கறுப்பு பணம்.. கறுப்பு பணம்..,
கறுப்பு பணம்..! இப்பல்லாம்
எங்கே திரும்பினாலும் இதே
பேச்சா இருக்கு..!
பாபா ராம்தேவ் ரெண்டு நாளா
உண்ணாவிரதம் இருக்கறாரு..
கேட்டா.. சுவிஸ் Bank-ல இருக்குற
கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு
கொண்டு வரணும்னு சொல்றாரு..
அட இதாவது டெல்லி மேட்டர்.
பரவால்ல...
நேத்து எங்க ஊர் டீ கடையில
ஒரு டீ குடிச்சிட்டு 10 ரூபா குடுத்தா..
அந்த கடைக்காரன் ( கடன்காரன் பாவி )
" சார்.. இது கறுப்பு பணமா சார்..? "
" டேய்... என்னடா சொல்ற..?! "
" இல்ல சார்.. நோட்டெல்லாம்
ஒரே மையா இருக்கே.. அதான்
கேட்டேன்னு " சொல்றான்..!
( அடப்பாவி..! இவ்ளோ நாளும்
இதை தான் கறுப்பு பணம்னு
நினைச்சிட்டு இருந்தியா..?! )
சரி.. மேட்டர்க்கு வருவோம்..
இந்தியர்களோட கறுப்பு பணம்
சுவிஸ் Bank-ல எவ்ளோ இருக்கு
தெரியுமா..?
அதிகமில்ல ஜென்டில்மேன்..
Just $ 1.456 Trillion தான்..
( பத்திரமா இருக்கட்டுமேன்னு
அங்கிட்டு போட்டு வெச்சிருந்தா..,
அதை போயி... தப்பா பேசிகிட்டு.. )
1.456 Trillion-ஐ நான் இந்திய ரூபால
Convert பண்ணறதுக்காக Calculator-ல
தட்டி பார்த்தேனா... முடியல..
655-க்கு அப்புறம் நிறைய, நிறைய
சைபர்கள் வந்தது.. எனக்கு வேற
3 லட்சத்துக்கு மேல எண்ண தெரியாதா..
( ஹி., ஹி..! )
அதனால பெ.சொ.விக்கு ஒரு போன்
போட்டு கேட்டேன்.. அவர் அவரு Wife-ஐ
கேட்டு 65.5 லட்சம் கோடின்னு வருதுன்னு
கரெக்டா சொல்லிட்டாரு..!
( சுத்தம்.. அங்கேயும் அதான் லட்சணமா.?! )
அப்புறம் இன்னொரு சந்தோஷமான
விஷயம்.. அதிகமா கறுப்பு பணம்
வெச்சிருக்குற லிஸ்ட்ல
இந்தியாவுக்கு தான் 1st Place..
India---- $ 1.456 Trillion ( 65.5 லட்சம் கோடிகள் )
Russia--- $ 0.47 Trillion ( 21 லட்சம் கோடிகள் )
UK----- $ 0.39 Trillion ( 17.55 லட்சம் கோடிகள் )
Ukraine- $ 0.10 Trillion ( 4.5 லட்சம் கோடிகள் )
China--- $ 0.09 Trillion ( 4.05 லட்சம் கோடிகள் )
( நல்லா கவனிங்க.. அந்த பிச்சைக்கார
அமெரிக்கா பசங்க Top 5 -ல இல்லவே இல்ல )
நடு டிஸ்கி : இந்தியாவின் வெளிநாட்டு கடன்
5.03 லட்சம் கோடி ( $ 0.112 Trillion ).
கறுப்பு பணம் எவ்ளோ இருக்கு.,
எங்கே இருக்குன்னு எல்லோருக்கும்
தெரியுது.. ஆனா அதை இந்தியாவுக்கு
கொண்டு வர ஒருத்தர்க்கும் வழி தெரியலை..
ம்ம்..! இதுக்கெல்லாம் என்னை மாதிரி
ஒரு ஜீனியஸ்கிட்ட ஐடியா கேக்கணும்ல..!!
