" Think of names Starting P,B,D,T..
and suggest me..! "
நேத்து என் ப்ரெண்ட் ஆனந்த்கிட்ட
இருந்து வந்திருந்தது இந்த மெசேஜ்..
அதை பாத்ததுக்கு அப்புறம் தான்
போன வாரம் அவனுக்கு குழந்தை
பொறந்த மேட்டரே ஞாபகம் வந்தது...
பொதுவாவே என் ப்ரெண்ட்ஸ்க்கு
குழந்தை பொறந்தா என்னைதான்
பேரு செலக்ட் பண்ணி தர சொல்லி
கேப்பாங்க..
நானும்... அந்த எழுத்துக்கு தகுந்த
மாதிரி நியூமராலஜி, பயலாஜி,
ஹிஸ்டரி, ஜியாகரப்பி எல்லாம்
பாத்து நல்ல பெயரா சொல்லுவேன்..
( அப்புறம் அவங்க " சீனிவாச பெருமாள்னு "
வெச்சிடுவங்க.. அது வேற விஷயம்.. )
சரி இப்ப மேட்டர்க்கு வருவோம்...
நேத்து நைட்டு 9 மணி..
" பிரசாந்த்...!! , பிரதீப்.. தனுஷ்... "
நான் பல பெயரை பல மாடுலேஷன்ல
சொல்லி பாத்துட்டு இருந்தேன்..
அப்ப என் மனைவி நிர்மலா...
" இப்ப எதுக்கு இப்படி ஏலம் விட்டுட்டு
இருக்கீங்க..?! "
" ஆனந்த் குழந்தைக்கு பெயர் செலக்ட்
பண்ணிட்டு இருக்கேன்..!!! "
" ஆனந்த் அண்ணாவுக்கு குழந்தை
பொறந்துடுச்சா..? சொல்லவே இல்ல..!! "
" அதான் சொன்னேனே இப்ப..!! "
" உங்கள... சரி.. என்ன எழுத்துன்னு
சொல்லுங்க.. நானும் டிரை பண்றேன்...! "
" P, B, D, T "
" பரத், தீபக், பிரசன்னா..... "
இப்படி நைட்டு புல்லா 2 மணி நேரம்
நெட்ல தேடி, அதுல இருந்து சூப்பரா
20 பெயரை மட்டும் செலக்ட் பண்ணி
ஆனந்துக்கு மெயில் பண்ணிட்டு தூங்க
போயிட்டேன்..
காலையில 6.30 மணிக்கு என் மொபைல்
ரிங் ஆச்சு...
யார்ரா அது நடுசாமத்துல போன்
பண்றானுங்கனு கடுப்புல எடுத்து பாத்தா...
நம்ம ஆனந்து..
( அட பாராட்டுறதுக்கு நேரம் காலம்
இல்லையாடா... பாசக்கார பயடா...! )
" சொல்றா ஆனந்த்...!! "
" என்னடா இது பேரு.. பிரசாந்த், பரத்,
தீபக்னு.... "
" ஏன்டா இந்த பேருக்கெல்லாம் என்ன
குறைச்சலு..? "
" ஏய் லூசு.. இத எப்படிடா பொம்பள புள்ளக்கு
வெக்கிறது..?!! "
" என்னாது பொம்பள புள்ளயா..?!!!
அதை நீ சொல்லவே இல்ல....!!!
அவ்வ்வ்வ்வ்..!! "
.
.