சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

16 May 2011

ஐ மீன்..! வாட் ஐ மீன்..!












நேத்து என் Friend மணி 
எனக்கு போன் பண்ணி..

" எங்க அண்ணன் வீட்ல ஒரு Fish Tank
சும்மா இருந்துச்சி., அதை எம் பொண்ணு
எடுத்துட்டு வந்துட்டா..! "

" சரி., அதனால என்ன..? "

" அதுல மீன் வளர்க்கணும்னு
ஆசைப்படறா..! "

" பின்ன அதுல மானா வளர்க்க முடியும்.?
மீன் தான் வளர்க்க முடியும்...! "

( " ஹா., ஹா.,ஹா..! " - நான் தான்
சிரிச்சேன்..  நல்ல ஜோக்னா என்னால
சிரிப்பை Control பண்ண முடியாது..! )

" டேய்.., அந்த Fish Tank-ல எந்த Fish-ஐ 
வளர்க்கறதுன்னு எனக்கு ஒண்ணும்
தெரியாதுடா.? "

" அட., இது ரொம்ப சிம்பிள் மேட்டர்..
நான் வேணா வந்து உனக்கு நல்ல Fish
செலக்ட் பண்ணி தரவா..? "

" உனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்.?
உங்க வீட்ல தான் Fish Tank இல்லையே.! "

" எங்க வீட்ல தாஜ் மஹால் கூட தான் இல்ல.,
ஆனா எனக்கு தாஜ் மஹால் பத்தி தெரியும்ல
அது மாதிரி தான்டா இதுவும்.. எல்லாம் G.K. ! "

" சரி., சரி..! நாளைக்கு சேலம் போலாமா..? "

" ம்ம்.., வர்றப்ப உன் Fish Tank அளவு
எடுத்துட்டு வந்துடு.."

" அது எதுக்கு..? "

" Tank Size-க்கு தகுந்த மாதிரி தான்டா
Fish வாங்கணும் வெண்ணை..! "

" ஓ.கே.. Done..! "

அடுத்த நாள்..
சேலம் " எட்வர்டு அக்வேரியம் "

அங்கே கலர் கலரா நிறைய மீன்கள்
இருந்துச்சு.. எல்லாத்தையும் ஒரு ரவுண்ட்
வேடிக்கை பாத்துட்டு இருந்தோம்..

அப்ப கடைக்காரர் என் பக்கத்துல வந்து..

" சார் உங்களுக்கு என்ன மீன் வேணும்.? "

" இந்த வஞ்ஜிரம் மீனு இருக்கா..? "

" என்னாது வஞ்ஜிரமா..? "

" அதான் சார்.., முள்ளே இல்லாம
இருக்குமே.. அந்த மீனு..! "

கடைக்காரரு ஷாக் ஆயிட்டாரு..!

" இல்லையா.. அப்ப இந்த நெத்திலி.,
கட்லா, ரோகு.. இதாவது இருக்கா..? "

இப்ப என் Friend டென்ஷன் ஆயிட்டான்..

" டேய்.. அடங்குடா..! இதென்ன
மீன் மார்கெட்டா..? வஞ்ஜிரம்,
கட்லான்னு கேட்டுட்டு இருக்கே..?! "

" மீன் விக்கிற இடம் மீன் மார்கெட்
தானேடா.?! " ( லாஜிக் )

" டேய்ய்ய்ய்ய்...! இது அக்வேரியம்..! "

" ஹி., ஹி., ஹி..!! அதே தான்
நான் தமிழ்ல சொல்றேன்.,
நீ இங்கிலீஸ்ல சொல்ற..! "

( Stop.! Stop.! Stop.! இப்ப நான் என்ன
தப்பா சொல்லிபுட்டேன்...? 

எதுக்கு எல்லோரும் என்னைய
கொலை வெறியோட பார்க்கறீங்க..!? )
.
.

43 Comments:

வெங்கட் said...

சாதாரணமா ஒரு 5 Gallon Tank
( 20 Ltrs : 18 inch x 9 inch ) வைக்க
ஆகும் Budget..

a.Tank with Top Cover - Rs 350

b.Filter + Stones - Rs 130

c.Oxygen Motor - Rs 120

d.Fishes : Max 10 Pairs - Rs 200

Total Rs 800.

Recommended Fishes for Beginners :

1. Guppy ( Only Male ) - Rs 10 Per Pair
2. Platy - Rs 20 Per Pair
3. Sword Tail - Rs 20 Per Pair
4. Molly - Rs 25 Per Pair

இது கூட Tetras, Danios விடலாம்.
Tetras கொஞ்சம் Costly வரும்..
Danios ஓவரா Active-ஆ இருக்கும்..

