சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 April 2011

துப்பு., துப்பு.. சே.. துப்பறியும் சிங்கம்..!!


காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப
ஒரு நாள் என் Friend கிச்சா
எனக்கு போன் பண்ணி..

" டேய்..!! ஒரு வாரமா ஒரு பொண்ணு
என்கிட்ட போன் பண்ணி பேசுதுடா..
என்னடா பண்றது..? "

" நீயும் பேசு.. இதுக்கெல்லாமா
என்கிட்ட Permission கேப்பே..?!
அவ்ளோ பாசக்கார பையனாடா நீ..?!! "

" மண்ணாங்கட்டி..!! அந்த பொண்ணு
பெயர்., போன் நம்பர் எல்லாம் சொல்ல
மாட்டேங்குது.. எப்படி கண்டுபிடிக்கறது..?!! "

( அடடா.., கொஞ்ச நேரம் கூட
இந்த " வெங்கட் பாண்ட் 007-ஐ "
( ஹி., ஹி., ஹி.!! ) Free-ஆ விட
மாட்டாங்க போல இருக்கே..! )

" சரி.. நாளைக்கு நான் உங்க வீட்டுக்கு
வர்றேன்.. அப்ப பேசிக்கலாம்..! "

இடம் : கிச்சா வீடு

நான் இருக்கும் போது மறுபடியும்
அதே போன் கால் வந்தது..

இந்த தடவை Attend பண்ணினது நான்.

நானும் எவ்ளோ நைசா கேட்டு பாத்துட்டேன்..
அந்த பொண்ணு கடைசி வரை தன்னோட
பெயரை சொல்லவே இல்ல.. ஆனா
ஒரே ஒரு க்ளூ மட்டும் குடுத்தது..

" 9 2 3 1 4 7 " இதுல தான்
என் போன் நம்பர் ஒளிஞ்சிட்டு இருக்கு
முடிஞ்சா கண்டுபிடிங்கன்னு சவால்.

கிச்சா டென்ஷன் ஆயிட்டான்..

" டேய் இதுக்கு என்ன Formula-ன்னு
தெரியலையே.. நான் வேணா என் தங்கச்சி
Logarithm Book எடுத்துட்டு வரட்டுமா.. ? "

" ஏன்..? உன் அண்ணன் பையன்
Tables Book எடுத்துட்டு வாயேன்..!!! "

" டென்ஷன் ஆகாதடா.. சும்மா Help-க்கு... "

" ஒண்ணும் வேணாம்.. கொஞ்சம்
பொறுமையா இரு... நான் யோசிக்கணும்..!! "

( டுடுங்க்.. டுடுங்க்.. டுடுங்க்..
ஹி., ஹி., ஹி.. ஜோம்ஸ்பாண்ட் மியூசிக்.. )

அந்த நம்பர்ல " 4 9 1 " எங்க ஊர்ல
எல்லா நம்பரும் இப்படி தான்
Start ஆகும்.. So., மீதி இருக்கறது " 2 3 7 " .

இதுக்கு மொத்தமே 6 Combinations தான்..
( 237, 273, 372, 327, 723, 732 )

மூணாவது Atempt-லயே அந்த பொண்ணு
நம்பரை கண்டுபிடிச்சிட்டோம்..

( நாங்கல்லாம் LKG-ல இருந்து
UKG படிக்காமலே Straight-ஆ 1st Std
போனவங்களாக்கும்..!! எங்க கிட்டயேவா..?!! )

ரெண்டு மாசம் கழிச்சு.. ஒரு நாள்..

நான் கிச்சா வீட்டுக்கு போயிருந்தேன்..
அப்ப ஒரு மிஸ்டு கால் வந்தது..

கிச்சாவோட அப்பா., அம்மா., தங்கச்சி
எல்லாம் என்னை ஒரு மாதிரி பாத்தாங்க..
கிச்சாவும் செம டென்ஷனா இருந்தான்..

