டீங்களே பாஸ்... இப்போவே அதற்கு எதிர் பதிவுகள் பல ரெடி ஆகிடுமே!!! என்ன பண்ண போரீங்க....

Chitra said...

உன் கல்யாணத்துக்கு Help பண்ணின
எனக்கெல்லாம் எங்கடா பாவ மன்னிப்பு
கிடைக்கம்..? Straight-ஆ Encounter தான்..!!
ஹி., ஹி.,ஹி..!! "


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம கமென்ட்.

Chitra said...

March 11 - HAPPY ANNIVERSARY!!!! :-)

Suresh Kumar M said...

வெ.க.மு(வெங்கட் கல்யாணத்துக்கு முன்)
வெ.க.பி(வெங்கட் கல்யாணத்துக்கு பின்)

எப்படி என்று தெரிந்துகொள்ளலாமா?!... ;)

எஸ்.கே said...

நாட்ல என்கவுண்டர் லிஸ்ட்ல நிறைய பேர் இருப்பாங்க போல!:-)

ராஜி said...

//" உன் கல்யாணத்துக்கு Help பண்ணின
எனக்கெல்லாம் எங்கடா பாவ மன்னிப்பு
கிடைக்கம்..? Straight-ஆ Encounter தான்..!!
ஹி., ஹி.,ஹி//

எவ்வளவு அழகா உங்க ஃப்ரெண்ட் உங்களை புரிஞ்சு வச்சிருக்கார்

ராஜி said...

//இரு.. இரு.. March 11 வரட்டும்
அன்னிக்கு உன்னை கவனிச்சுக்கறேன்//

மறைமுகமா சொன்ன ஒரு விஷயத்துக்கு இன்றே வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்.

எஸ்.கே said...

//இரு.. இரு.. March 11 வரட்டும்
அன்னிக்கு உன்னை கவனிச்சுக்கறேன்..! //

அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துக்கள்!

செல்வா said...

//உளரிட்டீங்களே பாஸ்... இப்போவே அதற்கு எதிர் பதிவுகள் பல ரெடி ஆகிடுமே!!! என்ன பண்ண போரீங்க...//

ஹா ஹா ..நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க .. உலகத்துல பல பேருக்கு மகிழ்ச்சியா கொண்டாடும் நாட்களில் இதுவும் ஒன்று. எங்க தலையோட பிறந்தநாள் , திருமணநாள் இப்படி எல்லாத்தையும் தேசிய விடுமுறை தினமா அறிவிக்கலாம்னு இருக்காங்க ..

Madhavan Srinivasagopalan said...

//En counter தான்..!! //
நம்ம கவுண்டரா..?
அட.. அவரு கோயமுத்தூர் பக்கமா ?

Anonymous said...

வித்தியாசமான வாழ்த்தா இருக்கே..

அனு said...

//" தங்கச்சி...!! என்னை மன்னிச்சிடுமா..!! "//

அவங்களையும் உங்க பதிவுகள படிக்க வச்சதுக்கு தானே மன்னிப்பு கேட்டீங்க??

// March 11 வரட்டும்
அன்னிக்கு உன்னை கவனிச்சுக்கறேன்..//

எப்படியும் உங்க VAS மக்கள் உங்க திருமண நாளை மறந்துடுவாங்கன்னு தானே இப்பவே சொல்லி வைக்குறீங்க..
சொல்லிட்டாலும்.. அங்க இருந்து ஒரு கடலை மிட்டாய் கூட தேறாது..

பெசொவி said...

உங்க பதிவில ஒருத்தர் நீலக் கலர் போட்டுக்கிட்டு ஸ்மார்ட்டா இருக்காரே, அவரைப் பார்த்துதான் நீங்களும் நீலக் கலர் சட்டை போடா ஆரம்பிச்சீங்களா, அதுக்கப்புறம் அவரு நீலக் கலர் சட்டையே போடமாட்டேன்னு வெறுத்துப் போய் சொல்லிட்டாராமே, அது உண்மையா?

சௌந்தர் said...

நல்லா தான் வாழ்த்துறீங்க....

வெங்கட் said...

@ Mohamed.,

// ப்லாக்’னு ஒன்னு இருக்குனு உங்களுக்கு
சொல்லித் தந்தவர் யாருங்க.... அவரையும்
encounter பண்ண தேடிட்டு இருக்கோம்.... //

அது என் மச்சான் கீர்த்தி., USA, UK -ன்னு
சுத்திட்டு இருந்த பையன் இந்த மாதிரி
நிறைய மிரட்டல் வந்ததால இப்போ
சென்னை. பெங்களூர்னு தலைமறைவா
இருக்காப்ல..

samhitha said...