தவிர்க்க வேண்டிய Fishes :

1. Gold Fish ( தண்ணியை ரொம்ப
அழுக்கு பண்ணும்..)

2. Angel Fish ( இதை மத்த மீன்களோடு
விட கூடாது.. )

3. Tiger Barb ( மத்த மீன்களை கடிக்கும் )

4. Bettas ( மத்த மீன்களை கடிக்கும் )

2 மாசத்துக்கு ஒரு தடவை Tank-ஐ
கழுவினா போதும்.. 10 நாள்க்கு
ஒரு தடவை பாதி தண்ணி எடுத்துட்டு
வேற தண்ணி மாத்தணும்.!

( எதோ எனக்கு தெரிஞ்சது... )

Anonymous said...

வஞ்சுரம், நெத்தலி எல்லாத்தையும் பத்தி கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

Bettas and Guppy are my favourites. பேட்டாவை மூணு லீட்டர் கண்ணாடி பானைகளில் தனித்தனியாக விட்டு வைக்கலாம். தனியா வைச்சாலும் பைத்தியம் மாதிரி கண்ணாடி சுவரில் முட்டிக்கும். அதோட விம்பத்தைப் பார்த்திட்டு வேற மீனாக்கும்னு நினைக்கும் போல. மீன் வைக்கறது அவ்ளோ சீப்பா உங்க இடத்தில. இங்க ரூ க்கு பக்கத்தில டொலரப் போட்டுடுங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

cheena (சீனா) said...

இடுகையிலே போட வேண்டியத மறுமொழியில போட்டுட்ட - பலே பலே ! நல்லா ரசிச்சேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதுக்கு பிறகு நீங்க ஊரெல்லாம்
அடிவாங்கி உங்களை உங்க பிரண்டு ஜாமீன் ல எடுத்தாராமே?

சேலம் தேவா said...

பதிவ பாத்து கருவாடு ஆனவங்க "மீன்"னிங்கான கமெண்ட்ட பாத்து மகிழ்ச்சியடைஞ்சிருப்பாங்க... சூப்பர் தல.. :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ அனாமிகா.,

// மீன் வைக்கறது அவ்ளோ சீப்பா
உங்க இடத்தில. இங்க ரூ க்கு பக்கத்தில டொலரப் போட்டுடுங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். //

எனக்கு என்னவோ இவரு மீன் தொட்டி விலைய பழைய கண்ணாடி கடையில விசாரிச்சி இருப்பாரோன்னு தோணுது..

5 Gallon Tank Rs 6000-க்கும் இருக்கு..ஒரு Pair மீன் 500-க்கும் இருக்கு..!

வெங்கட் said...

@ சீனா சார்.,

// இடுகையிலே போட வேண்டியத
மறுமொழியில போட்டுட்ட - பலே பலே !
நல்லா ரசிச்சேன் - //

ரொம்ப Thanks சார்..!

வெங்கட் said...

@ ரமேஷு.,

// அதுக்கு பிறகு நீங்க ஊரெல்லாம்
அடிவாங்கி உங்களை உங்க பிரண்டு
ஜாமீன் ல எடுத்தாராமே?//

பின்ன., நீங்க போலீசா இருந்தா
இந்த மாதிரி லூசு தனமா தான்
இருக்கும்..!

அடி குடுத்தவனை விட்டுட்டு.,
அடி வாங்கினவனை பிடிச்சு
ஜெயில்ல போடறது..!

வெங்கட் said...

@ தேவா.,

// பதிவ பாத்து கருவாடு ஆனவங்க
"மீன்"னிங்கான கமெண்ட்ட பாத்து
மகிழ்ச்சியடைஞ்சிருப்பாங்க... சூப்பர் தல.. :)//

ஹி., ஹி., ஹி..!!

நாங்க நிஜமாவே மீன் மார்கெட்
போனா மட்டும் சும்மாவா இருப்போம்..
அங்கே போயி " சுறா மீன் " இருக்கான்னு
கேப்போமில்ல..!

வெங்கட் said...

@ ரமேஷு.,

// எனக்கு என்னவோ இவரு மீன் தொட்டி
விலைய பழைய கண்ணாடி கடையில
விசாரிச்சி இருப்பாரோன்னு தோணுது.. //

என்னே அறிவு..! புல்லரிக்குது..!

பழைய கண்ணாடி கடைன்னு கூட
எதாவது இருக்கா..?!

// 5 Gallon Tank Rs 6000-க்கும் இருக்கு..
ஒரு Pair மீன் 500-க்கும் இருக்கு..! //

அது எங்களுக்கும் தெரியும்..!

நாங்க இங்கே பேசறது Minimum Budget
Aquarium வெக்கிறதை பத்தி.. அதுக்கு
350 Tank போதும்..!

ரொம்ப Costly மீனெல்லாம் Beginners-க்கு
சரி வராது..!

Mohamed Faaique said...

///நேத்து என் Friend மணி
எனக்கு போன் பண்ணி.. //
நீங்களா சொந்த காசுல போன் பண்ண போரீங்க......
////" எங்க அண்ணன் வீட்ல ஒரு Fish Tank
சும்மா இருந்துச்சி., அதை எம் பொண்ணு
எடுத்துட்டு வந்துட்டா..! " ///

fish இல்லாட்டி எப்படிங்க அது Fish tank ஆகும்???? அது வெறும் tank'தானே!!!!

////பின்ன அதுல மானா வளர்க்க முடியும்.?
மீன் தான் வளர்க்க முடியும்...! "

( " ஹா., ஹா.,ஹா..! " - நான் தான்
சிரிச்சேன்.. நல்ல ஜோக்னா என்னால
சிரிப்பை Control பண்ண முடியாது..! ) ///
நானும் தீவிரமா யோசிச்சுடு இருக்கேன். சிரிப்பு வந்தா சொல்லி அனுப்புறேன்...

Mohamed Faaique said...

///
" அட., இது ரொம்ப சிம்பிள் மேட்டர்..
நான் வேணா வந்து உனக்கு நல்ல Fish
செலக்ட் பண்ணி தரவா..? " ///

ஓ.சி சோத்துக்கு ஒரு Great plan பாஸ்...

///
" எங்க வீட்ல தாஜ் மஹால் கூட தான் இல்ல.,
ஆனா எனக்கு தாஜ் மஹால் பத்தி தெரியும்ல
அது மாதிரி தான்டா இதுவும்.. எல்லாம் G.K. ! " ///

கலக்கல்.

Mohamed Faaique said...

///
அங்கே கலர் கலரா நிறைய மீன்கள்
இருந்துச்சு.. ///

மீன்’னா அப்பிடித்தாங்க இருக்கும்..

///
" ஹி., ஹி., ஹி..!! அதே தான்
நான் தமிழ்ல சொல்றேன்.,
நீ இங்கிலீஸ்ல சொல்ற..! " ///

உங்க இங்கிலிபீஷ் அறிவுக்கு முன்னாலா சிரிப்பு போலீஸ் கூட நிக்க முடியாது பாஸ்

///எதுக்கு எல்லோரும் என்னைய
கொலை வெறியோட பார்க்கறீங்க..!? ) ///

கடைசியில் ஏதோ மிஸ் ஆகுதே!!!! உங்கள கும்மு கும்மு’னு கும்மினத ஏன் ஸார் மறைக்கிறீங்க.....

Mohamed Faaique said...

பெரிய tank’ல மீன் வலர்க்குரதெல்லாம் நமக்கு சரிப்படாது ஸார். ஒரு சின்ன கண்ணாடிப் பானையில் 1 அல்லது 2 Gold fish, Bettas (நீங்க சொல்லித்தான் பேரு தெரியும்) வளர்க்கனும்.. அதை கடந்த 10 வருசமா சொல்லிட்டு இருக்கேன். இன்னும் முடியல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே ரெண்டுகிலோ கருவாடு கெடைக்குமாண்ணே...?

Shalini(Me The First) said...

@வெங்கட்
//( Stop.! Stop.! Stop.! இப்ப நான் என்ன
தப்பா சொல்லிபுட்டேன்...?

எதுக்கு எல்லோரும் என்னைய
கொலை வெறியோட பார்க்கறீங்க..!? )
.//
விடுங்க பாஸ்! பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் :)

Shalini(Me The First) said...

then, hw r u all :)

Hi Anamika!
itz so nice to meet u here :)

சிவா said...

he,he,he....... fish tank-la fish valarththaa .... appo water tank-la vateraiyum ....petrol tank-la petrolaiyum valarkkanumaa ???

Mohamed Faaique said...

///he,he,he....... fish tank-la fish valarththaa .... appo water tank-la vateraiyum ....petrol tank-la petrolaiyum valarkkanumaa ??///

repeattu...