" என்னடா நடக்குது இங்கே..? "

" அந்த பொண்ணு தான் மிஸ்டு கால்
குடுக்குது..!! "

" அதுக்கு ஏன்டா உங்க வீட்ல எல்லோரும்
என்னை தீவிரவாதியை பாக்கற மாதிரி
பார்க்கறாங்க..? "

" இந்த மாதிரி மிஸ்டு கால் வரும்போதெல்லாம்... "

" வரும்போதெல்லாம்.. "

" அது நீதான் சொல்லி வெச்சிருந்தேன்..!! "

" ?!?!?!!!? "
.
.

47 Comments:

இம்சைஅரசன் பாபு.. said...

//இந்த மாதிரி மிஸ்டு கால் வரும்போதெல்லாம்... "

" வரும்போதெல்லாம்.. "

" அது நீதான் சொல்லி வெச்சிருந்தேன்.//

ஜேம்ஸ் பான்ட் மியூசிக் இப்ப மட்டும் ஏன் போடல மக்கா ..
நான் போடுறேன்
( டுடுங்க்.. டுடுங்க்.. டுடுங்க்..
ஹி., ஹி., ஹி.. ஜோம்ஸ்பாண்ட் மியூசிக்.. )

இம்சைஅரசன் பாபு.. said...

கடைசில நீ ஜேம்ஸ் பான்ட் இல்ல ...பாண்டு ரங்கன் ன்னு தெரிஞ்சு போச்சா எல்லோருக்கும்

Paleo God said...

இப்படி ஒரு பொண்ணோட நம்பர பகிரங்கமா பொதுவுல போட்டுட்டீங்களே பாண்டு! :))

ரசிகன் said...

//துப்பு., துப்பு.. சே..//
டன் டணா டன்.. (ஒரு தடவ பண்ணினா Done சொல்லணும்.. நீங்க ரெண்டு தடவ கேட்டிருக்கீங்க)

£€k#@ said...

// நீயும் பேசு.. இதுக்கெல்லாமா
என்கிட்ட Permission கேப்பே..?!
அவ்ளோ பாசக்கார பையனாடா நீ..?!! "
//
ஓவரா நினைப்பு தான் உங்களுக்கு :D

//அந்த பொண்ணு தான் மிஸ்டு கால்
குடுக்குது..//
landlineல கூட மிஸ்டு கால்!!! :O

//இந்த மாதிரி மிஸ்டு கால் வரும்போதெல்லாம்
அது நீதான் சொல்லி வெச்சிருந்தேன்.//
உங்கள நெனச்சா சிரிப்ப அடக்க முடியல வெங்கட்
எப்டி எல்லாம் மாட்டி விடுறாங்க :D!!

samhitha said...

//டேய் இதுக்கு என்ன Formula-ன்னு
தெரியலையே.. நான் வேணா என் தங்கச்சி
Logarithm Book எடுத்துட்டு வரட்டுமா..//
he he irundhaalum unga frienda neenga ivlo kevalapadutha kudadhu ;)

//துப்பு., துப்பு..//
yaara solreenga :D

// அந்த பொண்ணு பெயர்., போன் நம்பர் எல்லாம் சொல்ல
மாட்டேங்குது.. எப்படி கண்டுபிடிக்கறது..?!

மூணாவது Atempt-லயே அந்த பொண்ணு
நம்பரை கண்டுபிடிச்சிட்டோம்..//

mm idha mattum udane kandu pidichiduveengale ;)
pudhusa edhavadhu kandu pidinga pa

//அது நீதான் சொல்லி வெச்சிருந்தேன்..!
?!?!?!!!? //
apram ena achu nu sollave ila :D

Madhavan Srinivasagopalan said...

துப்பிட்டு(எச்சில்) துலக்கணுமா (பல்லை)
துலக்கிட்டு துப்பணுமா ?

Mohamed Faaique said...

இப்போ போரேன். ஆனா, திரும்பி, வருவேன்னு சொல்ல வந்தேன்,

சிவசங்கர். said...