Swiss Bank-ல் இருக்கற கறுப்பு பணத்தை
இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..
" ஏரோப்பிளேன் தான்..! "
நோ., நோ.. யாரும் அழக்கூடாது..!
( ஆனந்த கண்ணீர்..!! )
இதெல்லாம் நம்ம கடமைப்பா..!
டிஸ்கி : என்னடா இது.. Finishing-ல
காமெடி பண்ணிட்டானேன்னு
நினைக்காதீங்க...
Swiss Bank-ல கறுப்பு பணம்
வெச்சிருக்கிறவங்கிட்டயே போயி..
" கறுப்பு பணத்தை இங்கே கொண்டு வர
சட்டம் போடு "ன்னு சொல்றதை விடவா
இது காமெடி..?!!.
.
. Tweet
57 Comments:
@வெங்கட்
பாஸ் நீங்க ஒரு கடமை வீரர் பாஸ்!
நையாண்டியுடன் தங்கள் பார்வை அருமை...
கருப்பு பணம் என்று ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன் படப்போகிறதோ...
ஏரோப்ளேனுக்கு லோட் லிமிட் இருக்கு..
இவ்ளோ பாராம் தாங்காது..
வேற வழி சொல்லுங்க..
நல்ல பார்வை... ஆனா கருப்பு பணம் திரும்ப வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை...
//அதனால பெ.சொ.விக்கு ஒரு போன்
போட்டு கேட்டேன்.. அவர் அவரு Wife-ஐ
கேட்டு 65.5 லட்சம் கோடின்னு வருதுன்னு
கரெக்டா சொல்லிட்டாரு..! //
யாரைப் பார்த்து wifeகிட்ட கேட்டு பதில் சொன்னார்னு சொல்றீங்க. நாங்க என்ன அவ்ளோ யோசிக்கத் தெரியாத ஜன்மமா என்ன?..........................UKG படிக்கிற என் பொண்ணுகிட்ட பதில் சொன்னேனாக்கும்!
//இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..
" ஏரோப்பிளேன் தான்..! "//
சரியா சொன்னீங்க, வெங்கட்!Swiss-ல இருக்கற பணத்துல பாதி உங்களோடதுதானாமே? அதை எப்படியும் ஏரோப்லேனிலதான் கொண்டுபோய் இருப்பீங்க, அதான் சரியான வழி சொல்றீங்க!
//" இல்ல சார்.. நோட்டெல்லாம்
ஒரே மையா இருக்கே.. அதான்
கேட்டேன்னு " சொல்றான்..!
//
இதுக்குதான், கோவிலுக்கு போனா சாமி கும்பிட்டுட்டு வந்துடனும். அதை விட்டுட்டு பூசாரி நீட்டற கற்பூரத் தட்டுலேர்ந்து பணத்தை எடுத்து வந்தா, அதில இருக்கற கரி நோட்டுல ஒட்டி கருப்பு பணமாதான் தெரியும்.
// Shalini(Me The First) said...
@வெங்கட்
பாஸ் நீங்க ஒரு கடமை வீரர் பாஸ்!//
எனக்கு என்னமோ, "நீங்க ஒரு விலேஜ் விஞ்ஞானி பாஸ்"னு சொல்றா மாதிரியே கேக்குது!
:)
பெசொவி said...
// Shalini(Me The First) said...
@வெங்கட்
பாஸ் நீங்க ஒரு கடமை வீரர் பாஸ்!//
எனக்கு என்னமோ, "நீங்க ஒரு விலேஜ் விஞ்ஞானி பாஸ்"னு சொல்றா மாதிரியே கேக்குது!
:)//
எனக்கும் அப்படித்தான் தோணுது..ஹிஹி
///நேத்து எங்க ஊர் டீ கடையில
ஒரு டீ குடிச்சிட்டு 10 ரூபா குடுத்தா..
/
வீட்டுல டீ ஆத்துரதே நீங்கதானே!!! பிறகு எதுக்க்கு கடையில... ஓ.. உங்க டீ எப்படி இருக்கும்’னு உங்களுக்கு நல்லாவே தெரியுமே!!!!