HVL said...

பதிவுகளையெல்லாம் வரிசையா படிச்சு பார்த்துட்டு சொல்றேன், நீங்க இங்க இருக்க வேண்டியவரே இல்ல!

karthikkumar said...

HVL said...
பதிவுகளையெல்லாம் வரிசையா படிச்சு பார்த்துட்டு சொல்றேன், நீங்க இங்க இருக்க வேண்டியவரே இல்ல!///



ஆமா ஆமா குணசீலம், பாண்டி மடம் போன்ற இடத்துல இருக்க வேண்டியவர்தான் ..... கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்க....:))

அனு said...

// மீன் விக்கிற இடம் மீன் மார்கெட்
தானேடா.?! //

இது என்ன லாஜிக்? Blood Bankல Blood வாங்கலாம்..
அதுக்காக State Bankல State வாங்க முடியுமா??

Mohamed Faaique said...

///பதிவுகளையெல்லாம் வரிசையா படிச்சு பார்த்துட்டு சொல்றேன், நீங்க இங்க இருக்க வேண்டியவரே இல்ல! ////

நமளும் இதே போல வஞ்சகப் புகழ்ச்சி புகழ்ந்து ஆள அனுப்பிரலாம்னு எவ்ளோ முயற்சி பண்ணியாச்சு..... மொக்கை போடுரத விட மாட்டேங்குறாரு...

Madhavan Srinivasagopalan said...

@ Anu
என்னக்கா சின்னதா தின்க் பண்ணுறீங்க..
பெருசா யோசிங்க..
"'வேர்ல்ட்' பேங்குல உலகத்தையே வாங்கமுடியுமா ?" அப்படின்னு கேளுங்க..

அனு said...

@Madhavan
//என்னக்கா சின்னதா தின்க் பண்ணுறீங்க..
பெருசா யோசிங்க//

சின்ன அறிவுக்கு சின்ன லெவல்ல தான் உதாரணம் தரணும்.. நம்மள மாதிரி பெரிய அறிவாளிகளுக்கு தான் பெரிய லெவல்ல உதாரணம் தரணும்..

நீங்க வேணா பாருங்களேன்.. ஸ்டேட்னா solid stateஆ, liquid stateஆ இல்ல gaseous state-ஆன்னு கேப்பாரு.. இவரு கிட்ட போயி.. .ஹிஹி..

Madhan said...

My Sincere tip: Do not put more than 6 fish in a 5 gallon tank. And put 6 fish only if its maximum growth size is less than 2 inches. Rule of thumb is 1 fish per gallon. And a good filter is needed to take care of the nitrogen cycle.

வெங்கட் said...

@ Mohamed.,

// fish இல்லாட்டி எப்படிங்க அது Fish tank
ஆகும்???? அது வெறும் tank'தானே!!!! //

மீன் குழம்புல இருந்து., எல்லா
மீன் பீஸையும் எடுத்துட்டாலும்.,
மிச்சமிருக்குற அந்த குழம்பை
மீன் குழம்புன்னு தான் சொல்லணும்.,
வெறும் குழம்புன்னு சொல்ல கூடாது..

புரியுதா..?!

வெங்கட் said...

@ Mohamed.,

// நானும் தீவிரமா யோசிச்சுடு இருக்கேன்.
சிரிப்பு வந்தா சொல்லி அனுப்புறேன்... //

தீவிரமா யோசிச்சி வர்றதுக்கு இதென்ன
" பொன் மொழியா.! ".. Sense of Humour
இருந்தா போதும்.. ஜோக் கேட்டா சிரிப்பு
தன்னால வரும்..!

// ஓ.சி சோத்துக்கு ஒரு Great plan பாஸ்... //

ஓ.சி சோறா..? நானா..?!
என்னை என்ன சிரிப்பு போலீஸ்னு
நினைச்சீங்களா..? ஓ.சி சோத்துக்காக
Plan போடறதுக்கு..?

எங்க லெவலே வேற..

அன்னிக்கு Plan போட்டது..
" ஓ.சி சிக்கன் பிரியாணிக்கு! "

பெசொவி said...

//வெங்கட் said...
@ Mohamed.,

// fish இல்லாட்டி எப்படிங்க அது Fish tank
ஆகும்???? அது வெறும் tank'தானே!!!! //

மீன் குழம்புல இருந்து., எல்லா
மீன் பீஸையும் எடுத்துட்டாலும்.,
மிச்சமிருக்குற அந்த குழம்பை
மீன் குழம்புன்னு தான் சொல்லணும்.,
வெறும் குழம்புன்னு சொல்ல கூடாது..
//

மைசூர் பாக்கில மைசூர் எங்க இருக்குன்னு கேள்வி கேட்டவர் தான, நீங்க? இப்படிதான் பதில் சொல்லுவீங்க.