ஆஹா!
பேஷ்!
பிரமாதம்!
அருமை!

(நான் சாப்பிடும் மில்க் ஷேக்கச் சொன்னேன்! ஆமா, என்னமோ ஜேம்ஸ்பாண்டு மாதிரி போஸ் எல்லாம் கொடுத்துட்டு, சின்னப்புள்ளத் தனமா இல்ல?)

Anonymous said...

//மூணாவது Atempt-லயே அந்த பொண்ணு
நம்பரை கண்டுபிடிச்சிட்டோம்..//

எப்படி கண்டுபிடிச்சிங்க? ஒரு ஒரு நம்பரா போன் பண்ணி எங்க வீட்டுக்கு கால் பண்ணது நீங்கதான அப்படினு கேட்டிங்களா?

Anonymous said...

// கொஞ்சம்
பொறுமையா இரு... நான் யோசிக்கணும்..!! "//

உங்களாள முடியுமா?

வெங்கட் said...

@ இம்சை.,

// ஜேம்ஸ் பான்ட் மியூசிக் இப்ப மட்டும்
ஏன் போடல மக்கா.. //

இதென்ன S.A.ராஜ்குமார் மியூசிக்கா..?
" லலலா., லலலான்னு " படம் பூரா
போடறதுக்கு..!!! ஜேம்ஸ் பாண்ட்
மியூசிக்பா.. துப்பறியும் போது
மட்டும் தான் போடணும்..

வெங்கட் said...

@ ஷங்கர்.,

// இப்படி ஒரு பொண்ணோட நம்பர
பகிரங்கமா பொதுவுல போட்டுட்டீங்களே
பாண்டு! :)) //

ஆ..!! நல்லவேளை.. அந்த பொண்ணு
பேரு அனிதாங்கற உண்மைய நாம
இங்கே சொல்லல.. :-)

அட.. மொபைலை கீழே வைங்க..
அது இப்ப எங்க ஊர் போலீஸ் ஸ்டேஷன்
நம்பரு..!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// துப்பு., துப்பு.. சே..//

// டன் டணா டன்.. ( ஒரு தடவ
பண்ணினா Done சொல்லணும்..
நீங்க ரெண்டு தடவ கேட்டிருக்கீங்க ) //

இதான்.. இதான்.. எங்கள மாதிரி
டிபார்ட்மெண்ட் ஆளுங்களுக்கும்
உங்கள மாதிரி பொது ஜனத்துக்கும்
உள்ள வித்தியாசம்...

எங்க போலீஸ் பாஷையில
துப்பு = Clue.

வெங்கட் said...

@ லேகா.,

@ லேகா.,

// Landlineல கூட மிஸ்டு கால்!!! //

ஹி., ஹி.
அப்ப அந்த பொண்ணுக்கு
கல்யாணம் ஆகல.. So அவங்க மிஸ்..

ரெண்டு தடவை ரிங் வந்தது.. So " டு "

மிஸ் + டு கால் = மிஸ்டு கால்..
எப்புடி..?!!

வெங்கட் said...

@ லேகா.,

// உங்கள நெனச்சா சிரிப்ப அடக்க
முடியல வெங்கட். எப்டி எல்லாம்
மாட்டி விடுறாங்க //

இந்த பதிவை போட்ட உடனே
Indli-ல கூட Submit பண்ணாம
செஞ்ச முதல் வேலையே..

கிச்சாவோட Wife-க்கு போன் பண்ணி
இந்த பதிவை படிக்க சொன்னது தான்..

இப்ப எனக்கு என் Friend கிச்சாவை
நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது..

ஹா., ஹா., ஹா..!! ( வில்லன் சிரிப்பு )

" நீங்க என்னை எவ்ளோ கெட்டவன்னு
நினைக்கிறீங்களே.. நான் அவளோ
நல்லவன்..!

நீங்க என்னை எவ்ளோ நல்லவன்னு
நினைக்கிறீங்களே.. நான் அவளோ
கெட்டவன்..! " ( பஞ்ச் டயலாக்.. )

Uma said...