///அந்த கடைக்காரன் ( கடன்காரன் பாவி )////
உங்கள நம்பி கடன் கொடுத்திருக்கான்..அவன போயி “பாவி”னு சொல்ரீங்களே!!!
///சரி.. மேட்டர்க்கு வருவோம்.. ///
உங்க பதிவுல இப்படியெல்லாம் ஒரு வரியா????? நம்ப முடியல...
///1.456 Trilllion-ஐ நான் இந்திய ரூபால
Convert பண்ணறதுக்காக Calculator-ல
தட்டி பார்த்தேனா... முடியல..///
முடியல.. இல்ல சார் “தெரியல”னு சொல்லுங்க....
///655-க்கு அப்புறம் நிறைய, நிறைய
சைபர்கள் வந்தது.. எனக்கு வேற
3 லட்சத்துக்கு மேல எண்ண தெரியாதா..
( ஹி., ஹி..! )///
3 லட்சம் வர என்ன தெரியுமா????
கழுதை மேய்ய்கிற பையனுக்கு எவ்ளோ அறிவு பாரே!!! இத நான் சொல்லல...... கவுண்டமனி சொல்ராரு... (நீ எப்போ சொந்தமா சொல்லியிருக்கே!!!)
////அதிகமா கறுப்பு பணம்
வெச்சிருக்குற லிஸ்ட்ல
இந்தியாவுக்கு தான் 1st Place..//
இதெல்லாம் யாருங்க, இது கருப்பு பணம், இது வெள்ளை பணம், இது கலர் பணம்’னு பிரிச்சு கணக்கு போடுரது?????? (இது ஒரு சீரியஸ் கேள்வி...)
///Swiss Bank-ல் இருக்கற கறுப்பு பணத்தை
இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..
" ஏரோப்பிளேன் தான்..! "///
அதே டவுட்டு.... கழுதை மேய்க்கிற பையனுக்கு......
///
நோ., நோ.. யாரும் அழக்கூடாது..! //
அழுரதா???? கொலை வெறி ஸார்.. எங்கயாவது ஓடி ஒழிஞ்சுருங்க......
// Shalini(Me The First) said...
@வெங்கட்
பாஸ் நீங்க ஒரு கடமை வீரர் பாஸ்!//
எனக்கு என்னமோ, "நீங்க ஒரு விலேஜ் விஞ்ஞானி பாஸ்"னு சொல்றா மாதிரியே கேக்குது!////
ரிப்பீடு’க்கே ரிப்பீட்டு
(ஏலே!! கூகுல் காரனுங்களா!! அவசரமா,ப்லாக்’ல ஒரு "LIKE" Button வைங்கப்பா.....)
@பெ.சொ.வி
//எனக்கு என்னமோ, "நீங்க ஒரு விலேஜ் விஞ்ஞானி பாஸ்"னு சொல்றா மாதிரியே கேக்குது!
:)//
தமிழ் நம்ம தாய்மொழி. அதுல கூடவா எழுதும்போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்?
#இது என்னொட கமெண்ட் இல்லப்ப ;)
//சரியா சொன்னீங்க, வெங்கட்!Swiss-ல இருக்கற பணத்துல பாதி உங்களோடதுதானாமே? அதை எப்படியும் ஏரோப்லேனிலதான் கொண்டுபோய் இருப்பீங்க, அதான் சரியான வழி சொல்றீங்க!//
எங்களோடதுதான்! (VAS). ஏன்னா VAS னா நாட்டு மக்கள்னு அர்த்தம். புரிலைங்களா, நாட்டு மக்கள் எல்லோருமே VAS தான. அதனால நாட்டு மக்களோட பணம்தான் அது. நீங்க சொன்னது ரொம்ப சரி :-)
//விட்டுட்டு பூசாரி நீட்டற கற்பூரத் தட்டுலேர்ந்து பணத்தை எடுத்து வந்தா, அதில இருக்கற கரி நோட்டுல ஒட்டி கருப்பு பணமாதான் தெரியும்.//
அதுல இருந்து எடுக்குறது மட்டும் கருப்பா இருக்காது அண்ணா. அப்படியே நீங்க சொல்லுற மாதிரியே வச்சிட்டாலும் அப்படி கருப்பா போன நோட்டு செல்லாதுன்னு நல்ல நோட்ட அவருக்கு கொடுத்திட்டு இப்படி நோட்ட எங்க தல வாங்கிட்டு வந்திருப்பார்..
