பாரதி பாடின மாதிரி..
இன்னிக்கு இந்தியாவுல பார்த்தீங்கன்னா
ஆட்சி., அதிகாரம் ரெண்டும் பெண்கள்கிட்ட
தான் இருக்கு..!
( South-ல ' அம்மா ' ஜெயலலிதா )
( East-ல ' அக்கா ' மம்தா பானர்ஜி )
( North-ல ' சகோதரி ' மாயாவதி )
( Capital-ல ' ஆன்டி ' ஷீலா தீட்சித் )
( Centre-ல ' மேடம் ' சோனியா )
( ராஷ்ட்ரபதிபவன்ல ' பாட்டிமா ' பிரதீபா பாட்டில் )
( Parliment-ல ' சபாநாயகர் ' மீரா குமார் )
( Parliment-ல ' எதிர்கட்சி தலைவர் '
சுஷ்மா சுவராஜ் )
சுஷ்மா சுவராஜ் )
ஆஹா.. வீட்ல தான் " மனைவி ஆட்சி "
நடக்குதுன்னா.. நாட்லயும் பெண்கள்
ஆட்சி தானா..?
( தலைவரே " அப்ப நாமெல்லாம் ஆணா பொறந்து
வீணா போயிட்டோமா..?! "
" அவனே இந்த லிஸ்ட்ல கனிமொழியையும்,
நீரா ராடியாவையும் சேர்க்காம விட்டானேன்னு
நான் சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன். நீ வேற..! " )
வீணா போயிட்டோமா..?! "
" அவனே இந்த லிஸ்ட்ல கனிமொழியையும்,
நீரா ராடியாவையும் சேர்க்காம விட்டானேன்னு
நான் சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன். நீ வேற..! " )
.
.
Tweet
30 Comments:
ஹிஹி அவங்களையும் சேர்க்கிறது...
சும்மா சேர்த்து பாருங்களேன் பாஸ்..மைனஸ் ஒட்டு பிச்சிக்கும்...
இன்னும் பிரபலமாகிடுவீங்க ஹிஹி
பதிவு படங்களுடன் கலக்கி..சீ கலக்கல்
அடடா இத்தனை பெண்களா அதிகாரத்தில் இருக்கிறார்கள்? கடைசியில் இவர்களையும் கோர்த்து விட்டு குறும்பு பண்ணிட்டீங்களே!
ஹி.ஹி.ஹி........ கலைஞரை சந்தோசப் படுத்திய வெங்கட் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் .
@ சிவா.,
// ஹிஹி அவங்களையும் சேர்க்கிறது...
சும்மா சேர்த்து பாருங்களேன் பாஸ்.. //
சேர்த்தாலும் தப்பில்ல பாஸ்..
ராஜாவுக்கு தான் " டெலிகாம் மந்திரி "
பதவி குடுக்கணும்னு திமுக தலைமையை
கேக்கற அளவு அதிகாரம் கனிமொழிக்கு
இருந்தது..
யார் யார்க்கு என்னென்ன மந்திரி பதவி
குடுக்கணும்னு மன்மோகன் சிங்குக்கே
லிஸ்ட் குடுக்கிற அளவு நீரா ராடியாவுக்கு
அதிகாரம் இருந்துச்சு.!!
ஆமா.. ஆமா..
சும்மாவா சொன்னாங்க..
'பெண் புத்தி,பின் புத்தி'னு..
// வெங்கட் said...
@ சிவா.,
// ஹிஹி அவங்களையும் சேர்க்கிறது...
சும்மா சேர்த்து பாருங்களேன் பாஸ்.. //
சேர்த்தாலும் தப்பில்ல பாஸ்..
ராஜாவுக்கு தான் " டெலிகாம் மந்திரி "
பதவி குடுக்கணும்னு திமுக தலைமையை
கேக்கற அளவு அதிகாரம் கனிமொழிக்கு
இருந்தது..
யார் யார்க்கு என்னென்ன மந்திரி பதவி
குடுக்கணும்னு மன்மோகன் சிங்குக்கே
லிஸ்ட் குடுக்கிற அளவு நீரா ராடியாவுக்கு
அதிகாரம் இருந்துச்சு.!! //
ஒத்துக்கறோம்.. உங்க மீசையில மண் ஒட்டவே இல்லை..
