எங்க ஆபீசை மூடிடுவோம்..
ஆனா நேத்து 9.00 மணி ஆகியும்
ஆபீஸ்ல தான் இருந்தோம்..
IPL Match பாத்துகிட்டு....
" உன்னை விட... இந்த உலகத்தில் ஒசந்தது
ஒண்ணுமில்ல.... ஒண்ணுமில்ல....! "
( என் மொபைல் ரிங் ஆகுது... என் Wife
கூப்பிட்டா இந்த ரிங்டோன் தான் வரும் )
உடனே எங்க கடை பையன் ஓடி போய்
T.V வால்யூமை குறைச்சிட்டான்.. சமத்து..!
( ஹி., ஹி., ஹி, இல்லன்னா.. TV-ல
" ஜம்பிங் ஜபாங்கு ஜம்பங்க் ஜம்பங்க்
கிலிகிலியான்னு " சவுண்ட் வருமே..
மாட்டிப்போம்ல..! )
" மாமா... எப்ப வீட்டுக்கு வருவீங்க..? "
" வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு..
ஒரு அரைமணி நேரம்..! "
" இன்னும் அரைமணி நேரமா..?! "
( என் Wife Upset ஆகறது எனக்கு நல்லவே
தெரிஞ்சது.. சே.. சும்மா சொல்லக்கூடாது
என் பொண்டாட்டிக்கு என் மேல பாசம்
அதிகம் தான்.. )
" மதியம் லஞ்ச்க்கு வந்தப்ப கூட உடனே
கெளம்பிட்டீங்க..! கொஞ்சம் நேரம் கூட
வீட்ல இல்ல.. "
" முக்கியமான ஆர்டர் ஒண்ணு முடிக்க
வேண்டி இருந்தது.. அதான்..! "
" இங்கே செம Bore.. நீங்க எப்ப வருவீங்க.,
எப்ப வருவீங்கன்னு வாசலையே பாத்துட்டு
இருக்கேன்..! "
( அடடா.. என் மனைவியோட அன்புக்கு
முன்னாடி இந்த ஐ.பி.எல் எல்லாம்
என் கால் தூசு...! )
" இதோ உடனே வந்துட்டேம்மா... "
நான் கடை பசங்களை பாத்து..
" இழுத்து மூடுங்கடா ஆபீசை..
நாளைக்கு ஹைலைட்ஸ் பாத்துக்கலாம்..! "
அவனுங்க என்னை லூசை பாக்கற மாதிரி
பாத்தானுங்க...
அடுத்த 10வது நிமிஷம் வீட்ல இருந்தேன்.
" அப்பா "-னு ஓடி வந்து என் ரெண்டு
பசங்களும் என் காலை கட்டிகிட்டானுங்க.
" வந்துட்டீங்களா.! "-னு என் Wife கிச்சன்ல
இருந்து சந்தோஷமா வந்தாங்க...
( "அன்பாலே அழகாகும் வீடு " - அது இதானோ..!? )
நான் புல்லரிச்சி போயி நிக்கறேன்..
" ஏங்க.. உங்க புது Smartphone-ஐ குடுங்க..
Temple Run 2 விளையாடணும்.. அதுக்காக
தான் நாங்க ரொம்ப நேரமா Waiting..! "
" அடப்பாவிகளா..?!! "
.
. Tweet
8 Comments:
எங்க வீட்ல Angry Birds...அஅப்டியே எனக்கு Angry Angry-யா வருது.பேட்டரி தீர்ற அளவுக்கு விளையாடறது.
கண்ணுக்குத்தெரியாத ஆப்பு இதுதானோ?
Ada, enakkum indha game pidikkum! :-)) wifekku phone vangi kodukka vendiyathu thaan!
ஹா ஹா ஹா !! செமத்தியான நெத்தியடி தலைவா உமக்கு
//அவனுங்க என்னை லூசை பாக்கற மாதிரி
பாத்தானுங்க...// அப்போ ஆபீஸ்லயும் உங்களை சரியாதான் புரிஞ்சு வச்சிருக்காங்க!
//" முக்கியமான ஆர்டர் ஒண்ணு முடிக்க
வேண்டி இருந்தது.. அதான்..! "//
வீட்டுல முடிக்க வேண்டிய ஆர்டர் (சமைக்கிறது,பாத்திரம் கழுவுறது, இதெல்லாம்) எல்லாம் முடிச்சுட்டு தான் ஆபிஸ் ஆர்டர்லாம் பாக்கனும்னு அவங்க சொன்னதை மறந்துட்டீங்களா?
// " உன்னை விட... இந்த உலகத்தில் ஒசந்தது
ஒண்ணுமில்ல.... ஒண்ணுமில்ல....! " //
8" 11' ?
// ஓடி போய்
T.V வால்யூமை குறைச்சிட்டான்.//
எவ்ளோ பெரிய தொழிலதிபர் நீங்க, ஒரு ரிமோட் வாங்கக்கூடாது,so simple சார்,great
Post a Comment