//வீட்டுல டீ ஆத்துரதே நீங்கதானே!!! பிறகு எதுக்க்கு கடையில... ஓ.. உங்க டீ எப்படி இருக்கும்’னு உங்களுக்கு நல்லாவே தெரியுமே!!!!///
நீங்க கூடத்தான் ப்ளாக் எழுதறீங்க , அப்படின்னா உங்க ப்ளாக் நல்லா இல்லாமதான் மத்தவங்க ப்ளாக் படிக்கிறீங்கன்னு அர்த்தமா ?
//Blogger Mohamed Faaique said...
///சரி.. மேட்டர்க்கு வருவோம்.. ///
உங்க பதிவுல இப்படியெல்லாம் ஒரு வரியா????? நம்ப முடியல...//
அது வரி இல்லைங்க.. எழுத்து... என்ன கொடுமை இது, வரிக்கும் எழுத்துக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது ..?!
@ரமேஷ்
//எனக்கும் அப்படித்தான் தோணுது..ஹிஹி
//
போலீஸ் உங்களுக்கு “சொர்க்கத்தில் நரி” இந்த கதை தெரியுமா? ;)
@ Md.Faaique
//
ரிப்பீடு’க்கே ரிப்பீட்டு
(ஏலே!! கூகுல் காரனுங்களா!! அவசரமா,ப்லாக்’ல ஒரு "LIKE" Button வைங்கப்பா...//
election தான் முடிஞ்சு போச்சே அப்றம் என்ன?
Swiss Bank-ல் இருக்கற கறுப்பு பணத்தை
இந்தியாவுக்கு கொண்டு வர ஒரே வழி..
" ஏரோப்பிளேன்" தான்!///ஆங் இல்லீங்க!ஏரோப்பிளேனுல கொண்டுட்டு வந்தா சீக்கிரமா(பன்னெண்டு மணி நேரம்)வந்துடும்!அதனால சைக்கிள் ரிக்க்ஷா வச்சுத் தான் கொண்டு வரணும்!அது வந்து சேர்றப்ப எலெக்சனும் வந்துடும்!எப்புடி ஐடியா?
இங்க எல்லாத்துக்கும் அந்த ஆசை இருக்கு, அப்பத்தானே சுளுவா இன்னும் கொள்ளை அடிக்க முடியும், விசயம் என்னன்னா அந்த ஊரு பேங்க்காரங்க குடுக்க மாட்டங்க, ஏன்னா அவங்க சுபிட்சமா இருக்குறதே இந்த பணத்தால்தான்.
அத வெளிய சொல்லி ஏன் அசிங்க படணும்ன்னு தான் நம்ம ஊரு பெரிய மனுசனுங்க எதை எதையோ பேசிக்கிட்டு திரியிறாங்கே
Shalini(Me The First) said...
@வெங்கட்
பாஸ் நீங்க ஒரு கடமை வீரர் பாஸ்!////
அவர் என்ன எழுதினாலும், புரியுதோ புரியலையோ, வந்து அவர உசுப்பேத்துற இந்த மாதிரி கமென்ட் போடற நீங்கதான் சிறந்த கடமை வீராங்கனை.:)
ஏரோப்பிளேன் தான்..! "
நோ., நோ.. யாரும் அழக்கூடாது..!///
ச்சே ச்சே நாங்க எதுக்கு அழ போறோம்?... உங்கள நெனச்சு பரிதாபப்படத்தான் முடியும்...:)
@ shalini
election தான் முடிஞ்சு போச்சே அப்றம் என்ன?///
VAS கூடதான் முடிஞ்சு போச்சு... இருந்தாலும் பழக்கதோசத்துல நீங்க வந்து அடி வாங்குறதில்ல....:)
அண்ணே எல்லா பணத்தையும் கொண்டுவர ஏரோப்ளேன் தாங்குமா? அதவிட கப்பல் நல்ல ஐடியா இல்ல?
