சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 November 2013

தமிழ் வளர்த்த சான்றோர்கள்.. ( பாரதி )

டிஸ்கி : 6th Std படிக்கும் என் மகன் சூர்யா
ஸ்கூல் பேச்சுப்போட்டியில் பேசியது...



என் இனிய தமிழ் மக்களே...!!!

இதுவரை வகுப்பில் மட்டுமே
பேசிக்கொண்டிருந்த உங்கள் சூர்யா.,
இன்று மேடை ஏறி பேச வந்திருக்கிறேன்...

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்..!!

தமிழ் வளர்த்த சான்றோர்கள்…
ஒருத்தரா., ரெண்டு பேரா...?!!!

உ.வே.சாமிநாத அய்யர்., பரிதிமாற் கலைஞர்.,
மறைமலை அடிகள்., மு. வரதராசன்.,
ரா.பி.சேதுப்பிள்ளை., ச. வையாபுரிப் பிள்ளை
பாரதியார், பாரதிதாசன்..

இப்படி ஆயிரம் ஆயிரம் பேர் இருக்காங்க...

ஆனா நான் இன்னிக்கு பேச போறது
மகாகவி பாரதி பத்தி..

பாரதீ.. எங்கள் பாரதம் பெற்றெடுத்த தமிழ் தீ...!!

தமிழுக்கு அவர் செஞ்ச சேவைகளை
வரிசையா அடுக்கினா...
சீனப்பெருஞ்சுவரே சிறுசா போயிடும்..!!!

அவருக்கு முன்னால எழுதினவங்க
எல்லாம் தொல்காப்பிய இலக்கணம்
மாறாம மரபுக் கவிதையா எழுதினாங்க...

அதெல்லாம் நல்லா படிச்சவங்களுக்கு
மட்டுமே புரிஞ்சது....

ஆனா பாரதி..

எல்லா இலக்கணத்தையும் தூக்கி தூர
போட்டுட்டு புதுக்கவிதை எழுதினாரு..
அது சாதாரண மக்களுக்கும் போய்
சேர்ந்தது..

இப்ப புரியுதா...

அவர் வழி... தனி வழி..!!

ராஜாங்க காலத்துல தமிழ் ரொம்ப நல்லா
இருந்துச்சு... புலவர்களுக்கு பரிசு எல்லாம்
கொடுத்து தமிழை வளர்த்தாங்க....

ஆனா பாரதியோட காலத்துல அப்படியா..?!

சபையில சமஸ்கிருதம்.,
ஆட்சியில ஆங்கிலம்...

இதை பாத்துட்டு

வேற மொழிக்கு கட் அவுட்டு.,
தமிழுக்கு கெட் அவுட்டான்னு
பொங்கினாரு பாரதி...

அப்பல்லாம் கச்சேரில கூட சமஸ்கிருத
பாட்டுதான்...

ஒண்ணுமே புரியாது,,, ஆனாலும் தலையை
ஆட்டிட்டு இருப்பாங்க...

இப்ப எல்லா கச்சேரிலயும் தமிழ் பாட்டு
கேக்குதுன்னா.. அதுக்கு காரணம் நம்ம பாரதி..
நிறைய தமிழ்பாட்டு எழுதி இருக்காரு...

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்..

" மெல்லத் தமிழ் இனி சாகும்னு " பாரதியே
சொல்லி இருக்கார்னு சில பேர் சொல்லுவாங்க...

ஆனா.. பாரதி அப்படியா சொன்னாரு...??

" மெல்லத் தமிழ் இனி சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் !
என்றந்தப் பேதை உரைத்தான் ! "-னு
சொல்றாரு...

" பேதைனா " பைத்தியக்காரன்னு அர்த்தம்...

இனிமே " மெல்லத் தமிழ் இனி சாகும்னு "
பாரதி சொல்லி இருக்கார்னு யாராச்சும்
உங்ககிட்ட சொன்னா...

" லூசாப்பா நீ..? " அப்படின்னு திருப்பி
கேளுங்க...!!

என்ன.. அங்கங்கே இங்கிலீஷ் வார்த்தை
வருதேனு பார்க்கறீங்களா... பாரதி ஒண்ணும்
இங்கிலீஷ்க்கு எதிரி இல்லயே....