//அது என் மச்சான் கீர்த்தி., சென்னை. பெங்களூர்னு தலைமறைவா
இருக்காப்ல..
//

என்ன நல்ல எண்ணம உங்களுக்கு ;)
விட்டா அவர் அட்ரஸ் தந்து நீங்களே போய் அடிங்கனு சொல்லிடுவீங்க போல
mrs.venkat கொஞ்சம் கவனிங்க இங்க ;)

mr.keerthi எங்கு இருந்தாலும் பார்த்து சூதானமா இருந்துகோங்க ;)

samhitha said...

//சுஜாதா சாரோட இலக்கிய வாரிசு
நான் தான்கறதை Prove பண்ண வேண்டிய
நேரம் வந்துடுச்சிடோய்...
//
வெங்கட்
உங்களுக்கு இது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரா தெரியல :D !!!
நல்ல வேலை சுஜாதா சார் இப்போ இல்ல!!
அதுனால தான்னு சொல்றேன்னு சொல்லிடாதீங்க?
by t way wts meant by " இலக்கிய வாரிசு " :(

வெங்கட் said...

@ சுரேஷ்.,

// வெ.க.மு (வெங்கட் கல்யாணத்துக்கு முன்)
வெ.க.பி (வெங்கட் கல்யாணத்துக்கு பின்)
எப்படி என்று தெரிந்துகொள்ளலாமா?!... ;)//

வெ.க.மு, வெ.க.பி பெருசா ஒண்ணும்
மாற்றம் இல்ல.. பர்னாலிட்டி லைட்டா
கூடிடுச்சு.. அவ்ளோ தான்..

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// நாட்ல என்கவுண்டர் லிஸ்ட்ல
நிறைய பேர் இருப்பாங்க போல!:-)//

நிறைய பேரெல்லாம் இல்ல..
எனக்கு தெரிஞ்சி ஆறு பேர் தான்
இருக்காங்க.. :)

வெங்கட் said...

@ கோமாளி.,

// எங்க தலையோட பிறந்தநாள், திருமணநாள்
இப்படி எல்லாத்தையும் தேசிய விடுமுறை
தினமா அறிவிக்கலாம்னு இருக்காங்க ..//

என் Birthday-க்கு ( Apr 13th - சித்திரை 1)
Govt Holiday விட்டுட்டு தான் இருந்தது.

ஆனா நான் தான் லீவ் நாள் அதிகமா
இருக்கேன்னு சொல்லி 2 வருஷம்
முன்னால அந்த Holiday-ஐ Cancel
பண்ண சொல்லிட்டேன்..

அதே மாதிரி என் கல்யாண நாளுக்கும்
Holiday விட வேணாம்னு Strict-ஆ
சொல்லிட்டேன்..

suthan said...

சந்தடி சாக்கில் மார்ச் 11 அன்று உங்க கல்யாண நாள் என்பதை விளம்பரம் செய்த உங்கள் நாசூக்கான தன்மை என்னை வியக்க வைத்துள்ளது.

வெங்கட் said...

@ அனு.,

// அவங்களையும் உங்க பதிவுகள
படிக்க வச்சதுக்கு தானே மன்னிப்பு
கேட்டீங்க?? //

அவங்க பதிவை மட்டும் படிச்சி இருந்தா
நான் ஏன் மன்னிப்பு கேக்க போறேன்..?
கூடவே VKS கமெண்ட்சையும்
படிச்சுட்டாங்களே.!!

// எப்படியும் உங்க VAS மக்கள் உங்க
திருமண நாளை மறந்துடுவாங்கன்னு
தானே இப்பவே சொல்லி வைக்குறீங்க..
சொல்லிட்டாலும்.. அங்க இருந்து
ஒரு கடலை மிட்டாய் கூட தேறாது.. //

ஓ.. உங்க திருமண நாள்க்கு
ஒண்ணு ரெண்டு கடலை மிட்டாய்
தேறுனதுக்கே இவ்ளோ பந்தாவா..?

அனு said...

//கூடவே VKS கமெண்ட்சையும்
படிச்சுட்டாங்களே.!!//

அதனால தான் நீங்க இன்னும் என்கவுண்டர்ல மாட்டாம இருக்கீங்க..

//உங்க திருமண நாள்க்கு
ஒண்ணு ரெண்டு கடலை மிட்டாய்
தேறுனதுக்கே இவ்ளோ பந்தாவா..?//

உங்க திருமண நாளுக்கு அது கூட கிடைக்கலயேன்னு வருத்தமா??

Manish said...

fine pounch