காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப...
அன்னிக்கு எங்க ஜூனியர் பொண்ணு
மீனாவுக்கு Birthday போல... எல்லோருக்கும்
சாக்லெட் குடுத்துட்டு இருந்தாங்க..
அப்ப என் ப்ரெண்ட் பிரகாஷ் என்கிட்ட..
" மச்சி.. இன்னிக்கு பாரேன்.. மீனாகிட்ட
எப்படி Score பண்றேன்னு..!! "
" என்னடா பண்ண போற...?! "
" உஷ்.. நடக்கறதை பாரு...!! "
மீனா.. பிரகாஷ்க்கு சாக்லெட் குடுக்கும்
போது அவன் சொன்னான்..
" மீனா இன்னிக்கு உன்னை பாத்தா அசப்புல
நடிகை திரிஷா மாதிரியே இருக்கே..!! "
( அடப்பாவி...!!! )
மீனாவுக்கு உடனே வெட்கம் வந்துடுச்சு..
சிரிச்சிக்கிட்டே...
" ஹேய்.. பொய் சொல்றீங்க..! " சொல்லிச்சு..
உடனே நானு..
" ஆமா பிரகாஷு... எதுக்கு இப்ப பொய்
சொல்றே.. திரிஷா என்ன நம்ம மீனா
அளவுக்கு அம்புட்டு அழகாவா இருக்குனு "
கேட்டேனா...
இப்ப மீனாவுக்கு டபுள் வெட்கம்..
எனக்கு டபுள் சாக்லெட்..
நான் அப்படியே திரும்பி பிரகாஷை பார்த்தா...
பையன் கண்ணுல கொலவெறில தெரிஞ்சது..
" ஹி., ஹி., நானும் ரெண்டு ரன் எடுக்கலாம்னு... "
# நீ ஆணியே புடுங்க வேணாம் மொமண்ட்..!!
.
. Tweet
1 Comments:
// திரிஷா என்ன நம்ம மீனா
அளவுக்கு அம்புட்டு அழகாவா இருக்கு//
அண்ணாத்த, நீங்க இப்டி கேட்டது திரிஷாவுக்கு தெரியுமா ?
Post a Comment