Karuthu Kandasamy said...

//சாதாரணமா ஒரு 5 Gallon Tank
( 20 Ltrs : 18 inch x 9 inch ) வைக்க
ஆகும் Budget..

a.Tank with Top Cover - Rs 350

b.Filter + Stones - Rs 130

c.Oxygen Motor - Rs 120

d.Fishes : Max 10 Pairs - Rs 200

Total Rs 800.

Recommended Fishes for Beginners :

1. Guppy ( Only Male ) - Rs 10 Per Pair
2. Platy - Rs 20 Per Pair
3. Sword Tail - Rs 20 Per Pair
4. Molly - Rs 25 Per Pair

இது கூட Tetras, Danios விடலாம்.
Tetras கொஞ்சம் Costly வரும்..
Danios ஓவரா Active-ஆ இருக்கும்..

தவிர்க்க வேண்டிய Fishes :

1. Gold Fish ( தண்ணியை ரொம்ப
அழுக்கு பண்ணும்..)

2. Angel Fish ( இதை மத்த மீன்களோடு
விட கூடாது.. )

3. Tiger Barb ( மத்த மீன்களை கடிக்கும் )

4. Bettas ( மத்த மீன்களை கடிக்கும் )

2 மாசத்துக்கு ஒரு தடவை Tank-ஐ
கழுவினா போதும்.. 10 நாள்க்கு
ஒரு தடவை பாதி தண்ணி எடுத்துட்டு
வேற தண்ணி மாத்தணும்.!

( எதோ எனக்கு தெரிஞ்சது... )// Stone பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக வேண்டும் என்றால் மணலில் இருக்கும் கூழாங்கற்களை பயன்படுத்தலாம், பில்டர் 130 ரூபாய்க்கு கிடைக்காது, 250 முதல் 700 வரை உள்ளது. தொட்டி லீக் ஆனால், பெவி குயிக் போன்ற பசைகளை பயன் படுத்த கூடாது. சிலிக்கான் பேஸ்ட் மட்டுமே பயன் படுத்த வேண்டும். வேறு ஏதேனும் மீன் வளர்ப்பது தொடர்பாக தகவல் வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளவும். அக்வேரியம் ( மீன் மார்க்கெட் ) எங்கள் ஊரில் வைத்துள்ளேன்.

வெங்கட் said...

@ Mohamed.,

// ஒரு சின்ன கண்ணாடிப் பானையில்
1 அல்லது 2 Gold fish, Bettas வளர்க்கனும்..
அதை கடந்த 10 வருசமா சொல்லிட்டு
இருக்கேன். இன்னும் முடியல.... //

சொல்றது தான் சொல்றீங்க..
ஒரு அஞ்சாறு டால்பின்.,
ஏழெட்டு சுறா மீன் வளர்க்கலாம்னு
இருக்கேன்னு சொல்லுங்களேன்..

எப்படியும் நீங்க எதையும் வளர்க்க
போறதில்ல.. சும்மாவாச்சும் சொல்லுங்க..

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அண்ணே ரெண்டுகிலோ கருவாடு
கெடைக்குமாண்ணே...? //

அதெல்லாம் இங்கே கிடைக்காது
அது கருவாடு அக்வேரியம்ல
( கருவாடு மார்க்கெட்ல ) தான்
கிடைக்கும்..!

வெங்கட் said...

@ ஷாலினி.,

ஹாய்..., Welcome..!

முதல்வர் " ஜெ " உங்களுக்கு
தலைமை செயலாளர் Post
தர்றேன்னு ஒத்தை கால்ல
நின்னாங்களாமே..?!

ஏன் " NO " சொல்லிட்டீங்க..?
உங்க திறமைக்கும்., அறிவுக்கும்.,
தகுதிக்கும் இது கம்மிங்கறதாலயா.?!

வெங்கட் said...

@ சிவா.,

// fish tank-la fish valarththaa ....
appo water tank-la vateraiyum ....
petrol tank-la petrolaiyum valarkkanumaa ??? //

ஆஹா., என்ன ஒரு சிந்தனை..!

நீங்க இப்படி தான் எப்பவுமா.?
இல்ல எப்பவுமே இப்படிதானா.!?

வெங்கட் said...

