27 October 2014
ஓ.. பணியாரம்..!!
காலைல மழை வந்துட்டு இருந்தது..
பசங்க ஸ்கூலுக்கு ரெடி பண்ணிட்டு
இருந்தாங்க என் Wife...
அப்ப என்கிட்ட
" ஏங்க... கிச்சன்ல பணியாரம் ஊத்தி
இருக்கேன்.., கொஞ்சம் போயி ஸ்டவ்வை
சிம்ல வைங்க..! "
சரினு நானும் கிச்சனுக்கு போயி
சிம்ல வெச்சிட்டு.., பக்கத்துல இருந்த
தோசை கரண்டியை எடுத்து வெச்சி
பணியாரம் எப்படி வேகுதுனு வேடிக்கை
பாத்துட்டு இருந்தேன்..
டக்னு பின்வாசல் வழியா என்ட்ரி
குடுத்தாங்க.. எங்க பக்கத்துவீட்டு அண்ணி..
நான் கிச்சன்ல பணியாரம் சுடறதை(?!)
பாத்து அப்படியே ஷாக் ஆகிட்டாங்க..
" இங்கே என்ன பண்றே..? "
" என் பொண்டாட்டிக்கு ஹெல்ப் பண்றேன்..
எல்லா வேலையும் அவளே செஞ்சா
அவ கை வலிக்கும்.. அப்புறம் எனக்கு
மனசு வலிக்கும்ல.. ஹி., ஹி., ஹி..!!! "
எங்க அண்ணி ஒரு நிமிஷம் என்னமோ
யோசிச்சாங்க... அப்படியே அவங்க
வீட்டுக்கு போயிட்டாங்க..
அப்புறம் காலையில ஆபிஸ் கெளம்பும்போது
அண்ணன் என்னை பாத்து மொறைச்சாரு....
# நாம சிம்ல தானே வெச்சோம்...!!!
ஹி., ஹி., ஹி..
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
நாம சிம்ல தானே வச்சோம்....
செம, நச்....
//அண்ணன் என்னைய பாத்து மொறச்சிகிட்டே போனார் //
பத்த வச்சிடியே பரட்ட moment................:)
Post a Comment