பாஸ்....
வர வர உங்க GK வளர்ந்து கொண்டே போகுது... நீங்க எங்கயோ போயிட்டீங்க....
விஜய சாந்தி, இன்னும் பலரை மிஸ் பண்ணிடீங்க பாஸ்...
//யார் யார்க்கு என்னென்ன மந்திரி பதவி
குடுக்கணும்னு மன்மோகன் சிங்குக்கே
லிஸ்ட் குடுக்கிற அளவு நீரா ராடியாவுக்கு
அதிகாரம் இருந்துச்சு.!!// சரி! "கனி"க்கு? களி திங்கக் குடுக்குற அதிகாரம் யார் கிட்ட இருக்கு?
//( West-ல ' அக்கா ' மம்தா பானர்ஜி )//
இவ்ளோ நாளும் அது east னு இல்ல நெனைசிட்டிருந்தேன்?!!
சொல்லவேயில்ல... எப்போ மாத்தினாக?
@ விஜி.,
// இவ்ளோ நாளும் அது east னு இல்ல
நெனைசிட்டிருந்தேன்?!! சொல்லவேயில்ல...
எப்போ மாத்தினாக? //
ஹி., ஹி., ஹி..!!
தப்பை திருத்திட்டேன்..
அது West இல்ல East தான்..!
நான் ஸ்கூல்ல படிக்கும் போது கூட
Geography-ல 99% மார்க் தான் எடுப்பேன்..
அந்த 1 மார்க் கூட West Bengal
இந்தியாவுக்கு East-ல இருக்கா.. இல்ல
West-ல இருக்காங்குற Confusion தான் போகும்..!
@ venkat
//West Bengal
இந்தியாவுக்கு East-ல இருக்கா.. இல்ல
West-ல இருக்காங்குற Confusion தான் போகும்..!//
"East or West, Home is the Best"னு சொல்லிக்கிட்டு ஸ்கூல் போகாம வீட்டிலேயே உக்காந்திருந்தா அப்படிதான் Confusion ஆவும்.
ஹா ஹா ஹா..
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!
@ Venakat ஹி.. ஹி..
ஷர்புதீன் எனக்கு அம்பது சதவீகிதம் மார்க்கு கொடுத்திருக்காரு..
அப்பா நா உங்கள விட பெட்டரா ?
Ref : // ஷர்புதீன் said...
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி! //
@ ஓட்டைவடை.,
// அடடா இத்தனை பெண்களா
அதிகாரத்தில் இருக்கிறார்கள்? //
ஆமா சார்.. ஆமாம்..!!
அதான் ஆண்களுக்கு இனிமே
33% இட ஒதுக்கீடு வேணும்னு
கோரிக்கையை வலியுறுத்தி
டெல்லி வரை பாதயாத்திரை
போக சிரிப்பு போலீஸ் ரமேஷ்
முடிவு எடுத்து இருக்காரு..!
கூடுதல் செய்தி : ஆண்களுக்கு
33% இட ஒதுக்கீடு கிடைக்கிற வரை
அவர் கல்யாணமே செஞ்சிக்க மாட்டாராம்..!
@ மங்குனி.,
// கலைஞரை சந்தோசப் படுத்திய
வெங்கட் அவர்களை வன்மையாக
கண்டிக்கிறோம் //
என்ன ஒரு கெட்ட எண்ணம்..!
தலைவரே.. இவிங்கள சும்மா
விடக்கூடாது.. பழிக்கு பழி வாங்கணும்..!
சீக்கிரம் ரெண்டு படத்துக்கு
கதை வசனம் எழுத ஆரம்பிங்க..!
ஹாஹா கலக்கல் பதிவு
@ மாதவன்.,
// ஒத்துக்கறோம்.. உங்க மீசையில
மண் ஒட்டவே இல்லை.. //
யாராப்பா அது.. நான் ஜிம்னாஸ்டிக்
பண்ணும் போது. குறுக்க பேசறது..!
அப்பிடி ஓரமா நின்னு வேடிக்கை
பாருங்க.., இங்கே பல்டி அடிக்கிறதெல்லாம்
ரொம்ப சகஜம்..!