இத விட ஈசி யான வழி "சுவிஸ் பேங்க் owner பொண்ண உசார் பண்ண போதும் "
-கருப்பா இருந்தாலும் கருத்தா யோசிப்போர் சங்கம்
இரண்டாவது விஜயகாந்தா மாற ஆசையா? புள்ளீவிவரமெல்லாம் குடுக்குறீங்களே அதான்??!!
@ஷாலினி
//பாஸ் நீங்க ஒரு கடமை வீரர் பாஸ்//
உங்க பாஸ் கடையில இருக்கிற மை-ய திருடிட்டு ஓடுனவருன்றத சூசகமா சொல்ற உங்க நேர்மை பிடிச்சிருக்கு..
@ ஷாலினி.,
// பாஸ் நீங்க ஒரு கடமை வீரர் பாஸ்! //
துப்பாக்கில இருந்து கிளம்பின
தோட்டாவை நிறுத்த முடியாது...
கடமைன்னு வந்துட்டா வெங்கட்டை
தடுக்க முடியாது..!
ஹி., ஹி., ஹி...!!
@ கவிதை வீதி.,
// கருப்பு பணம் என்று ஆக்கபூர்வமான
விஷயங்களுக்கு பயன் படப்போகிறதோ. //
நீங்க வேணா எழுதி வெச்சிக்கோங்க
பாஸ்..
அடுத்த வருஷம் செப்டம்பர் 31-ம்
தேதி சுவிஸ் பேங்க்ல இருக்குற
எல்லா கறுப்பு பணமும்
இந்தியாவுக்கு வந்துடும்..
@ மாதவன்.,
// ஏரோப்ளேனுக்கு லோட் லிமிட்
இருக்கு.. இவ்ளோ பாராம் தாங்காது..
வேற வழி சொல்லுங்க.. //
ஐடியா சொன்ன எங்களுக்கு
இந்த சின்ன மேட்டர் தெரியாதா..?
நீங்க சொல்றது Passenger Plane..
நாங்க சொல்றது Goods Plane..
ஒரு பிளைனுக்கு பின்னாடி
50 - 60 பெட்டி ஜாயின் பண்ணி
இருக்கும்.. அதான் Goods Plane..
நீங்க இந்த Goods Train பாத்து
இருக்கீங்கல்ல.. அது மாதிரி.,
நெட் பாங்கிங்க்கு கறுப்புக் கலர் வெள்ளையானா பிடிக்காதா?!!
@ சங்கவி.,
// ஆனா கருப்பு பணம் திரும்ப வரும்
என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை //
சே., சே.. இப்படியெல்லாம் பட்னு
ஒரு முடிவுக்கு வந்துட கூடாது..
நாம வேணா.. தினமும்
நைட் 9 மணில இருந்து
பகல் 9 மணி வரை உண்ணாவிரதம்
இருந்து கறுப்பு பணத்தை கொண்டு
வர சொல்லி போராடலாமா..?!!
@ பெ.சொ.வி.,
// Swiss-ல இருக்கற பணத்துல
பாதி உங்களோடது தானாமே? //
ஆமாங்க.. அப்படியே இதை வந்து
சுவிட்சர்லாந்து பிரதமர் கிட்ட எடுத்து
சொல்லி என் பணத்தை வாங்கி
குடுத்தீங்கன்னா.. 10% கமிஷன்
தர்றேன்..