செம காமெடி. அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு ஒரு தனிப்பதிவாப்போடுங்க.

Uma said...

நீங்க என்னை எவ்ளோ கெட்டவன்னு
நினைக்கிறீங்களே.. நான் அவளோ
நல்லவன்..! நீங்க என்னை எவ்ளோ நல்லவன்னு
நினைக்கிறீங்களே.. நான் அவளோ
கெட்டவன்..! " //

சொந்தமா டயலாக் யோசிக்க மாட்டீங்களா?

ராஜி said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இப்படி ஒரு பொண்ணோட நம்பர பகிரங்கமா பொதுவுல போட்டுட்டீங்களே பாண்டு! :))
>>

கவலைய விடுங்க தம்பி அந்த பொண்ணு இப்ப கிழவியா ஆகிட்டு இருப்பாங்க. ஏன்னா இது வெங்கட் காலேஜ் படிக்கும் போது நடந்த சம்பவம்

பெசொவி said...

வெங்கட்டுங்கறது உங்க பேரு, 007-ங்கறது பத்தாவதுல நீங்க வாங்கின மார்க்கா?
(பத்தாவதா, வெங்கட்டா, அவரு இன்னும் அஞ்சாம் கிளாசே தாண்டலைன்னு யாரும் உண்மைய சொல்லிடாதீங்க!)

பெசொவி said...

//இந்த பதிவை போட்ட உடனே
Indli-ல கூட Submit பண்ணாம
செஞ்ச முதல் வேலையே..

கிச்சாவோட Wife-க்கு போன் பண்ணி
இந்த பதிவை படிக்க சொன்னது தான்..
//

அது சரி, நம்பரைக் கண்டுபிடிச்சவுடனே கிசாவுக்குத் தெரியாம ரெண்டு மூணு தரம் அந்தப் பொண்ணுக்கு போன் பண்ணி பேசினீங்களே, அந்த விஷயம் உங்க மனைவிக்குத் தெரியுமா?
(ஏதோ நம்மால முடிஞ்சது, நாராயண....நாராயண!)

பெசொவி said...

//நாங்கல்லாம் LKG-ல இருந்து
UKG படிக்காமலே Straight-ஆ 1st Std
போனவங்களாக்கும்..!! //

"டேய், நீ இப்ப வரைக்கும் அதுதாண்டா படிச்சிருக்கே!"
இது தூள் படத்துல வர ஒரு வசனம்........அது ஞாபகம் வந்துச்சு, எழுதினேன், ஹிஹி!

£€k#@ said...

//மிஸ் + டு கால் = மிஸ்டு கால்..
எப்புடி..?!!
//
:O shabbaaaaaa mudiyala....
salem la வெயில் ஜாஸ்தினு கேள்விப்பட்டேன் :P !!

//கிச்சாவோட Wife-க்கு போன் பண்ணி
இந்த பதிவை படிக்க சொன்னது தான்..

இப்ப எனக்கு என் Friend கிச்சாவை
நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது.. //
aaha ரொம்ப பாவம் அவர்.... :D

ஊருக்குள்ள 10,20 பிரெண்ட்ஸ் வச்சிருக்கவங்க எல்லாம் நல்ல இருக்காங்க
ஆனா உங்க ஒருத்தர வச்சிட்டு அவர் படற பாடு இருக்கே பாவம் ;)
(ஹையா நானும் பஞ்ச் டயலாக் சொல்லிட்டேன் :P.. )

//நல்லவேளை.. அந்த பொண்ணு
பேரு அனிதாங்கற உண்மைய நாம
இங்கே சொல்லல..//
:| :| ம்ம்ம்ம்

பெசொவி said...

//

ஹி., ஹி.
அப்ப அந்த பொண்ணுக்கு
கல்யாணம் ஆகல.. So அவங்க மிஸ்..

