சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

26 June 2014

" மிஸ்டர் வெங்கி.. யூ ஆர் லுக்கிங் வெரி ஸ்மார்ட்..!!! "


புதுசா ஒரு பிலிப்ஸ் ஷேவர் வாங்கினேன்...

ஆர்டர் போட போறேனு சொன்னப்பவே
என் ப்ரெண்ட் ஜெகன்

" அதெல்லாம் சரி வராதுடானு " திட்டினான்..

ஆனா நான் காதுலயே வாங்கிக்கலையே..

" மிஸ்டர் வெங்கி.. யூ ஆர் லுக்கிங் வெரி
ஸ்மார்ட்னு " நம்மள பாத்து யாராவது
சொல்லிடுவாங்களோனு பொறாமை..

ஆதனால ஆர்டர் போட்டுட்டேன்...
950 ரூபா..

ஷேவரும் வந்தது. ப்ர்ஸ்ட் டைம் யூஸ்
பண்ணினப்ப...

கிழி.. கிழி..!!

உஸ்ஸப்பா.. என்னடா இது...

" பெருமைக்கு எருமை மேய்ச்ச கதையா
போச்சே... " ஃபீலிங்கா இருந்தது...

இதை ஜெகன்கிட்ட சொன்னா அவன் வேற
கேவலமா திட்டுவானேனு யோசிச்சாலும்..
அப்புறம் சொல்லிட்டேன்..

அவனும்..

" கவலைப்படாதடா... அது செட்டில் ஆகறதுக்கு
ரெண்டு வாரம் ஆகும்னு " சொன்னான்..

ஓஹோ... அப்படியானு User Manual-ஐ எடுத்து
பாத்தேன்.... அதுலயும்...

" செட் ஆகறதுக்கு ரெண்டு வாரம் ஆகும்னு
குடுத்து இருந்தாங்க... "

சரி ஓ.கேனு ரெண்டு வாரம் தொடர்ந்து
அதுலயே ஷேவ் பண்ணிட்டு வந்தேன்..

ரெண்டு வாரம் போனதும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட்..

இப்ப..

கிழி.., கிழி.., கிழி.., கிழி..!!

இது ஆவற வேலை இல்ல... 950 ரூபாய்க்கு
பாத்தா.. என் அழகான கன்னம் என்ன
ஆவறதுனு அந்த ஷேவரை தூக்கி
என் பீரோல வெச்சிட்டேன்..

இப்ப என் கோவம் ஜெகன் மேல திரும்பிச்சு..
( பின்ன ஃபிலிப்ஸ் கம்பெனிகாரன்கிட்டயா
கோவப்பட முடியும்..!?! )

" ஏன்டா நாயே... ரெண்டு வாரத்துல செட்டில்
ஆகிடும்னு சொன்னே.. இப்பவும் அதே
மாதிரிதான்டா இருக்கு.. "

" ஹி., ஹி., ஹி.. நான் சொன்னது.. ரெண்டு வாரத்துல
அது உன் பீரோல செட்டில் ஆகிடும்டா..!! "

" அடப்பாவி..!! "
.
.

3 Comments:

Mohamed Faaique said...

///" மிஸ்டர் வெங்கி.. யூ ஆர் லுக்கிங் வெரி ஸ்மார்ட்..!!! "///

தலைப்பில மட்டும்....

Madhavan Srinivasagopalan said...

என்ன பெரிய செட்டு.. ஷேவிங் செட்டு..

Umesh Srinivasan said...

நல்லவேளை, தக்க சமயத்தில் எச்சரிக்கை மணி அடித்து என்னை காப்பாத்திட்டீங்க.