அவருக்கு தமிழ், தெலுங்கு., இங்கிலீஷ்,
ப்ரெஞ்ச், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம்னு
பல மொழிகள் தெரியும்..

இருந்தாலும்

" யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்னு..... "

தமிழை தான் உயர்வா பாடி இருக்காரு...

அதுமட்டுமா.. வேற மொழி இலக்கியங்களையும்
தமிழ்ல மொழி பெயர்ப்பு செஞ்சாரு...

அவரை பொறுத்தவரை
மொழி தான் ஞானம்.
மொழிப்பற்று என்பது மானம்

ஆனா... இன்னிக்கு தமிழ்..?
" நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் "

இப்ப ஐபோன்ல தமிழ் வந்துடுச்சி.,,
ஃபேஸ்புக்ல தமிழ் வந்துடுச்சி.,,
இவ்ளோ ஏன்..
டிஸ்கவரி சேனல்ல கூட தமிழ்
வந்துடுச்சி..

ஆனா.. ஒரு சில தமிழர்கள் வாய்ல தான்
தமிழ் வரல..

தமிழ் தெரியாத இங்கிலிஷ்காரங்கிட்ட
தமிழ்ல பேசறது இல்ல... - ஆனா..
இங்கிலீஷ் தெரியாத தமிழன்கிட்ட
இங்கிலீஷ்ல பேசறது...

" கிட்ட தட்ட நான் ஒரு வெள்ளைக்காரனாவே
மாறிட்டேன்னு " சொல்றதுல நம்மாளுங்களுக்கு
ஒரு பெருமை..

என்ன கொடுமை சார் இது....?!

பாரதி என்ன மேற்கோளுக்காகவா
எழுதினார்..?
குறிக்கோளுக்காக எழுதினார்....

அவர் வாழ்க்கை..
நெஞ்சில் நிறுத்திக்கொள்ள மட்டுமல்ல.
நம்மை திருத்திக்கொள்ளவும் தான்..

அழகா இருக்குது தமிழ் எழுத்து,
அழிவா தமிழனின் தலை எழுத்து.,
தமிழா புறப்படு அதை எதிர்த்து
இனி கடலும் வணங்கிடும் வழி கொடுத்து

நன்றி..!!
.
.

8 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

Aba said...

ஆனா... இன்னிக்கு தமிழ்..?
" நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் "

என்ன கொடுமை சார் இது....?!

பாரதி என்ன மேற்கோளுக்காகவா
எழுதினார்..?
குறிக்கோளுக்காக எழுதினார்....//

Awesome... அழகான நயத்தோட எழுதி இருக்கீங்க. இங்க்லீஷ் வார்த்தை வரதுன்னு சொல்லி பரிசை விட்ரக்கூடாதுன்னு நடுவுல டிஸ்கி எல்லாம் போட்டதுல இது பிரபல பதிவரோட பையன்னு கண்டுபிடிச்சிருப்பாங்க... :) உண்மையிலேயே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

விஸ்வநாத் said...

அருமை அட்டகாசம் அடடடடா அற்புதம்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

அற்புதம்

வெங்கட் said...

வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள்..!!

வெங்கட் said...

@ Abarajithan Gnaneswaran.,

// இங்க்லீஷ் வார்த்தை வரதுன்னு சொல்லி பரிசை விட்ரக்கூடாதுன்னு நடுவுல டிஸ்கி எல்லாம் போட்டதுல //

படிக்கறது இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்..,

தமிழை பற்று பத்தி பேசணும்..
அதே சமயம் இங்கிலீஷ் மோகம்
அது இதுனு இங்கிலீஷையும் குறை
சொல்ல கூடாது..

இந்த டாபிக் கத்தி மேல நடக்கற
மாதிரி இருந்துச்சு..
:) :)

Madhavan Srinivasagopalan said...

"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்"னு சொன்னாரு.
ஏன்.. சிந்தித்து பார்க்கவேண்டும்.. 'தமிழ்' மட்டுமல்ல 'தமிழர்கள்' அழியவும் அவர் விரும்பவில்லை.

என்ன சர்தான ?

தெம்மாங்குப் பாட்டு....!! said...

Azhagu. ந ல் ல க ருத்துக்கள் .., வாழ்த்துக்கள் !!