@ பெ.சொ.வி.,
// இதுக்குதான், கோவிலுக்கு போனா
சாமி கும்பிட்டுட்டு வந்துடனும். அதை
விட்டுட்டு பூசாரி நீட்டற கற்பூரத்
தட்டுலேர்ந்து பணத்தை எடுத்து வந்தா,
அதில இருக்கற கரி நோட்டுல ஒட்டி
கருப்பு பணமாதான் தெரியும். //
கோவில் வாசல்ல உக்காந்து பிச்சை
எடுக்குற உங்களுக்கு இருக்குற அறிவு..
கோவிலுக்கு உள்ளே போற எங்களுக்கு
இல்ல பாருங்க..
அப்படியே புல்லரிக்க வெச்சிட்டீங்க..!
@ ரமேஷ்.,
// எனக்கும் அப்படித்தான் தோணுது..
ஹிஹி //
சொந்தமா பதிவு போடத்தான் வக்கில்ல..
Atleast கமெண்ட்டாவது சொந்தமா
போடலாமில்ல.. அதையும் ரிப்பீட்டு
போடணுமா..?!
@ Mohamed.,
// உங்கள நம்பி கடன் கொடுத்திருக்கான்.. //
கடன்காரன்னா. கடன் கொடுத்தவனா.?
அப்ப
பிச்சைக்காரன்னா பிச்சை போடுறவனா.?
உளர்றதுக்கு ஒரு லிமிட்டே
இல்லையா..?!
@ Mohamed.,
// உங்க பதிவுல இப்படியெல்லாம்
ஒரு வரியா????? நம்ப முடியல... //
நான் என்ன Mohamed ஒரு அறிவாளி.,
நல்லவரு., வல்லவருன்னா எழுதிட்டேன்..
நம்ப முடியலைன்னு சொல்றீங்க..?!
@ Mohamed.,
// இதெல்லாம் யாருங்க,
இது கருப்பு பணம்,
இது வெள்ளை பணம்,
இது கலர் பணம்’னு பிரிச்சு
கணக்கு போடுரது??????
(இது ஒரு சீரியஸ் கேள்வி...) //
ஒட்டகத்துக்கு பல்லு விளக்கி விடற
பையனுக்கு எவ்ளோ அறிவு பாரேன்..!
இத கவுண்டமணி சொல்லல...
நான் தான் சொல்றேன்..!
@ Mohamed.,
// (ஏலே!! கூகுல் காரனுங்களா!!
அவசரமா,ப்லாக்’ல ஒரு "LIKE" Button
வைங்கப்பா.....)//
ஆமாம்பா.. கூகுள் கம்பெனி ஓனர்
சொல்லிட்டாரு.. உடனே ஒரு
" LIKE " Button வைங்கப்பா.....
@ செல்வா.,
// நீங்க கூடத்தான் ப்ளாக் எழுதறீங்க ,
அப்படின்னா உங்க ப்ளாக் நல்லா
இல்லாமதான் மத்தவங்க ப்ளாக்
படிக்கிறீங்கன்னு அர்த்தமா ?//
செல்வா..! அப்டி போடு அருவாளை..!
@ Mohamed..,
நீங்க பிளாக் பிளாக்கா ஏன் சுத்திட்டு
இருக்கீங்கன்னு இப்ப தான் தெரியுது..!
@ ஷாலினி.,
// போலீஸ் உங்களுக்கு “சொர்க்கத்தில் நரி”
இந்த கதை தெரியுமா? ;) //
அவருக்கு தெரியாது விட்டுடுங்க..
பாவம்...
ஏன்னா.. ரமேஷ் சின்ன வயசா
இருக்கும் போது.. ( கிட்டதட்ட
40 - 42 வருஷத்துக்கு முன் )
அவங்க மிஸ் இந்த கதை சொல்லி
குடுத்துட்டு இருக்கும் போது பக்கத்து
பெருமாள் கோவில்ல சுண்டல்
தர்றாங்கன்னு.. அதை வாங்க
ஓடி போயிட்டாரு..!
@ யோகா.,
// ஆங் இல்லீங்க.! ஏரோப்பிளேனுல
கொண்டுட்டு வந்தா சீக்கிரமா
(பன்னெண்டு மணி நேரம்) வந்துடும்!
அதனால சைக்கிள் ரிக்க்ஷா வச்சுத்
தான் கொண்டு வரணும்! அது வந்து
சேர்றப்ப எலெக்சனும் வந்துடும்!
எப்புடி ஐடியா?//
வாவ்.. என்ன ஒரு Brilliant Idea..!!
ஆமா நீங்க எதாவது நம்ம
பிரதமர்கிட்ட P.A-வா இருக்கீங்களா..?
சிலசமயம் அவரு சொல்ற விஷயம்
எல்லாம் நீங்க சொன்ன இந்த ஐடியா
மாதிரியே இருக்கே.. அதான் கேட்டேன்..!
@ ரமேஷ் பாபு.,
// விசயம் என்னன்னா அந்த ஊரு
பேங்க்காரங்க குடுக்க மாட்டங்க,
ஏன்னா அவங்க சுபிட்சமா இருக்குறதே
இந்த பணத்தால்தான். //
என்ன இப்படி சொல்லிட்டீங்க...
நம்ம அரசியல்வாதிங்க எல்லோரும்
ஒட்டு மொத்தமா போயி பணத்தை
கேட்டா.. அவங்க கண்டிப்பா
குடுத்து தான் ஆகணும்..
பின்ன Deposit பண்ணினவங்க
வந்து பணததை திருப்பி கேக்கும்
போது தர மாட்டோம்னா சொல்ல
முடியும்..?
உங்களையும் பாதிச்சிருக்கா இந்த விவகாரம் ?? :)
//அடுத்த வருஷம் செப்டம்பர் 31-ம்
தேதி சுவிஸ் பேங்க்ல இருக்குற
எல்லா கறுப்பு பணமும்
இந்தியாவுக்கு வந்துடும்..//
அது என செப் 31??? adhu 3011 வந்தாலும் நடக்காது!!
//ஒரு பிளைனுக்கு பின்னாடி
50 - 60 பெட்டி ஜாயின் பண்ணி
இருக்கும்.. அதான் Goods Plane..
//
பாஸ் உங்கள என்னமோனு நெனச்சிட்டேன் :D
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்
அன்பு அன்னா,
நான் இலங்கையிலிருந்து கிரிஷ்,
நேற்றுத்தான் உங்கள் பதிவுகளை பற்றி அறிந்தேன்,சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஒரே மூச்சில் உங்கள் 221 பதிவுகளையும்
படித்தேன் .சிரித்தே வயிறு புன்னானது.மிகவும் சந்தோஷமாய் மணித்தியாலங்களை கழித்தேன்.மிக்க நன்றி,இனி தவறாமல் உங்கள் பதிவுகளை பார்வையிடுவேன்.
@ கார்த்தி.,
// அவர் என்ன எழுதினாலும், புரியுதோ
புரியலையோ, வந்து அவர உசுப்பேத்துற
இந்த மாதிரி கமென்ட் போடற நீங்கதான்
சிறந்த கடமை வீராங்கனை.:) //
யார் வந்தாங்களோ., வரலையோ..
வந்து.. நாங்களே பாவம்னு விட்டாகூட
எங்களை உசுப்பேத்தி அடி வாங்கிட்டு
போற நீங்க கூட ஒரு சிறந்த
கடமை வீரர்தான்.. :)
@ பன்னிகுட்டி.,
// அண்ணே எல்லா பணத்தையும்
கொண்டுவர ஏரோப்ளேன் தாங்குமா?
அதவிட கப்பல் நல்ல ஐடியா இல்ல? //
இந்த ஐடியாவையும் தான் யோசிச்சோம்..
ஆனா நேத்து தான் World Map எடுத்து
சுவிட்ஸர்லாந்து எங்கே இருக்குன்னு
பாத்தேன்..
நான் எதோ அது ஆஸ்திரேலியாவுக்கு
பக்கத்துல இருக்குமாக்கும்னு தேடினா..
அது இந்தாண்டை ஜெர்மனி பக்கத்துல
இருக்கு..
SO., அவ்ளோ தூரம் கடல் வெட்டணும்னா
நிறைய செலவாகும்.. அதனால வேண்டாம்..!
