சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 April 2014

அலைபாயுதே... ஆஹா., பாயுதே...!!!


" அலைபாயுதே " படத்துல ஷாலினிய விட
சொர்ணமால்யாதான் அழகு..

இந்த அழகான பொண்ணை விட்டுட்டு
எப்படி இந்த பய அவ தங்கச்சிகிட்ட போயி
லவ்வை சொல்றான்னு எனக்கு ஆச்சரியமா
இருந்துச்சு..

அதுமட்டுமில்ல சொர்ணமால்யாவை
ஹீரோயினா போட்டு இருக்கலாம்கிற
வருத்தம் எனக்கு இன்னிக்கு வரைக்கும் இருக்கு..

Why Mani..?!!! Why..?!!

சரி மேட்டர்க்கு வரேன்...

இன்னிக்கு இந்த போஸ்ட்டை டைப் பண்ணிட்டு
இருக்கும் போது என் Wife...

அலைபாயுதேல மாதவன் சொல்ற டயலாக்கை
சொல்லுங்கனு கேட்டாங்களா...

சரின்னு நானும்.... வாய்ஸ்ச எல்லாம் மாத்தி...
சொன்னேன் பாருங்க...

" நான் உன்னை விரும்பல..,
நான் உன் மேல ஆசைப்படல.,
நீ அழகா இருக்கேன்னு நினைக்கல..,
ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு..! "

உடனே என் wife...
" அப்ப நீங்க என்ன விரும்பல...?
நான் அழகா இல்லையானு " கோவப்படறா....

" ஏய்.. நீதானே மாதவன் சொல்ற டயலாக்கை
சொல்ல சொன்னேனு " கேட்டா...

" ஏன்... மாதவன் அந்த படத்துல அந்த
ஒரு டயலாக் மட்டும் தான் பேசி இருக்காரானு "
அடிக்க வர்றாய்யா...

# அடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா..
எப்படி எல்லாம் போட்டு வாங்கறாய்ங்க...

அந்த பூரிக்கட்டையை தூக்கிட்டு ஓடிடுறா கைப்புள்ள....
.
.

3 Comments:

duraian said...

பாஸ்..அந்த பழைய நெனப்ப அப்டியே மெயிண்டெயின் பண்ணி இருந்துக்கோங்க .. ஆர்வக் கோளாறுல லேட்டஸ்ட்டா எப்டி இருப்பாங்கன்னு ஏதாவது ட்ரை பண்ணீங்கன்னா .... விதி வலியது :))

Umesh Srinivasan said...

ஹீரோயினை விட்டுட்டு அவ அக்கா,தங்கச்சி,சித்தி,அண்ணி, பெரியம்மா,அப்பத்தான்னு பாத்து ஃபீல் ஆகுற உங்கள அடியோட விட்டாங்களேன்னு எனக்கு ஃபீலிங்கா இருக்கு.....

சாதாரணமானவள் said...

முன்னெல்லாம் வாரம் ரெண்டு போஸ்ட் பண்ணிட்டு இருந்தோம். அப்பறம் மாசம் நாலு ஆச்சு. அப்படியே குறைஞ்சு இப்ப மாசம் ஒரு பதிவு போடறதே பெரிய விஷயம் ஆகிடுச்சு. எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டோம் பாத்திங்களா சார்... Anyway, As usual good post!!!