நேற்றைய தினத்தந்தி செய்தி :
Dr.ராமதாஸ் அவர்களின் பேட்டி..
வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க
தனித்து போட்டியிடாது. கூட்டணி
அமைத்து தான் போட்டியிடும்..
( ஒருவேளை அந்த கூட்டணி தோத்து
போயிட்டா.. தேர்தலுக்கு அப்புறம் ஜெயிச்ச
கூட்டணில போயி ஐக்கியமாயிடுவோம்..
அதையும் சேர்த்து சொல்லுங்க.. )
நீங்கள் எத்தகைய கூட்டணி அமைய
வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ
அதே போன்ற கூட்டணி அமையும்.
( சரத் - பா.ம.க..?! ., கார்த்திக் - பா.ம.க..?!.,
டி.ஆர் - பா.ம.க..?! )
பா.ம.க.விற்கு 45 தொகுதிகளை
ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று
கோருவோம்..
( ஆட்சி அமைக்க 45 சீட் போதுங்களா..?
2011-ல பா.ம.க ஆட்சி அமைக்கும்னு
முன்னே சொல்லிட்டு இருந்தீங்களே.
ஹி., ஹி., ஹி..!! )
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம்
10 தொகுதிகள் உள்ளன.. அதில் குறைந்தது
3 தொகுதிகளையாவது பா.ம.க.விற்கு
ஒதுக்கும்படி கேட்போம்..
( ஏன்..? அங்கிட்டு தான் மெடிக்கல் காலேஜ்
கட்ட இடம் கரெக்டா இருக்கா..?! )
பா.ம.க.வினர் திண்ணை பிரச்சாரம்
செய்து மக்களிடம் ஆதரவு திரட்ட
வேண்டும்..
( வீட்டுக்குள்ள எல்லாம் விட
மாட்டேங்குறாங்களோ.?! )
இந்த தேர்தலில் நாம் தனித்து நின்றே
வெற்றி பெற முடியும் என்றாலும்..
( One Minute..!! நான் சிரிச்சிக்கிறேன்..
என்னால சிரிப்பை அடக்க முடியல..
ஹா., ஹா., ஹா...!! ம்ம்.. இப்ப Continue... )
கூட்டணி அமைத்தே போட்டியிட
முடிவு செய்திருக்கிறோம்..
( அப்படியா..? அது சரி.. உங்களை கூட
சேத்துக்க யாராவது முடிவு பண்ணி
இருக்காங்களா..? )
பிரசாரத்தின் போது கூட்டணிக் கட்சியின்
கொள்கைகளையும்.,
( என்னாது " கொள்ளைகளா..?? "
ஓ.. " கொள்கைகளா..? " )
நமது கட்சியின் கொள்கைகளையும்
சேர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும்..
( ம்ம்.. விளங்கிடுச்சு..!! " அன்புமணிக்கு
M.P பதவி குடுத்தா யார்கூட வேணா
கூட்டணி சேரத் தயார்." அதானே..? ரைட்டு..!! )
அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை
அழைத்து வந்து கட்சியில் சேர்க்க வேண்டும்..
( அழைச்சிட்டு வந்தா.? இழுத்துட்டு வந்தா..?
தெளிவா சொல்லுங்க.. இப்பல்லாம் பசங்க
ரொம்ப விவரமா இருக்கானுங்க..!! )
அது சரி.. இம்புட்டு நேரம் கூட்டணி கட்சி.,
கூட்டணி கட்சின்னு சொன்னீங்களே..
அது இவிங்களா.? இல்ல அவிங்களா..??
இன்றைய தினத்தந்தி செய்தி :
" தி.மு.க கூட்டணியில் பா.ம.க " - கருணாநிதி
" கூட்டணி பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை "
- ராமதாஸ்.
என்னங்க நீங்க..? இப்படி Slow-ஆ இருக்கீங்க..?
குடும்பத்தோட உக்காந்து நல்லா
எண்ணி எண்ணி பாத்து சீக்கிரம்
ஒரு முடிவுக்கு வாங்க..
பின்ன..,
இந்த Election-ல எந்த கட்சிக்காரன் கூட
அடிச்சிக்கிட்டு ஆடணும்னு தொண்டர்களுக்கு
தெரியணும்ல..!!
டிஸ்கி 1 : பா.ம.க.வின் கூட்டணி சாதனைகள்
( இதுவரை... )
1998 - பாராளுமன்ற தேர்தல் - அ.தி.மு.க
1999 - பாராளுமன்ற தேர்தல் - தி.மு.க
2001 - சட்டசபை தேர்தல் - அ.தி.மு.க
2004 - பாராளுமன்ற தேர்தல் - தி.மு.க
2006 - சட்டசபை தேர்தல் - தி.மு.க
2009 - பாராளுமன்ற தேர்தல் - அ.தி.மு.க
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!!
டிஸ்கி 2 : இந்த பதிவை என்னை எழுத
தூண்டி., ஊக்கமும்., ஆதரவும் அளித்த
VKS சங்கத்துக்கு நன்றி..!! நன்றி..!! நன்றி..!!
.
.