அப்போ நான் எட்டாவது படிச்சிட்டு
இருந்தேன்...
ஒரு நாள் எங்க வீதியில நடந்து வந்துட்டு
இருக்கேன்...
அப்போ எதிர்ல ஒரு பொண்ணு
தாறுமாறா சைக்கிளை ஓட்டிட்டு வந்தது..
புதுசா பழகிக்கிட்டு இருக்கு போலன்னு
நானும் ஒதுங்கி ஒதுங்கி நிக்கறேன்..
அப்பயும் சைக்கிள் என் மேல மோதற
மாதிரியே வந்தது...
நான் டக்னு நகந்துட்டேன்.. சைக்கிள்
என் மேல இடிக்கல.. ஜஸ்ட் மிஸ்..
அப்புறம் நான் அந்த பொண்ண பாத்து..
" ஏய்... பாத்து போ புள்ள "-னு சவுண்ட்
விட்டேன்..
அந்த பொண்ணு என்னை பாத்து
முறைச்சிட்டே போச்சு...
சீன் ஓவர்...
அடுத்த நாள்... ஸ்கூலுக்கு போயிட்டு
வந்த என் தங்கச்சி ஒரே அழுகை...
என்ன மேட்டர்னு எங்கம்மா விசாரிக்க...
" அண்ணன் என் ப்ரெண்ட் வனிதாமணியை
கிண்டல் பண்ணிட்டானாம்.... ரவுடி மாதிரி
நடந்துக்கறானாம் "னு போட்டு கொடுக்க..
அம்மா செம திட்டு...
பெண்களை தெய்வமா மதிக்கிற நமக்கே
இந்த நிலைமையான்னு ரொம்ப ஃபீல் பண்ணி
அப்ப நான் முடிவு பண்ணினேன்...
இனிமே இந்த பொண்ணுங்ககிட்ட மட்டும்
பேச்சு வெச்சிக்க கூடாதுன்னு..
சீன் ஓவர்...
அப்புறம் நான் +1 ஜாயின் பண்ணினேன்..
எங்க க்ளாஸ்ல 14 பொண்ணுங்களும்,
பக்கத்து க்ளாஸ்ல 18 பொண்ணுங்களும்
படிச்சாங்க..
ஒரு மாசம் நல்லாத்தான் போயிட்டு
இருந்தது... ஆனா அதுக்கப்புறம் என்ன
ஆச்சுன்னே தெரியல பொண்ணுங்க
என்னைய பாத்தா மொறைக்க ஆரம்பிச்சாங்க..
இதென்னடா வம்பா இருக்கேன்னு
ஒரு பொண்ணுகிட்ட லைட்டா விசாரிச்சேன்...
" நீ வனிதாமணியை கையை புடிச்சி
இழுத்தியாம்ல"-னு சொல்லிச்சு..
" எந்த வனிதாமணி..? " ( எனக்கு மறந்து போச்சு.. )
" நம்ம க்ளாஸ்ல படிக்கிற மேனகாவோட
சித்தப்பா பொண்ணு...! "
அடப்பாவிகளா... இப்ப இந்த அளவுக்கு
டெவலப் பண்ணிட்டீங்களா...??!
சீன் ஓவர்..
அப்புறம் நான் B.Com + MCA படிச்சேன்..
எனக்கு கல்யாண வேலைகள் நடந்தது...
பொண்ணு பக்கத்து ஊரு..
வழக்கம் போல ஒரு நாள்
என் ( வருங்கால ) மனைவிகிட்ட
போன்ல பேசிட்டு இருக்கும் போது...
திடீர்னு ஒரு கேள்வி கேட்டா பாருங்க...
நான் அப்படியே ஆடிப்போயிட்டேன்...
.
.
.
.
" ஏங்க... உங்களுக்கு வனிதாமணி தெரியுமா..? "
( மறுபடியும் வனிதாமணியா..? அவ்வ்வ்...!!! )
15 Comments:
///
ஒரு நாள் எங்க வீதியில நடந்து வந்துட்டு
இருக்கேன்..///
உங்களுக்கு சொந்தமா வீதியெல்லாம் இருக்கா..?
//" எந்த வனிதாமணி..? " ///
ஒன்னா? ரெண்டா??? ஞாபகம் வச்சிக்கிட்டு இருக்க....
///அடப்பாவிகளா... இப்ப இந்த அளவுக்கு
டெவலப் பண்ணிட்டீங்களா...??!///
உண்மைகள் வெளிவர கொஞ்சம் டைம் ஆகும். பட் வெளி வந்தே ஆகும்...
வனிதாமணி.... தலைவருக்கு ஆப்பு மணி...
//அப்போ நான் எட்டாவது படிச்சிட்டு
இருந்தேன்...///
இப்பவரைக்கும் நீரு அவ்வளவுதான் படுச்சிருக்கீர்?
//அப்பயும் சைக்கிள் என் மேல மோதற
மாதிரியே வந்தது...
நான் டக்னு நகந்துட்டேன்.. சைக்கிள்
என் மேல இடிக்கல.. ஜஸ்ட் மிஸ்..///
ச்சே.... மாட்டலியே....#பொண்ணோட மைன்ட்வாய்ஸ்
//அந்த பொண்ணு என்னை பாத்து
முறைச்சிட்டே போச்சு...///
இதே, அத்தாச்சியா இருந்திருந்தா.....
நல்லாவே டெவலப் பண்றாங்க?!
@ Faaquie.,
// உங்களுக்கு சொந்தமா வீதியெல்லாம்
இருக்கா..? //
ஆமா இருக்கே.. நீங்க இந்த தி.நகர்ல இருக்குற
" ரங்கநாதன் தெரு " கேள்விப்பட்டதில்ல...
அதான்...
எங்க தாத்தா பேரு தான் ரங்கநாதன்..
ம்ம்.. அப்ப தியாகராய நகர்னு இருக்கே...
அது யார்னு கேப்பீங்களே. தெரியும்..
அது எங்க ஒண்ணுவிட்ட கொள்ளு தாத்தா...
:)
@ Faaquie.,
// ஒன்னா? ரெண்டா??? ஞாபகம் வச்சிக்கிட்டு
இருக்க.... //
அட நீங்க வேற.. ஒரு வனிதாமணிக்கே
தலைக்கு மேல கத்தி...
@ வெளங்காதவன்.,
// இப்பவரைக்கும் நீரு அவ்வளவுதான்
படுச்சிருக்கீர்? //
ஸ்டுபிட்... ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீசர்கிட்ட
பேசுற மாதிரியா பேசுறீரு..?
@ வெளங்காதவன்.,
// ச்சே.... மாட்டலியே.... # பொண்ணோட
மைன்ட்வாய்ஸ் //
இடிக்காம போனத்துக்கே இவ்ளோ ரணகளம்..
இதுல இடிச்சி வேற இருந்தா.... அவ்வ்வ்வ்..!!
வனிதாமணி, வனமோகினி வந்தாடு...விகரம் படத்தில வர்ற இந்தப்பாட்டு உங்களப்பாத்துத்தான் எழுதியிருப்பாங்களோ?
hai
@மங்கு
//hai//
எங்க போனாலும் சாட் பண்ற புத்தி போகுதா பாரு.. தூ... :)
வணக்கம்
இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட…இதோ.http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_745.html?showComment=1381986198691#c5683697445379674381
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment