டிஸ்கி : இந்த பதிவில் இருக்கறது எல்லாம்
கடந்த 5 ஆண்டுகளாக திரு.ராமதாஸ் ஐயாவின்
வரலாற்று சிறப்புமிக்க., தஞ்சாவூர் கல்வெட்டில்
பதித்து பாதுகாக்க வேண்டிய உளறல்கள்..
சே.. உரைகள்..!!
திமுக அரசின் செயல்பாடுகள் படுதோல்வி
அடைந்துவிட்டன. 'தேர்வு பெறவில்லை'
முதல்வர் உச்சநீதிமன்ற கண்டனத் துக்கு
ஆளான விவகாரம் அரசின் நிர்வாக சீர்கேடு
சம்பந்தப்பட்டதாகும். இது தமிழகத்திற்கும்,
தமிழர்களுக்கும் பெரும் அவமானமாகும்.
முதல்வர் கருணாநிதி இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில்
சினிமா பார்ப்பதிலும், சின்ன சின்ன சினிமா விழாக்களை
பலமணி நேரம் அமர்ந்து கண்டு களிப்பதிலும் பொழுதைக்
கழித்திருக்கிறார்.
கோட்டையில் கோப்புகள் ஒரு லட்சத்துக்கும் மேலாக
தேங்கிக் கிடப்பதாக என்னிடம் ஒரு அதிகாரி தெரிவித்தார்.
அமைச்சர்கள் சென்னையில் இருந்தாலும்,
கோட்டைக்கு செல்வதில்லை. கோட்டைக்கு
சென்றாலும் கோப்புகள் பார்ப்பதில்லை.
திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் குறிப்பாக
கருணாநிதியின் ஆட்சியில் மண்ணையும்,
நீர் உரிமையையும் இழந்து நிற்கிறோம்.
எந்த மாநிலத்தினுடனான பிரச்சனையிலும்
தமிழகத்தின் உரிமையை கருணாநிதி
நிலைநாட்டியது கிடையாது.
இத்தனை அமைச்சர்களை வைத்துக் கொண்டு
அரசு திறம்பட செயல்பட வில்லை.
ஆட்சியைத் தக்கவைக்க, காங்கிரசின் தயவு
வேண்டும் என்பதால், இலங்கைத் தமிழர்களுக்கு
கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்.
தி.மு.க-தான் எங்களது முதல் எதிரி.
இலவசங்களை காட்டி இனியும் திமுகவால்
மக்களை ஏமாற்ற முடியாது, எத்தனை கோடி
செலவு செய்தாலும் இந்த தேர்தலில் மக்கள்
தெளிவாக நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.
குடிசை மாற்று வாரியம் என்பது, குடிசைகளை
ஒழித்து, அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள்
கட்டுவதற்காக, 1967ம் ஆண்டு தி.மு.க., அரசால்
உருவாக்கப்பட்டது. ஆனால், சென்னை இன்னமும்
குடிசைகளின் நகரமாகத் தான் இருக்கிறது.
5 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலில்
திமுக கூட்டணி இப்போதே வெற்றி பெற்றதாக
அறிவிக்கலாம். அந்த அளவுக்கு முறைகேடுகள்
நடப்பது உறுதி
மக்கள் சக்தி முழுமையாக அதிமுக கூட்டணிக்கு
உள்ளதால் நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி
பெறுவோம். இது ஹேஸ்யமோ, ஜோதிடமோ அல்ல.
மக்களின் மனநிலையை அறிந்து சொல்கிறேன்.
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி,
40க்கு, 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும்.
தேர்தல் முடிந்ததும், தமிழக அரசியலிலும்,
தி.மு.க., ஆட்சியிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்
வாக்காளர்களுக்கு இலவச வேட்டி, சேலை
வினியோகிக்கும்போது தி.மு.க.,வினர் கையும்,
களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர். அப்படியும்
அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.
பஸ் கட்டணக் குறைப்பு என்பது, இதற்கு முன்
கேள்விப்பட்டிராதது. லோக்சபா தேர்தலை ஒட்டி
இந்த நடவடிக்கையை எடுத்துள்ள முதல்வர் கருணாநிதியும்,
போக்குவரத்து அமைச்சர் நேருவும் தங்கள் பதவியை
ராஜினாமா செய்ய வேண்டும்.
வரும் 2011ல் ஆட்சி அமைப்போம் என நாங்கள்
கோஷம் எழுப்பியதால், பயந்து, கடந்த லோக்சபா
தேர்தலில் தி.மு.க.,வும், - அ.தி.மு.க.,வும் ரகசிய கூட்டணி
அமைத்து, நாங்கள் போட்டியிட்ட ஏழு இடங்களிலும்
எங்களை தோற்கடித்தனர்.
தி.மு.க.வும் பல்வேறு கட்சிகளுடன் மாறி மாறி
கூட்டணி வைத்துள்ளது. அவர்களுக்கு பா.ம.க.வை
பற்றி விமர்சிக்க தகுதி இல்லை.
தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும்
மதிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜரையே
தரக்குறைவாக விமர்சித்தது திமுக-தான்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய
போது தமிழர் படை என்ற பெயரில் இங்குள்ள
கேரளத்து மக்களை அடித்துத் துரத்தியதும்,
திமுக செயற்குழுவுக்கு வருகை தந்த
நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனை அடித்துக்
காயப்படுத்தியது திமுக-வினர்தான்
Last.. But Not Least...!!
படி படி என்பவன் நான். ஆனால், உங்களைக்
குடி குடி என்று கெடுத்தது கருணாநிதிதான்
உஷ்..!! இதெல்லாம் போன மாசம்..
இப்புடு ச்சூடு.. இந்த மாசம்..
அந்த அந்தர் பல்டி..
தமிழகம் முழுவதும் தி.மு.க. அணிக்கு
ஆதரவாக அலை வீசத் தொடங்கியுள்ளது.
தி.மு.க. ஆட்சியின் சாதனைகள்
மிகச் சாதாரண மக்களால்கூட பாராட்டப்படுகின்றன.
கலைஞர் எத்தனையோ சாதனைகள் செய்துள்ளார்.
ஜெயலலிதா 2 முறை முதல் அமைச்சராக இருந்தார்.
ஒரு துரும்பை கிள்ளி போட்டதுண்டா?
அவரது ஆட்சியில் வேதனை தான் அதிகம்.
கருணாநிதி சொன்னதையும் செய்வார்.,
சொல்லாததையும் செய்வார். அவரை
6-வது முறையாக முதல்வராக்க
தி.மு.க கூட்டணியை ஆதரியுங்கள்..
( இன்னுமா இந்த ஊர் உங்களை நம்மள நம்புது..?! )
( கலைஞர் : அடுத்த தேர்தல்ல விஜயகாந்த் கூட
கூட்டணி வைக்க போறீங்களாமே..?! )
( உங்களை எல்லாம் பாத்தா..
எனக்கு பாவமா இருக்கு..!! )
ஆட்சி மாற்றம் எப்படி வரும்?
தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல.
அதி புத்திசாலிகள். அரசியல் விழிப்புணர்வு
பெற்றவர்கள் - ராமதாஸ்
.
. Tweet
27 Comments:
Sources :
1. http://thatstamil.oneindia.in/news/2009/03/28/tn-jaya-refers-ramdoss-as-brother.html
2. http://jaldi.walletwatch.com/carnaticmusic/news/fullstory.php?id=14673098&page=4
3. http://news.chennaionline.com/newsitem.aspx?NEWSID=53cfd099-e0d8-4ab4-868f-b056a34da57b&CATEGORYNAME=CHN
4. http://www.arasiyaltalk.com/2011/02/27/DMKPMKRelationshipInTheLastTwoYearsDMKPMKPreElection2011Stories.aspx
5. http://thatstamil.oneindia.in/news/2009/07/30/tn-convert-tasmac-wine-shops-as-grocery-shops-says.html
6. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=13287#
7. http://www.maalaimalar.com/2010/10/05112533/chennai-in-combat-drramdoss-f.html
8. http://jaldi.walletwatch.com/voi/fullstory.php?id=14699103
9. http://shockan.blogspot.com/2010/06/blog-post_6576.html
இதுக்கு எப்படி கொமண்ட்ஸ் போடலாம்...?
//தஞ்சாவூர் கல்வெட்டில்
பதித்து பாதுகாக்க வேண்டிய உளறல்கள்..//
வருங்கால சந்ததி மண்டையப் பிச்சுக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களா?!! :-))
"என்னைக் கடலில் போட்டாலும் கட்டுமரமாகத் தான் பயன்படுவேன்" என்று சொல்லிவிட்டு தோல்வி அடையும்போது "மறத் தமிழன் மரத் தமிழனாகிவிட்டானே" என்று அங்கலாய்க்கும் தலைவருடன் கூட்டு சேர்ந்தால் இப்படிதான் ஆகும்!
அரசியல் வாதிகளுக்கு எத்தனை நாக்குகள். நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர பகைவனும் இல்லை. அப்படி சொல்லி சொல்லியே பொதுமக்களின் தலையில் மிள்கா.
மகனுக்கு ஒரு பதவி வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று அல்லும் பகலும் வெட்கம், மானம், ரோசம் எதுவும் பார்க்காமல் ஒரு பொறுப்பான தந்தையாக அயராது பாடுபட்டு வரும் அய்யா அவர்களை பாராட்டாமல் இவ்வாறு எழுதி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
பதிவுலகில் venkat arasiyalil raamdaas...
அட நம்மளுக்கா இன்னைக்கு வடை?????
வீட்டில் உள்ள பழைய சாப்பாட்டெல்லாம் வீசிராதீங்க... நாளை விருந்தாளி (சிரிப்பு போலீஸ்) வாராருள்ள...
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா..
தேர்தல் களத்தில் வடிவேலையும்,குஷ்புவையும்,சிங்கமுத்துவையும்,விஜயகாந்தையும் முன்னிறுத்தி இவர்களது அரசியல் அறிக்கைகளையெல்லாம் மக்கள் மறந்து போகும் படி செய்து விடுகிறார்கள்.
