26 February 2010
Ice வெச்சா தப்பா..??!
10 -வது படிக்கும் போது
எங்களுக்கு ஒரு புது தமிழ் Miss
வந்தாங்க.,
அவங்கள பொறுத்தவரைக்கும்
"திருக்குறள் தான் வேதம்
திருவள்ளுவர்தான் கடவுள்.,"
அவங்களுக்கு Ice வெச்சா
பரிட்சையில நிறைய மார்க்
வாங்கலாம்ன்னு என் Friend
ஐடியா சொன்னான்.
சரி Ice வெக்கிறது எப்படி..?
Answer Paper -ல பிள்ளையார் சுழி
போடறதுக்கு பதிலா..
" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு " -ன்னு
எழுதலாம்னு முடிவாச்சு..!
அப்படியே எழுதினோம்..!
என்ன ஆச்சரியம்..!
அதுவரைக்கும் 70 மார்க்
தாண்டாத நான்
80 மார்க் எடுத்திருந்தேன்.,
சுபம்...
Wait.., Wait..,
" அகற முதல எலுத்தெள்ளாம் ஆதி
பகவான் முதற்றெ உலகு " -ன்னு
எழுதி வெச்சிருந்த என் Friend
என்ன ஆயிருப்பான்னு நினைக்கறீங்க...?
திருவள்ளுவரே அவனை மன்னிச்சாலும்.,
எங்க தமிழ் Miss மன்னிக்கிறதா இல்ல..!
பின்னி எடுத்துட்டாங்கல்ல..!
" சிங்கத்து குகைக்குள்ளயே வந்து
சிறு நரி Film காட்டலாமா..? "
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
ice..சை சும்மாவைத்தா பரவாயில்லை டீச்சர் தலையில் வைத்தால்தான் தப்பு.
விளையும் பயிர் முலையிலே என்பதற்க்கேற்ப்ப அப்பவே எப்படி நேர்மையான வழியில் தனக்கு சாதகமாக ஆக்கிகொள்வது என்பது வெளிப்பட்டிருக்கிறது..அதனால்தான் இன்று ஒரு வெற்றி கரமான பிஸ்னஸ்மேனாக இயங்க முடிகிறதோ.திறமைதான்...எப்படிஎல்லாம் சிந்தித்திருக்கிறீங்கப்பா..இதில் பாவம் உங்கள் நண்பர்...உங்களுக்கு அய்டியா கொடுத்துவிட்டு.. 'ள'வில் ஓட்டவிட்டுவிட்டு நல்ல பின்னப்பட்டிருக்கிறார்....teacher...க்கு தெரிந்திருக்குமோ..அதுதான் பின்னி இருக்கிறார்.
படிக்கும்போது மாங்கு மாங்குனு படிச்சதுதான் மிச்சம்..இப்படிஎல்லாம் தோணலையே....
உங்களுக்கு எது பிடிக்கும் என்று உங்கள் workers & personal staff...க்கு தெரியாமல் பார்த்துக்காங்க....
புரியுது எனக்கே "அல்வாவா" என்பது..உங்களையெல்லாம் எமாத்த முடியாதுங்க...
அனுபவம் இன்னும் வரும் என்று நினைக்கிறேன்...
சிங்கத்து குகைக்குள்ளயே வந்து
சிறு நரி Film காட்டலாமா
காட்டி இருக்கீங்களப்பா..கில்லாடிங்கத்தான் போங்க...
ithu super i realy like that so much
thanks for your effert
Hello பெயரில்லா, இன்னொரு தடவை தமிழில் இது மாதிரி மோசமா ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் பண்ணுனிங்க, ஆணியாலேயே குத்துவேன்!
// என்பதற்க்கேற்ப்ப //
நன்றி நண்பரே,,! ( பெயரில்லா..)
சில சமயம் தமிழ் புத்தகத்தை விட
கோனார் Notes நல்லா விரிவா இருக்கும்..
அது மாதிரி உங்க Comment அருமை..
தொடரிந்து ஆதரவு தருக..!
கவிதாமணி.!
உங்க பாராட்டுக்கு நன்றி..!
என்ன திருவள்ளுவரே..!
வந்த உடனே என் நண்பரை கலாய்ச்சிட்டீங்களே..!
சின்ன சின்ன தப்புக்கெல்லாம்
ஆணியால குத்துவேன்னு சொல்லுவதெல்லாம்
ஒரு முனிவர் பேசுற பேச்சா..!
அப்படியே English, Maths,Science,Social teachers ஐ cover பண்ணவும் வழி சொல்லுங்க .. புண்ணியம் பெருகும்
ஐடியா இருக்கு..
இன்னொரு பதிவுல
சொல்லுறேன்..
அகர முதல் - உண்மையிலேயே வேலை செய்யும் - 10 மார்க் அதிகம் வாங்கி கொடுத்திருக்கே - ஆமா உண்மையிலேயே வெங்கட்டு தமிழ்லே 70 மதிப்பெண்ணா - நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை
சீனா சார்..,
நான் கொஞ்சம் அதிகம்
மார்க் வாங்குறதே தமிழ்ல
மட்டும் தான்..
அதையும் நம்ப மாட்டேங்கறாங்களே..!
Post a Comment