Definition:
கமிட்டி : சில ஆயிரங்களை சேமிக்க.,
பல கோடி ரூபா செலவு பண்ணி..
கடைசில.. " இந்த கமிட்டியை கலைச்சாலே
போதும்., செலவு மிச்சம்னு " ஒரு முடிவுக்கு
வர்றது..!
---------------------------------------------------------------------------------
என் பையன் படிக்கிற ஸ்கூல் இருக்கே..
அது ஒரு அகராதி பிடிச்ச ஸ்கூல்..
ஒருவேளை Govt சொல்ற Fees-ஐ
எல்லா ஸ்கூலுமே ஒத்துகிட்டாலும்..,
அதுல கடைசியா ஒத்துகிட்டது
இந்த ஸ்கூலா தான் இருக்கும்..!
போன வருஷம் சில ஸ்கூல்ல
3rd Std-க்கு 6,000 ரூபா Fees வாங்கினப்பவே
இவங்க 12,000 ரூபா வாங்கினாங்க..
கேட்டதுக்கு..
" நாங்க அப்பீல் போயி இருக்கோம்..
எங்களுக்கு இன்னும் Fees முடிவு
ஆகலை " ன்னு சொல்லியே
ஒரு வருஷம் ஓட்டிட்டாங்க..!
இந்த வருஷம் வேற
+2 ல District 3rd Rank-ம்.,
10th-ல Distirct 2nd Rank-ம்
வாங்கிட்டாங்க..
ம்ம்.. இனிமே இவங்களை கையில
பிடிக்க முடியாதே... Fees எகிறி
இருக்குமேன்னு பயந்துட்டே
ஸ்கூலுக்கு போனேன்..
அங்கே Cash Counter-ல இருந்த
மேடம்கிட்ட..
" மேடம்.., 4th Std-க்கு Full Year-க்கு
எவ்ளோ Fees வருது..? "
" 4th Std-ஆ... 13,500 ரூபா சார்..! "
" ஸ்கூல் Fees-ஐ குறைக்க சொல்லி
Govt சொன்னாங்களே..! "
" ஆமா சார்... குறைச்சிட்டோம்..
ஸ்கூல் Fees 6500 ரூபா +
Donation 7000 ரூபா..! "
ம்ம்..!
முழுசா ஒரு வருஷம் இருந்தும்
Fees-ஐ நிர்ணயிச்சி நடைமுறைபடுத்த
வக்கில்லாத பழைய அரசு..
அவுங்க கொண்டு வந்த திட்டம்.
அதனாலயே இந்த விஷயத்துல
தீர்வு காண அக்கறையில்லாத
புதிய அரசு..!
நம்மள ஆள்ற அதிமேதாவிங்க
இப்படி இருக்கும் போது.,
ஒரு அப்பாவி Daddy என்ன
பண்ண முடியும்..?!
பணத்தை கட்டிட்டு பேசாம
வந்துட்டேன்..!
Latest பேப்பர் செய்தி :
" ஓரிரு நாளில் தனியார் பள்ளிகளுக்கான
கல்வி கட்டணம் விவரம் வெளியிடப்படும்..! "
- ரவிராஜன் கமிட்டி.
டேய்... யாருமே இல்லாத கடையில
யாருக்குடா " டீ " ஆத்தறீங்க..?!!
.
. Tweet
24 Comments:
எங்க வீட்ல காலேஜ் ஃபீஸ விட ஸ்கூல் ஃபீஸ் ஜாஸ்தியா கட்றாங்க என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களான்னா எல்லாரும் கட்றாங்க நாம மட்டும் என்ன கேக்க முடியும்னு டயலாக்
வாசல்ல வர்ற கீரைகாரங்கள்ட்டயும், பழைய பேப்பர் காரங்கள்டயும் ஒரு ரூபாய்க்கும் ரெண்டு ரூபாய்க்கும் மல்லு கட்ற மக்கள் இங்க ஒரு வார்த்தை கூட பேசாம கட்டிட்டு வர்றது. இவங்க கேட்டாலும் அவனுங்க கட்றதுனா கட்டு இல்லைனா டி.சி வாங்கிட்டு போ இப்ப்டி ஒரு நிர்வாகம் இதயெல்லம் பார்த்துட்டு ஆக்ஷன் எடுக்றேங்ர பேர்ல கண்துடைப்பு கமிட்டி அமைக்கிற அரசாங்கம்
கண்டிப்பா 2020ல இந்தியா முன்னேறிடும் சார் ஆனா யாரு எதுல எப்டின்னு மட்டும் யாரும் கேக்காதிங்க
ஏன்னா அதெல்லாம் பெரியவங்க விஷயம் :(
///
" ஆமா சார்... குறைச்சிட்டோம்..
ஸ்கூல் Fees 6500 ரூபா +
Donation 7000 ரூபா..! " ///
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு..!.. சரியாத்தான் இருக்கு...
///பணத்தை கட்டிட்டு பேசாம
வந்துட்டேன்..!//
சிங்கத்துக்கே இந்த நிலமையா????
///டேய்... யாருமே இல்லாத கடையில
யாருக்குடா " டீ " ஆத்தறீங்க..?!! ///
உங்க கோவம் புரியுது ஸார்...
@ Shalini(Me The First) said...
//// எங்க வீட்ல காலேஜ் ஃபீஸ விட ஸ்கூல் ஃபீஸ் ஜாஸ்தியா கட்றாங்க என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களான்னா எல்லாரும் கட்றாங்க நாம மட்டும் என்ன கேக்க முடியும்னு டயலாக்
வாசல்ல வர்ற கீரைகாரங்கள்ட்டயும், பழைய பேப்பர் காரங்கள்டயும் ஒரு ரூபாய்க்கும் ரெண்டு ரூபாய்க்கும் மல்லு கட்ற மக்கள் இங்க ஒரு வார்த்தை கூட பேசாம கட்டிட்டு வர்றது. இவங்க கேட்டாலும் அவனுங்க கட்றதுனா கட்டு இல்லைனா டி.சி வாங்கிட்டு போ இப்ப்டி ஒரு நிர்வாகம் இதயெல்லம் பார்த்துட்டு ஆக்ஷன் எடுக்றேங்ர பேர்ல கண்துடைப்பு கமிட்டி அமைக்கிற அரசாங்கம்
கண்டிப்பா 2020ல இந்தியா முன்னேறிடும் சார் ஆனா யாரு எதுல எப்டின்னு மட்டும் யாரும் கேக்காதிங்க
ஏன்னா அதெல்லாம் பெரியவங்க விஷயம் :(/////
100% ரைட்டு...
டேய்... யாருமே இல்லாத கடையில
யாருக்குடா " டீ " ஆத்தறீங்க..?!!//
ஏன் டீக்கடைக்காரன் டீ குடிக்க கூடாதா?
///டேய்... யாருமே இல்லாத கடையில
யாருக்குடா " டீ " ஆத்தறீங்க..?!! ///
சூப்பர் "டீ" டெயிலு
என்னோட பையன 2009ல ஸ்கூல் சேர்த்தப்ப, development fee (School or Student !!)னு சொல்லி ரூ.10000 /- வாங்கினாங்க..ரசீதும் தந்தாங்க..
"I voluntarily making donation of Rs.10000/-' னு இருந்திச்சு ரசீதுல..
இதெப்படி இருக்கு ?
என்ன கொடும சார் இது.....? (நீங்க பதிவு எழுதுறத சொல்லலீங்க, அந்த ஸ்கூலை சொன்னேன்)
என் மகன் ஸ்கூல் தேவலாம், போன வருடம் கூட வாங்கியதைத் திருப்பித் தந்து விட்டனர்!! போன வருட ஃபீஸையே இவ்வருட முதல் டெர்ம் ஃபீஸாக வாங்கியுள்ளனர்!!
இதே அனுபவம்தான் எனக்கும். போன வருசமெல்லாம் பள்ளிக் கட்டண விவரம் கேட்டு, கேட்டு சலிச்சுப் போனதுதான் மிச்சம். இன்னமும் எனக்கோ, மற்ற பெற்றோருக்கோ எதுக்கு, எவ்வளவு பணம் கட்டினோமினு தெரியாது. இந்த வருடம் இன்னும் காட்டணம் கட்ட போகலை. போனாதான் தெரியும் அங்க என்னென்ன கூத்துக்கள் அரங்கேறப்போகுதோ?! நினைக்கும்போதே பயமா இருக்கு
@ ஷாலினி.,
// வாசல்ல வர்ற கீரைகாரங்கள்ட்டயும்,
பழைய பேப்பர் காரங்கள்டயும்
ஒரு ரூபாய்க்கும் ரெண்டு ரூபாய்க்கும்
மல்லு கட்ற மக்கள் இங்க ஒரு வார்த்தை
கூட பேசாம கட்டிட்டு வர்றது. //
அவங்க கிட்ட மல்லு கட்றதே..
அதையெல்லாம் மிச்சம் பிடிச்சு
ஸ்கூல் பீஸ் கட்டலாம்னு தான்.. :-)
@ ஷாலினி.,
// எங்க வீட்ல காலேஜ் ஃபீஸ விட
ஸ்கூல் ஃபீஸ் ஜாஸ்தியா கட்றாங்க
என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களான்னா
எல்லாரும் கட்றாங்க நாம மட்டும்
என்ன கேக்க முடியும்னு டயலாக்//
இதுக்கு தான் கவர்மெண்ட்
கோவிந்தராஜன் கமிட்டின்னு
ஒண்ணு Form பண்ணிச்சு...
அது புஸ்ஸூ..!
அடுத்து ரவிராஜன் கமிட்டி
அதுவும் இப்ப புஸ்ஸோ. புஸ்ஸூ..!
@ ஷாலினி.,
// எங்க வீட்ல காலேஜ் ஃபீஸ விட
ஸ்கூல் ஃபீஸ் ஜாஸ்தியா கட்றாங்க //
ஒருவேளை உங்க வீட்ல காலேஜ்ல
படிக்கிற பொண்ணை விட., ஸ்கூல்ல
படிக்கிற பொண்ணு அதிகமா படிக்குதோ
என்னமோ.? :)
@ Mohamed.,
// சிங்கத்துக்கே இந்த நிலமையா???? //
ம்ம்... வேற வழி..!
அங்கெல்லாம் சிங்கம் சவுண்ட்
விட்டா அசிங்கமா போயிடும்..!
@ ரமேஷ்.,
// ஏன் டீக்கடைக்காரன் டீ குடிக்க கூடாதா? //
உங்க பிளாக்ல.. நீங்களே எழுதி.,
நீங்களே படிச்சிக்கிற மாதிரி..
டீக்கடைக்காரன் டீ குடிச்சா
தப்பில்ல தான்..
@ மாதவன்.,
// "I voluntarily making donation of
Rs.10000/-' னு இருந்திச்சு ரசீதுல..//
எங்க பையன் ஸ்கூல்லயும்
Building Fund-னு 5000 ரூபா வாங்கறாங்க..
ஸ்கூலுக்கு பக்கத்துல புதுசா
ஒரு மண்டபம் கட்டிட்டு இருக்காங்க..
இந்த Fund அந்த Building-குக்கான்னு
கேக்கலாம்னு சில சமயம் வார்த்தை
வாய் வரைக்கும் வந்துடும்.. ஆனா
கஷ்டப்பட்டு Control பண்ணிக்குவேன்.
@ பன்னிகுட்டி.,
// என்ன கொடும சார் இது.....?
( நீங்க பதிவு எழுதுறத சொல்லலீங்க,
அந்த ஸ்கூலை சொன்னேன் ) //
இந்த ஸ்கூல் மட்டுமில்லங்க..
ஊர்ல பல ஸ்கூல்ஸ் இப்படிதான்
இருக்கு.. நமக்கு பிடிக்கலைன்னா
வெளியே வந்து Govt.School-ல
சேர்ந்துக்க வேண்டியது தான்.. :(
@ மிடில்கிளாஸ் மாதவி.,
// என் மகன் ஸ்கூல் தேவலாம்,
போன வருடம் கூட வாங்கியதைத்
திருப்பித் தந்து விட்டனர்!! போன
வருட ஃபீஸையே இவ்வருட
முதல் டெர்ம் ஃபீஸாக வாங்கியுள்ளனர்!! //
பரவாயில்லையே.. ரொம்ப நல்ல
ஸ்கூலா இருக்கு..!
ஆமா இந்த ரவிராஜன் கமிட்டியை
கலைச்சிட்டா.. அப்ப Extra Fees
கேப்பாங்களா..?
@ ராஜி.,
// போன வருசமெல்லாம் பள்ளிக் கட்டண
விவரம் கேட்டு, கேட்டு சலிச்சுப் போனதுதான்
மிச்சம். இன்னமும் எனக்கோ, மற்ற
பெற்றோருக்கோ எதுக்கு, எவ்வளவு
பணம் கட்டினோமினு தெரியாது. //
ம்ம்.. எல்லோருடைய நிலமையும்
இதுதான்..
இதை பார்க்கும் போது MGR பாட்டு
ஓண்ணு ஞாபகம் வருது...
" திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது.. - அதை
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது..! "
"ஒரு மாசம் தொழிலுக்கு லீவு விடலாம்னு ஏன் சொல்றே கபாலி"
"ஸ்கூல் அட்மிஷன் டயம். யார் வீட்லேயும் பணம் இருக்காது."
அந்த ஸ்கூல்ல ஏன் அட்மிஷன் வேலையெல்லாம் ராத்திரி
வச்சிருக்காங்க?"
"அங்கே பகற்கொள்ளை நடக்குதுன்னு யாரும் சொல்லிடக்கூடாது
பாருங்க, அதனால்தான்." [குமுதம்]
@ ராயல் ரேஞ்சர்.,
// "ஸ்கூல் அட்மிஷன் டயம்.
யார் வீட்லேயும் பணம் இருக்காது." //
அப்ப ஸ்கூல்ல நம்ம கைவரிசையை
காட்லாமா கபாலி..?!
@மாலா
//ஒருவேளை உங்க வீட்ல காலேஜ்ல
படிக்கிற பொண்ணை விட., ஸ்கூல்ல
படிக்கிற பொண்ணு அதிகமா படிக்குதோ
என்னமோ.? :)
//
ஆமங்க நான் 5 பேப்பர் எழுதுறன் ஆனா அவ 11 பேப்பர் எழுதுறாளே !
ச்சே இந்த ஆங்கிள்ள நான் தின்க் பண்ணவே இல்லை.
ஏங்க இம்பூட்டு அறிவா இருக்கீங்க அப்றம் ஏங்க உங்கள விட்டுட்டு இந்த அனுவ போயி தலைவி, கொழவின்னு சொல்லிட்டு இருக்காங்க
அண்ணே நீங்க ரொம்ப தேவலாம் என் தங்கச்சி குழந்தை முதல் வகுப்பு கட்டணம் எவ்ளோ தெரியுமா அதிகம் இல்ல 20000 + book fees 5000 + uniform 3000 + bus fees 800 per month X 12 + term fees.... கூட்டி கழிச்சி பாருங்கள் தல சுத்தும்...
@Mohamed Faaique
//100% ரைட்டு...//
என்ன நஜிப் பாய், கொலும்புலருந்து தூத்துக்குடிக்கு ஷிப் சர்வீஸ் தானே விட்ருக்காங்க இல்ல பஸ் சர்வீஸா? ;-)
Post a Comment