@ HVL.,

// நீங்க இங்க இருக்க வேண்டியவரே இல்ல! //

ஆமாங்க..! நாங்கல்லாம் Permenant-ஆ
சந்திரமண்டலத்துலயே தங்க
வேண்டியவங்க., ஆனா நாட்டு மக்களை
நல்வழி படுத்தணுமேங்கிற உயரிய
நோக்கத்துக்காக இங்கிட்டு இருக்கோம்..!!

வெங்கட் said...

@ கார்த்தி.,

// ஆமா ஆமா குணசீலம், பாண்டி மடம்
போன்ற இடத்துல இருக்க வேண்டியவர்தான் //

அங்கிருந்து சுவரு ஏறி குதிச்சு
தப்பிச்சுட்டு வந்துட்டு., என்னா
பேச்சு பேசறீங்க..?

உங்களை பிடிச்சிட்டு வர தான்
நான் Spl Appointment-ல வந்து
இருக்கேன்..!

வெங்கட் said...

@ அனு.,

// சின்ன அறிவுக்கு சின்ன லெவல்ல
தான் உதாரணம் தரணும்.. //

ஆமாங்க ரொம்ப சரி.,

அதே மாதிரி அறிவே இல்லாதவங்களுக்கு
உதாரணமே தரகூடாது.. இப்ப
புரிஞ்சிருக்குமே., நான் ஏன் VKS -க்கு
உதாரணமே தர்றதில்லன்னு..

வெங்கட் said...

@ மதன்.,

// My Sincere tip: Do not put more than 6 fish in a 5 gallon tank.
And put 6 fish only if its maximum growth size is less than 2 inches.
Rule of thumb is 1 fish per gallon. And a good filter is needed to take
care of the nitrogen cycle. //

" Rule of thumb " பத்தி நானும்
படிச்சேன்..!

ஆனா 5 Gallon Tank-ல வெறும்
6 Fish மட்டும் விட்டா ரொம்ப
வெறுமையா இருக்கும்..

இதுக்கு " அக்வேரியம் ஓனர் "
கருத்து கந்தசாமி or அனுபவசாலிகள்
யாராவது பதில் சொன்னா நல்லா இருக்கும்..

வெங்கட் said...

@ கருத்து கந்தசாமி.,

// வேறு ஏதேனும் மீன் வளர்ப்பது
தொடர்பாக தகவல் வேண்டும் என்றால்
என்னை தொடர்பு கொள்ளவும். //

ரொம்ப நன்றிங்க..!

நான் இப்ப தான் ஒரு 5 Gallon Tank
வெச்சி இருக்கேன்.. எனக்கு நிறைய
தகவல் தேவை.. உங்களை எப்படி
தொடர்பு கொள்வது..?

E-Mail., or Phone Number குடுங்க..!

ராஜி said...

இந்த பதிவையும், கமெண்ட்டையும் படிச்சப் பின்னாடி உங்க ஐ.க்யூ லெவல் கன்னா பின்னானு ஏறிடுச்சோனு டவுட்டா இருக்கு. ஆனால் இவ்வளவு பெரிய அறிவாளியை இந்தியா தாங்காது சாமி. அவ்வ்வ்

Shalini(Me The First) said...

@வெங்கட்
//
@ ஷாலினி.,

ஹாய்..., Welcome..!

முதல்வர் " ஜெ " உங்களுக்கு
தலைமை செயலாளர் Post
தர்றேன்னு ஒத்தை கால்ல
நின்னாங்களாமே..?!

ஏன் " NO " சொல்லிட்டீங்க..?
உங்க திறமைக்கும்., அறிவுக்கும்.,
தகுதிக்கும் இது கம்மிங்கறதாலயா.?//

:)
பின்ன என்ன பாஸ், சூரியன்ட்ட சிலம்பம் கத்துகிட்டவள சிம்னி விளக்கு கோட நூறாங்குச்சி விளாட சொன்னா?
( நூறாங்குச்சின்னா என்னான்னு தெரியாம முழிக்கிறவங்க உங்க வீட்டு வாண்டூஸட்ட கேளுங்க :)

Shalini(Me The First) said...

@அனு
//
சின்ன அறிவுக்கு சின்ன லெவல்ல தான் உதாரணம் தரணும்.. நம்மள மாதிரி பெரிய அறிவாளிகளுக்கு தான் பெரிய லெவல்ல உதாரணம் தரணும்..//

பெரிய லெவெல்னா மண்டைல ஒரு குட்டு குட்டியா?