@ ராயல் ரேஞ்சர்.,
// இத விட ஈசி யான வழி
"சுவிஸ் பேங்க் owner பொண்ண
உசார் பண்ண போதும் " //
தப்பு தப்பா யோசிக்கிறீங்களே..
சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட்
வெச்சிருக்குறவரு பொண்ணை
உசார் பண்ணனும்..! :)
@ ராஜி.,
// இரண்டாவது விஜயகாந்தா மாற
ஆசையா? புள்ளீவிவரமெல்லாம்
குடுக்குறீங்களே அதான்??!! //
கொஞ்சம் விட்டா விஜயகாந்த் தான்
Statistics-ஐ கண்டுபிடிச்சார்னு
சொல்லுவீங்க போல...
@ அனு.,
// உங்க பாஸ் கடையில இருக்கிற
மை-ய திருடிட்டு ஓடுனவருன்றத
சூசகமா சொல்ற உங்க நேர்மை பிடிச்சிருக்கு.. //
கடைக்காரன் என்னை பிடிக்க துரத்திட்டு
வந்த Gap-ல் நைசா கல்லாபெட்டியை
தூக்கிட்டு ஓடுனீங்களே.. எவ்ளோ
தேறிச்சு...!!
புதுசா வாங்கின Nokia E7 ( Rs 30000 )
அதுல வாங்கினது தானே..
எனக்கு தெரியும்..! :)
@ ஷம்ஹிதா.,
// அது என செப் 31??? adhu
3011 வந்தாலும் நடக்காது!! //
அதானே நானும் சொல்லி இருக்கேன்..
Atleast 3011-வது ஆயிரம் வருஷம்
கழிச்சு வரும்.. ஆனா Sep 31 எந்த
காலத்துலயும் வராது..
// நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி
பாஸ் //
நீங்க எல்லாம் புகழறதை பாத்தா..
இந்த வருஷமும் " Nobel Prize "
நமக்கு தான் போல தெரியுதே..
இப்பவே வீட்ல ஏழெட்டு " Nobel Prizes "
இருக்கே..!!.. ம்ம்.., சரி.., அதையெல்லாம்
தூக்கி பழைய இரும்பு கடைக்கு போட
வேண்டியது தான்..
@ க்ரிஷ்.,
// ஒரே மூச்சில் உங்கள் 221 பதிவுகளையும்
படித்தேன். சிரித்தே வயிறு புன்னானது.
மிகவும் சந்தோஷமாய் மணித்தியாலங்களை
கழித்தேன். //
" சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி
பார்க்கிறது தான்..! "
இப்ப உங்களால எனக்கும் சந்தோஷம்
க்ரிஷ்..
ஆமா பதிவுகளை படிக்கும் போது
கமெண்ட்ஸும் சேர்த்து படிச்சீங்களா..?
படிக்காவிட்டால்.. அதையும் படிக்கவும்..
//வெங்கட் said...
சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட்
வெச்சிருக்குறவரு பொண்ணை
உசார் பண்ணனும்..! :)
//
அது கூடத்தான் பல நேரங்கள்ல பிரச்சினை ஆயிடுது, புரியுதா ராசா?
" venkat
//அடுத்த வருஷம் செப்டம்பர் 31-ம்
தேதி சுவிஸ் பேங்க்ல இருக்குற
எல்லா கறுப்பு பணமும்
இந்தியாவுக்கு வந்துடும்..//
//Atleast 3011-வது ஆயிரம் வருஷம்
கழிச்சு வரும்.. ஆனா Sep 31 எந்த
காலத்துலயும் வராது..
//
எப்பதான் நல்ல போஸ்டா போடப் போறீங்கன்னு கேட்டப்ப, சுவிஸ் Bankலேர்ந்து கருப்பு பணம் வந்தப்புறம் எழுதுவேன்னு சொன்னீங்களே, இந்த நம்பிக்கையிலதானா?
டெரர் பினிசிங்... செம கலாய்...
Post a Comment