சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 November 2010

பீ கேர்புல்..!!

















நேத்து Evening..
என் Room-ல ஹாயா உக்காந்துட்டு

" மயங்கினேன்.,
சொல்ல தயங்கினேன்.,
உன்னை விரும்பினேன் உயிரே..!! "

இந்த பாட்டை ஜாலியா பாடிட்டு
இருந்தேன்..

அப்ப ரூமுக்குள்ள வந்த என் மனைவி..

" என்ன பாட்டெல்லாம் பலமா
இருக்கு..? "

" உன்னை நினைச்சேன்.. பாட்டு
தானா வருது....!! "

( எப்படி " ICE " வெச்சேன் கவனிச்சீங்களா..?!! )

இதை கேட்டு என் Wife என்னை
டெரரா ஒரு லுக் விட்டாங்க..

" ஏன்..? என்ன ஆச்சு..?
ஏன் அப்படி முறைக்கிற..? "

" என்னை நினைச்சா பாடுனீங்க..? "

" பிராமிஸா உன்னை நினைச்சி தான்..!! "

" மயங்கினேன்., தயங்கினேன்.,
விரும்பினேன்.. என்னா இது..?

எல்லாமே Past Tense..!! அப்ப
Present Tense-ல ஒண்ணும் இல்லையா..?!"

( ஆஹா.. நம்மள அடிக்கணும்னு முடிவு
பண்ணிட்டா எப்படி எல்லாம் குத்தம்
கண்டுபிடிக்கறாங்கடா சாமி..!!
அவ்வ்வ்வ்வ்வ்........!!!! )

டிஸ்கி : இந்த Post-க்கு ரஜினி சார் படம்
எதுக்குனு தானே பாக்குறீங்க..?

எல்லாம் ஒரு விளம்பரம் தான்.,
ரஜினி சாருக்கு..!!

ஹி., ஹி., ஹி..!!
( அடங்க மாட்டோம்ல... )
.
.