ரெண்டு தடவை ரிங் வந்தது.. So " டு "

மிஸ் + டு கால் = மிஸ்டு கால்..
எப்புடி..?!!

//

சில வருஷங்களுக்கு முன்னாடி, யாரோ உங்ககிட்ட "மிஸ்ட் கால் வந்திருக்கு"ன்னு சொன்னபோது ஸ்கூல் மிஸ்ஸா, காலேஜ் மிஸ்ஸான்னு கேட்டீங்களாமே , அதுக்கு இந்த விளக்கம் பரவாயில்லைன்னு உங்க பிரெண்ட் கிச்சாதான்சொன்னாரு!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// நான் வேணா என் தங்கச்சி
Logarithm Book எடுத்துட்டு வரட்டுமா.. //

// irundhaalum unga frienda neenga ivlo
kevalapadutha kudadhu ;) //

இந்த கமெண்ட்டை என் Friend-கிட்ட
காட்டினேன்.. அப்போ அவன் கேட்டான்..

" டேய்.. Logarithm Book-ன்னா என்னடா..? "

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// மூணாவது Atempt-லயே அந்த பொண்ணு
நம்பரை கண்டுபிடிச்சிட்டோம்.. //

// mm idha mattum udane kandu pidichiduveengale ;)
pudhusa edhavadhu kandu pidinga pa.. //

1. பப்ளிக் பூத் போன்ல ஒத்தை ரூபாய
வெச்சு ஒரு மணி நேரம் பேசறது எப்படி.?

2. கிளாஸ்க்கு போகாமலே Attendance
வாங்கறது எப்படி..?

3. எங்களுக்கு தெரியாத கொஸ்டின்
பேப்பர் குடுத்தா பதில் எழுதறது எப்படி..?
( அவங்களுக்கு தெரியாத பதில் எழுதுவோம்.. )

இப்படி பல ஆராய்ச்சிகள் பண்ணி.,
வருங்கால தலைமுறைக்கு எவ்ளோ
உதவி பண்ணியிருக்கோம்.. எங்கள
போயி இப்படி சொல்லிட்டீங்களே..

// apram ena achu nu sollave ila :D //

இது காமெடி பதிவு.,
ட்ராஜடி எதுக்கு..?!

வெங்கட் said...

@ மாதவன்.,

// துப்பிட்டு (எச்சில்) துலக்கணுமா
(பல்லை) துலக்கிட்டு துப்பணுமா ? //

வாழ்த்துக்கள்..!!
இத்தனை வயசுக்கு அப்புறமாவது
பல்லு எப்படி விளக்கணும்னு
கத்துக்கணும்னு தோணிச்சே..

வெங்கட் said...

@ Mohamed.,

// இப்போ போரேன். ஆனா, திரும்பி,
வருவேன்னு சொல்ல வந்தேன், //

நீங்க திரும்பி வரலாம்.. ஆனா
வந்து என்னை கலாய்ச்சீங்க..
அப்புறம் நீங்க திரும்பி போறது
கியாரண்ட்டி கிடையாது..

நாங்கல்லாம் தூரத்துல இருந்து
பாக்க தான் அமைதியா இருப்போம்..
பக்கத்துல வந்தா..
டெரர்ரா இருப்போம்.. டெரர்ரா..

aru(su)vai-raj said...

ha.. ha.. ha...

Mohamed Faaique said...

///காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப///

ப்லாக் ஆரம்பிச்ச்சதுல இருந்து நீங்களும் சொல்ரீங்க... யாரும் நம்பின மாதிரி தெரியல...

///" சரி.. நாளைக்கு நான் உங்க வீட்டுக்கு
வர்றேன்.. அப்ப பேசிக்கலாம்..! "///

அவரு கூப்பிடவே இல்லையே!!! ஏன் தல ஓசி சோத்துக்கு அலையுரீங்க.....

///
" ஏன்..? உன் அண்ணன் பையன்
Tables Book எடுத்துட்டு வாயேன்..!!! "

" டென்ஷன் ஆகாதடா.. சும்மா Help-க்கு... "//

கிச்சா ஸார், அவர்கிட்ட தெரியாத மேட்டர சொன்னாலே tension ஆயிருவாரு...

Mohamed Faaique said...

//( டுடுங்க்.. டுடுங்க்.. டுடுங்க்..
ஹி., ஹி., ஹி.. ஜோம்ஸ்பாண்ட் மியூசிக்.. )///

ஆமா...ஆமா... கோவை ப்ரதர்ஸ்’ல வடிவேலுவுக்கு கூட இந்த மியூசிக் போடுவாங்க....

///
( நாங்கல்லாம் LKG-ல இருந்து
UKG படிக்காமலே Straight-ஆ 1st Std
போனவங்களாக்கும்..!! எங்க கிட்டயேவா..?!! )//

1ச்டு ஸ்டேண்டு’ல யாருக்காவது டிபன் எடுத்துடு போனீங்களா? இல்ல... பஸ் ஸ்டேண்டு’னு வர வேண்டியது தவறிடுச்சா....

////கிச்சாவோட அப்பா., அம்மா., தங்கச்சி
எல்லாம் என்னை ஒரு மாதிரி பாத்தாங்க..///

”கிச்சாவோட அப்பா., அம்மா., தங்கச்சி
எல்லாம் என்னை மறுபடி வந்துட்டாரே, பழைய சோத்தையும் பிச்சைகாரனுக்கு போட்டாச்சே’னு ஒரு மாதிரி பாத்தாங்க..” இப்படி வரனும்...

Mohamed Faaique said...

///" நீங்க என்னை எவ்ளோ கெட்டவன்னு
நினைக்கிறீங்களே.. நான் அவளோ
நல்லவன்..!

நீங்க என்னை எவ்ளோ நல்லவன்னு
நினைக்கிறீங்களே.. நான் அவளோ
கெட்டவன்..! " ( பஞ்ச் டயலாக்.. ) ///

உங்களை பத்தி நெனச்சிடு இருக்க நீங்க என்ன நமீதா’வா?

Mohamed Faaique said...

///
அது சரி, நம்பரைக் கண்டுபிடிச்சவுடனே கிசாவுக்குத் தெரியாம ரெண்டு மூணு தரம் அந்தப் பொண்ணுக்கு போன் பண்ணி பேசினீங்களே, அந்த விஷயம் உங்க மனைவிக்குத் தெரியுமா?
(ஏதோ நம்மால முடிஞ்சது, நாராயண....நாராயண!) ///

like..

//ஊருக்குள்ள 10,20 பிரெண்ட்ஸ் வச்சிருக்கவங்க எல்லாம் நல்ல இருக்காங்க
ஆனா உங்க ஒருத்தர வச்சிட்டு அவர் படற பாடு இருக்கே பாவம் ;)
(ஹையா நானும் பஞ்ச் டயலாக் சொல்லிட்டேன் :P.. )///
like

Mohamed Faaique said...

//நாங்கல்லாம் தூரத்துல இருந்து
பாக்க தான் அமைதியா இருப்போம்..
பக்கத்துல வந்தா..
டெரர்ரா இருப்போம்.. டெரர்ரா.. ////

நீங்க டெரர்’ன்னா? டெரர்(பாண்டியன்) என்னாவாரு? வெங்கட் ஆகிருவாரா?


///துப்பு., துப்பு.. சே.. துப்பறியும் சிங்கம்..!!//
நீங்க தலைப்புலயே உண்மைதான் சொல்லி இருக்கீங்க...
சிங்கம் எப்போதுப்பா துப்பு துலக்கிச்சு?

£€k#@ said...