இணையத்தில் பேசப்படுவது பொதுமக்களிடமும் சேர்வதில் இருக்கிறது தமிழகத்தின் மாற்றமும் ராமதாஸ் போன்றவர்களின் முகத்திரை கிழிப்பதும்.
கூர்ந்த் கவனித்து திரட்டிய பொன்மொழிகளுக்கும் பகிர்வுக்கும் நன்றி.
//அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா..//
ஆட்டோ வரும்,அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா மனோபாவங்களை தவிருங்கள்.இது மாதிரி பிம்பங்களே இவர்களுக்கு மறைமுக்மாக பாதுகாப்பும் ஆகி விடுகிறது.
//தி.மு.க-தான் எங்களது முதல் எதிரி.//
//உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்குது//
இரண்டும் ஹைலைட்.
@ Mohamed.,
// இதுக்கு எப்படி கொமண்ட்ஸ் போடலாம்? //
நீங்க எப்படி கமெண்ட்ஸ் போடறதுன்னு
யோசிங்க..
இவரை எதால போடலாம்னு
நாங்க யோசிக்கிறோம்..
@ மிடில்கிளாஸ் மாதவி.,
// வருங்கால சந்ததி மண்டையப்
பிச்சுக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்களா?!! :-)) //
இவரு பேசறதை கேட்டுட்டு இவங்க
கட்சிக்காரங்களே இப்ப அப்படிதான்
இருக்காங்க...
@ பெ.சொ.வி.,
// "மறத் தமிழன் மரத் தமிழனாகிவிட்டானே"
என்று அங்கலாய்க்கும் தலைவருடன் கூட்டு
சேர்ந்தால் இப்படிதான் ஆகும்! //
ஒருவேளை இவரு கூட கூட்டு
சேர்ந்ததால தான் அவரு அப்படி
ஆயிருப்பாரோ..!!
@ லக்ஷ்மி மேடம்.,
// நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர பகைவனும்
இல்லை. அப்படி சொல்லி சொல்லியே
பொதுமக்களின் தலையில் மிள்கா. //
இனிமே நம்ம தலையில இப்படி
மிளகா அரைச்சா.. அதை எடுத்து
அவங்க கண்ணுலயே தேய்க்கணும்..
அதுக்கு நம்ம மக்கள்கிட்ட விழிப்புணர்வு
வரணும்..!!
@ பன்னிகுட்டி.,
// மகனுக்கு ஒரு பதவி வாங்கிக் கொடுத்துவிட
வேண்டும் என்று அல்லும் பகலும் வெட்கம்,
மானம், ரோசம் எதுவும் பார்க்காமல் ஒரு
பொறுப்பான தந்தையாக அயராது பாடுபட்டு
வரும் அய்யா அவர்களை பாராட்டாமல் இவ்வாறு
எழுதி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்! //
ஹி., ஹி., ஹி...!!
இந்த பதிவுல இருக்கறதை எல்லாம்
எழுதினது சாட்சாத் வெட்கம், மானம்,
ரோசம் எதுவும் இல்லாத அந்த
பொறுப்பான தந்தை தான்..
( எல்லாம் அவரு பேசினது தானுங்க.. )
அரசியல் வியாதிங்க...
அட கொஞ்சம் பொறுங்க ஸார்!
மே 13க்கு அப்புறம் எந்தக் கட்சிக்கும்
பெரும்பாண்ம கிடைக்கலைன்னா
ஐயாவோட ஜால்ரா எதிர் திசை மாறி ஒலிக்கவும் வாய்ப்பிருக்கே
பல்டி அடிப்பதில் சர்க்கஸ்காரர்களை மிஞ்சி விடுவார் போல...
"உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.
இச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.
இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.
மேலும் படிக்க...
ஒரு தரம்... ரெண்டு தரம்...!
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html
அந்த கொடுமைய இங்கேயும் பாருங்க... வெங்கட்....
தைலாபுரம்..கோபாலபுரம்..சந்தர்ப்பவாத கூட்டணி கிச்சு கிச்சு
http://edakumadaku.blogspot.com/2011/02/blog-post.html
அடேங்கப்பா, எப்படிலாம் புரட்டிப்புரட்டி பேசிருக்காரு!
வெங்கட் : இந்த மாதிரி எங்க அய்யா பற்றி எழுதினால் , உங்கள் வீட்டிற்கு எங்கள் அண்ணண் "கா. வெ. குரு" வர வேண்டி இருக்கும்.
//உங்கள் வீட்டிற்கு எங்கள் அண்ணண் "கா. வெ. குரு" வர வேண்டி இருக்கும்.//
ஓவரா பேசினா உங்க வீட்டுக்கு VKS தலைவி அனுவையும்,ரமேஷையும் அனுப்பிடுவோம்
டோட்டல் ஏரியாவே காலி ஆய்டும் ஜாக்கிரதை ;)
சில சமயம் VKS கூட உதவுதுபா :)
ha ha venkat
300th follower aiten :)
so periya treat kuduthudunga ;)!!
[idhayum pending la vitradheenga :(
..]
and adv b'day wishes for u :D!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Post a Comment