
சென்னை போன முதல் நாள்
Evening சிரிப்பு போலீஸ் ரமேஷ்
வந்து என்னை Meet பண்ணினாரு..!!
அன்னிக்கு நைட் நானும்., அவரும்
Dinner-க்கு KFC போனோம்..
அப்ப என் பர்ஸ்ல எல்லாமே
500 ரூபா நோட்டா தான் இருந்தது..
சரி பரவாயில்லைன்னு ஒரு 500 ரூபாயை
ரமேஷ்கிட்ட குடுத்து..
2 சிக்கன் + 2 Veg பர்க்கர் ( Rs 149 )
வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன்..
ஆனா அவர் போயி..
5 சிக்கன்., 2 சிக்கன் பர்க்கர்.,
2 பெப்ஸி வாங்கிட்டு வந்துட்டாரு..
Bill Amount Rs 510..
எனக்கு செம ஷாக்..
" என்னங்க இவ்ளோ வாங்கிட்டு
வந்துட்டீங்க..? "
" Bill அதிகமா போயிடுச்சின்னு Feel
பண்ணாதீங்க வெங்கட்.. நாம Share
பண்ணிக்கலாம்..! "
" அப்படியா..!! அப்ப ஓ.கே..!! "
( எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்தது..)
சாப்பிட்டு முடிச்சிட்டு KFC-ஐ விட்டு
வெளியே வந்துட்டோம்.. ஆனா
ரமேஷ் பணம் எதுவும் எனக்கு தர
மாதிரி தெரியல..
பொறுத்து பொறுத்து பாத்து தாங்காம
நானே அவர்கிட்ட கேட்டுட்டேன்..,
" Bill-ஐ Share பண்ணிக்கலாம்னு
சொன்னீங்கல்ல..? "
" ஆமாம்..!! "
" அப்ப பணத்தை எடுங்க..!! "
" என்னாது.. பணமா..? நல்லா பாருங்க
வெங்கட்.. Bill Amount 510 ரூபா..,
நீங்க 500 ரூபா குடுத்தீங்க..
நான் 10 ரூபா குடுத்தேன்.
நீங்க ஒரு நோட்டு, நான் ஒரு நோட்டு
கணக்கு சரியா போச்சில்ல.. "
" ங்கொய்யாலே.. உங்க ஊர்ல
இதுக்கு பேருதான் Sharing-ஆ..?? "
.
. Tweet