//உங்களை பத்தி நெனச்சிடு இருக்க நீங்க என்ன நமீதா’வா?//
ha ha ha
rotfl
//
அது சரி, நம்பரைக் கண்டுபிடிச்சவுடனே கிசாவுக்குத் தெரியாம ரெண்டு மூணு தரம் அந்தப் பொண்ணுக்கு போன் பண்ணி பேசினீங்களே, //
idhu veraya??
//இது காமெடி பதிவு.,
ட்ராஜடி எதுக்கு..?!//
achachoo அடி கொஞ்சம் பலமோ? பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு பாஸ் உண்மைய ஒத்துகிட்டீங்களே ;)

//அவரு கூப்பிடவே இல்லையே!!! ஏன் தல ஓசி சோத்துக்கு அலையுரீங்க.....
//
அப்போவே ரமேஷ தெரிஞ்சிருக்குமோ??? :D

பெசொவி and faaique sema form la irukkanga pola
cant ctrl my laugh :D

வெங்கட் said...

@ சிவசங்கர்.,

// என்னமோ ஜேம்ஸ்பாண்டு மாதிரி
போஸ் எல்லாம் கொடுத்துட்டு,
சின்னப்புள்ளத் தனமா இல்ல?) //

சின்ன புள்ளங்க மட்டும் தான்
ஜேம்ஸ் பாண்டு மாதிரி போஸ்
குடுக்கணுமா அங்கிள்..?

வெங்கட் said...

@ அனானி.,

// எப்படி கண்டுபிடிச்சிங்க? ஒரு ஒரு நம்பரா
போன் பண்ணி எங்க வீட்டுக்கு கால்
பண்ணது நீங்கதான அப்படினு கேட்டிங்களா? //

குரலை வெச்சு கண்டுபிடிச்சோம்..
இதுக்காகவே எங்க டிபார்ட்மெண்ட்ல
ஸ்பெஷல் டிரைனிங் தர்றாங்க..

( நாங்க தான் அதுக்கு முன்னாடி
அரை மணி நேரம் அந்த பொண்ணுகிட்ட
போன்ல பேசியிருக்கோமே.. ஹி., ஹி., ஹி.. )

வெங்கட் said...

@ உமா.,

// செம காமெடி. அதுக்கப்புறம் என்ன
நடந்ததுன்னு ஒரு தனிப்பதிவாப்போடுங்க. //

ஆஹா..!! நமக்கு அடி விழ சான்ஸ்
இருக்குன்னு தெரிஞ்சா.. ஊரே அதை
பத்தி ஆவலா விசாரிக்குதே..!!

இதை இப்படியே விடக்கூடாது..
என்ன நடந்தாலும் சரி., கடைசி
வரைக்கும் வலிக்காத மாதிரியே
நடிக்கணும்..!!

வெங்கட் said...

@ உமா.,

// சொந்தமா டயலாக் யோசிக்க
மாட்டீங்களா? //

நான் திருக்குறளை எங்கயாச்சும்
மேற்கோள் காட்டினா அப்பவும்
வந்து..

" சொந்தமா குறள் யோசிக்க
மாட்டீங்களா? " கேப்பீங்களோ..!! # டவுட்டு

வெங்கட் said...

@ ராஜி.,

// கவலைய விடுங்க தம்பி அந்த
பொண்ணு இப்ப கிழவியா ஆகிட்டு
இருப்பாங்க. ஏன்னா இது வெங்கட்
காலேஜ் படிக்கும் போது நடந்த சம்பவம் //

கொஞ்சம் விட்டா வெங்கட்டும்,
நேருஜியும் ஒண்ணா படிச்சவங்க..

காந்திஜி இவரோட ரூம் மேட்னு
இஷ்டத்துக்கு ரீல் சுத்துவீங்க போல..

அந்த பொண்ணு.. என்னை விட
2 வயசு சின்னவங்க.. I mean அவங்களுக்கு
இப்ப 25 வயசுன்னு சொல்ல வந்தேன்..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அது சரி, நம்பரைக் கண்டுபிடிச்சவுடனே
கிசாவுக்குத் தெரியாம ரெண்டு மூணு தரம்
அந்தப் பொண்ணுக்கு போன் பண்ணி
பேசினீங்களே, //

ஹி., ஹி., ஹி...!!
பேசினது என்னவோ உண்மை தான்..
ஆனா ஏன் பேசினேன்.? என்ன பேசினேன்.

