அமாவாசை நைட்டு....
கும் இருட்டு....
" க்ரீச்....! "
( கேட் திறக்குற சத்தம்... )
" சொத்...! சொத்....! "
காலையில எந்திரிச்சி பாத்தா...
எங்க ஆபீஸ் ஜன்னல் கண்ணாடி
மேல யாரோ ரெண்டு முட்டையை
வீசி எறிஞ்சிட்டு போயிருக்காங்க..
அதை பாத்ததும் நானும் முதல்ல..
" ப்ளாக்ல நம்ம பாப்புலாரிட்டியை
தடுக்க யாரோ பண்ணுன வேலையா
இருக்குமோன்னு " நினைச்சேன்...
ஆனா அப்புறம் தான் தெரிஞ்து..
பிஸினஸ் பொறாமையில எங்களுக்கு
ரொம்ப வேண்டப்பட்ட " கருப்பு " ஆடுகள்
செஞ்ச வேலையிதுன்னு..
இதை எப்படி டீல் பண்றதுன்னு
தெரியாம எங்கப்பா கொஞ்சம்
குழம்பி போயிருந்தாரு...
" Don't Worry Daddy.. இதை டீல் பண்ண
என்கிட்ட சரியான ஒரு ஆள் இருக்கு..
நான் பாத்துக்கறேன்னு " சொல்லிட்டு
மங்குனிக்கு போனை போட்டேன்..
என்ன அப்படி பார்க்கறீங்க..?
நம்ம மங்குனியே தான்..
இந்த மாதிரி விஷயத்துல அவர்
ஒரு எக்ஸ்பர்ட்.
( ஒரு தடவை இவரை நேர்ல பாத்தப்ப
குட்டிசாத்தானே கதறி கதறி அழுததாம்ல..!! )
மங்குனிகிட்ட விஷயத்தை சொன்னேன்..
அவரும் நான் என்ன பண்ணனும்னு
சொன்னாரு...
அதுப்படி.. இன்னிக்கு அதை நானும்
கரெக்ட்டா பண்ணிட்டேன்...
.
.
.
.
.
.
( தயவு செய்து அவித்த முட்டை வைக்கவும்..! )
மங்குவின் மில்லியன் டாலர் ஐடியா :
" யோவ்.. கண்ட கண்ட இடத்துல
முட்டையை உடைச்சா Waste-ஆ
போயிடும்யா.. நீயே உன் ஆபீஸ்ல
தனியா ஒரு இடம் ஒதுக்கி Board
போட்டு வெச்சிடு... "
.