@ Mohamed.,
// வர வர உங்க GK வளர்ந்து கொண்டே
போகுது... நீங்க எங்கயோ போயிட்டீங்க.... //
" அபூர்வ சகோதரர்கள் " படத்துல
ஜனகராஜை பாத்து கான்ஸ்டபிள்
சொல்ற டயலாக் மாதிரியே இருக்கு..!
@ யோகா.,
// சரி! "கனி"க்கு? களி திங்கக் குடுக்குற
அதிகாரம் யார் கிட்ட இருக்கு? //
ரொம்ப எதிர்ப்பார்க்காதீங்க பாஸு..!
ராஜாவுக்கே நேத்து வரைக்கும்
வீட்டு சாப்பாடு தான்.!
@ பெ.சொ.வி.,
// "East or West, Home is the Best"னு
சொல்லிக்கிட்டு ஸ்கூல் போகாம
வீட்டிலேயே உக்காந்திருந்தா
அப்படிதான் Confusion ஆவும். //
சே.சே.. இந்த சின்ன விஷயத்துக்காக
எல்லாம் ஸ்கூலுக்கு போகாம இருப்பமா..?!
ஒவ்வொரு தடவையும் West Bengal
East இருக்கா.? West இருக்கான்னு
Confusion வரும் போதெல்லாம்..
நான் " இங்கி., பிங்கி " போட்டு பாத்து
" North-ன்னு " எழுதிட்டு வருவேன்.
@ ஷர்புதீன்.,
// உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு
( TEMPLATE ) தருவது 45/100 மார்க். //
நன்றி ஷர்புதீன்..!
எப்படியோ என் Blog Template
பார்டர்ல பாஸ் ஆயிடுச்சு..!
@ மாதவன்.,
// ஷர்புதீன் எனக்கு அம்பது சதவீகிதம்
மார்க்கு கொடுத்திருக்காரு.. அப்பா
நா உங்கள விட பெட்டரா ? //
இது வேற ஆள் எழுதின Code..
அதான் மார்க் பார்டர்ல இருக்கு..
நானே சொந்தமா யோசிச்சி யோசிச்சி
ஒரு Template Code எழுதறேன்..
அப்புறம் பாருங்க.. என்னோட மார்க்கை.
கலைஞர் : யோவ் வெங்கட் ஏன்யா வெந்த புண் ல வெங்காய சட்னிய கொட்டுற
:(
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ அரசியல் :(
//வெங்கட் said...
நன்றி ஷர்புதீன்..!
எப்படியோ என் Blog Template
பார்டர்ல பாஸ் ஆயிடுச்சு..!
//
இவரே உங்க LKG மாஸ்டராவும் இருந்திருக்கலாம்னு நினைக்கிற உங்க ஆதங்கம் புரியுது!
//வெங்கட் said...
@ மாதவன்.,
// ஷர்புதீன் எனக்கு அம்பது சதவீகிதம்
மார்க்கு கொடுத்திருக்காரு.. அப்பா
நா உங்கள விட பெட்டரா ? //
இது வேற ஆள் எழுதின Code..
அதான் மார்க் பார்டர்ல இருக்கு..
நானே சொந்தமா யோசிச்சி யோசிச்சி
ஒரு Template Code எழுதறேன்..
அப்புறம் பாருங்க.. என்னோட மார்க்கை.
//
ஏன் அத்தோட விட்டுட்டீங்க? ஆனானப்பட்ட ஒபாமாவே இப்படி ஒரு ப்ளாக் தமிழில வச்சுக்கிட்டதில்லைன்னு சொல்ல வேண்டாமா?
// வெங்கட் said...
தலைவரே.. இவிங்கள சும்மா
விடக்கூடாது.. பழிக்கு பழி வாங்கணும்..!
சீக்கிரம் ரெண்டு படத்துக்கு
கதை வசனம் எழுத ஆரம்பிங்க..!
//
அவரோட ரெண்டு பட வசனமும் சரி,உங்களோட ஒரு பதிவும் சரி! அப்படி இருக்கும்போது உங்க தன்னடக்கத்தைப் பாராட்டாம இருக்க முடியலை!
பார்த்துட்டேன் வெங்கட். உங்க “ஆண்களே உஷார்” பதிவுதான் இப்ப இ-மெயில் உருவுல சுத்திகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்.அதுதான் எனக்கு கிடைத்து நான் பதிவாக கொடுத்துட்டேன். நன்றி.
Post a Comment