" இத பாரும்மா தங்கச்சி.. இப்படி
நீ கிச்சாவுக்கு அடிக்கடி போன்
பண்ணி பேசறது ரொம்ப தப்புன்னு.."
அட்வைஸ் பண்ண தான் போன்
பண்ணினேன்..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நாங்கல்லாம் LKG-ல இருந்து
UKG படிக்காமலே Straight-ஆ 1st Std
போனவங்களாக்கும்..!! //

// " நீ இப்ப வரைக்கும் அதுதாண்டா
படிச்சிருக்கே!" இது தூள் படத்துல
வர ஒரு வசனம் . அது ஞாபகம் வந்துச்சு,
எழுதினேன், ஹிஹி! //

அட கொடுமையே..

காலேஜ்ல 1st Class-ல நான் பாஸ்
பண்ணியிருக்கேன்னு சொன்னா..
நீங்க நான் ஒண்ணாங் கிளாஸ்
தான் படிச்சு இருக்கேன்னு
நினைச்சீட்டு இருக்கீங்களா..?!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// :O shabbaaaaaa mudiyala....
salem la வெயில் ஜாஸ்தினு
கேள்விப்பட்டேன் :P !! //

( கோகுலத்தில் ) சூரியன் இருக்குற
இடமாச்சே.. அப்படி தான் இருக்கும்..

// ஊருக்குள்ள 10,20 பிரெண்ட்ஸ்
வச்சிருக்கவங்க எல்லாம் நல்ல
இருக்காங்க. ஆனா உங்க ஒருத்தர
வச்சிட்டு அவர் படற பாடு
இருக்கே பாவம் ;) //

நண்பேன்டா..!
ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ Mohamed.,

// காலேஜ் படிச்சிட்டு இருந்தப்ப //

// ப்லாக் ஆரம்பிச்ச்சதுல இருந்து
நீங்களும் சொல்ரீங்க... யாரும்
நம்பின மாதிரி தெரியல... //

அப்ப சரி., நம்ம டிகிரி Certificate-ஐ
Scan பண்ணி., தன்னடக்கமா
ஒரு பதிவு போட்டுட வேண்டியது தான்..

// அவரு கூப்பிடவே இல்லையே!!!
ஏன் தல ஓசி சோத்துக்கு அலையுரீங்க. //

அன்னிக்கு மதியம் எங்க வீட்ல தான்
அவனுக்கு லஞ்ச்.. அதான் கணக்கை நேர்
பண்ணனும்ல..

வெங்கட் said...

@ Mohamed.,

// மறுபடி வந்துட்டாரே, பழைய சோத்தையும்
பிச்சைகாரனுக்கு போட்டாச்சே’னு ஒரு
மாதிரி பாத்தாங்க.. //

இந்த டகால்டி வேலையெல்லாம்
நம்மகிட்ட நடக்காது..

Lunch-க்கு போறது முடிவு பண்ணிட்டா..
நாங்கல்லாம் காலையிலயே கிளம்பி
Breakfast-லயே ஜாயின் பண்ணிப்போம்..!!

Mohamed Faaique said...

///
அப்ப சரி., நம்ம டிகிரி Certificate-ஐ
Scan பண்ணி., தன்னடக்கமா
ஒரு பதிவு போட்டுட வேண்டியது தான்..///

நீங்க power point’ல ஜாவா Program பண்ணின பார்ட்டி.. உங்க Certificate'லாம் நன்ப முடியாது.

///அன்னிக்கு மதியம் எங்க வீட்ல தான்
அவனுக்கு லஞ்ச்.. அதான் கணக்கை நேர்
பண்ணனும்ல..///

சிரிப்பு போலீஸோட கணக்க எப்போ நேர் பண்ண போரீங்க...

Manish said...

i st class

missed call(venkat)